Category: இன்றைய சிந்தனை

அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்!

இந்த குருக்களின் ஆண்டில் குருக்களுக்காக மட்டுமல்ல, இறை அழைத்தலுக்காகவும் மன்றாட நாம் கடமைப்பட்டிருக்கிறோம். திருச்சபை ஆற்ற வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. திருத்தந்தை இரண்டாம் ஜான்பால் தமது மீட்பரி;ன் பணி என்னும் சுற்றுமடலில் மூன்று விதமான நற்செய்தி அறிவிப்புப் பணிகளைப் பற்றிக் குறிப்பிடுகிறார். 1.நற்செய்தி அறிவிக்கப்படாத இடங்களில் நற்செய்தி புதிதாக அறிவித்தல். 2. ஏற்கனவே நற்செய்தி அறிவிக்கப்பட்ட விசுவாசத்தைப் பெற்ற மக்கள் அந்த விசுவாசத்தை இழந்து வாழும் இடங்களில் மறுநற்செய்தி அறிவித்தல். ஐரோப்பிய நாடுகள் பலவும் இந்த நிலையில்தான் இன்று இருக்கின்றன. ஒருகாலத்தில் ஆசிய நாடுகளுக்கு மறைரப்பாளர்களை அனுப்பிய ஸ்பெயின், பிரான்ஸ் போன்ற நாடுகளுக்கு இன்று புதிதாக நற்செய்தி அறிவிக்க வேண்டிய தேவை உள்ளது. பிற நாடுகளிலும் விசுவாசத்தை இழந்துகொண்டிருக்கிற மக்கள் ஏராளம் இருக்கின்றார்கள். அவர்களை வென்றெடுக்க வேண்டும். 3. கிறித்தவ விசுவாசத்தைக் கடைப்பிடித்து வாழ்வோரை உறுதிப்படுத்தும் மேய்ப்புப் பணி. இன்றைய நுகர்வுக் கலாசார வெறியும், பெந்தகோஸ்து சபைகளும் விரிக்கின்ற வலையில்...

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

மரியாள் தன் தாய் அன்னம்மாளின் வயிற்றில் இருக்கிறபோதே, கடவுளின் அருளால் பாவ மாசின்றி பாதுகாக்கப்பட்டிருந்தாள் என்பதுதான், இந்த விழாவின் மையப்பொருளாகும். இது மரியாளின் மாசற்ற உற்பவத்தின் உன்னதமான நிகழ்வை கூருகின்றது. இதற்கு விவிலிய ஆதாரம் ஏதும் இல்லை. இது ஒரு மறையுண்மை. இதை கி.பி 1854 ம் ஆண்டு, டிசம்பர் 08 ம் நாள் திருத்தந்தை ஒன்பதாம் பயஸ் ”மரியாள் அமல உற்பவ” என்ற அப்போஸ்தலிக்க மடலிலே பிரகடனப்படுத்தியுள்ளார். இது பெரும்பாலும் பாரம்பரியத்தையும், இறையியல் மற்றும் திருவழிபாட்டு மரபு அடிப்படையில் ஏற்படுத்தப்பட்டது ஆகும். மரியாள் கடவுளின் மகனைக் கருத்தாங்கியதால், மரியாளின் பிறப்புநிலையைப்பற்றி பல விவாதங்கள் எழுந்தன. இந்த கருத்து பரவத்தொடங்கியபோது, பல இறையியலாலர்கள் இதனை கடுமையாக எதிர்த்தனர். இறுதியில் இச்சிக்கலுக்கு கீழ்க்காணும் விளக்கம் மூலமாக தீர்வு காணப்பட்டது. டன்ஸ் ஸ்காட்டஸ் என்பவர் 1300 ம் ஆண்டு, கடவுளின் அருள் இரண்டுவிதங்களில் செயல்படுகிறது என ஒரு விளக்கம் கொடுத்தார். கடவுளின் காக்கும் அருள்...

பாறைமீது கட்டப்பட்ட வீடு

ஆண்டவரே, ஆண்டவரே, என்று சொல்பவர், செபிப்பவர் விண்ணரசு சேரமாட்டார். மாறாக, தந்தையின் திருவுளத்தின்படி செயல்படுபவரே செல்வார் என்னும் ஆண்டவரின் மொழிகள் இறை நம்பிக்கையுடைய அனைவருக்கும் அறைகூவல் விடுக்கும் வசனம் இது. நமது இறைப்பற்று சொல்லில் முடங்கி விடாமல், செயல்களில் வெளிப்பட வேண்டும். செப ஆர்வலர்களுக்கும் வெல்விளியாக இச்சொல் அமைந்துள்ளது. செபக்குழுக்களில் சேர்ந்து செபிக்கிறவர்கள் தங்கள் வாழ்வு தந்தையின் விருப்பப்படி அமைய முயற்சிக்க வேண்டும். இல்லாவிட்டால், செபம் பயனற்றதாக மாறிவிடும். நமது இறைப் பற்றும் பாறைமீது கட்டப்பட்ட வீடு போல அமையட்டும். மன்றாடுவோம்: அழைத்;தலின் நாயகனே இயேசுவே, உம்மைப் போற்றுகிறோம். புனித சவேரியாரை மறைப்பணியாளராக அழைத்து, அவர் வழியாக நீர் எங்களுக்குத் தந்த விசுவாசம் என்னும் கொடைக்காக நன்றி கூறுகிறோம். அவரது எடுத்துக்காட்டாலும், பரிந்துரையாலும், எங்கள் வாழ்வும் தந்தையின் திருவுளத்திற்கேற்ப அமைவதாக! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென். — அருள்தந்தை குமார்ராஜா

வாழ்வை வளமாக்கும் இயேசு

இந்த இயேசு நோயையும் பசியையும் போக்கி மனித வாழ்வை வளமாக்கும் தெய்வம். இயேசு இருக்கும் மலைக்குச் செல்வோம். மக்கள் கூட்டத்தோடு ஒருவராக நாமும் செல்வோம். இயேசுவைத்தேடி மலைக்குச் சென்ற பெருங்கூட்டத்தில் பல்வேறு நோயுற்றோரும் இருந்தனர். இயேசுவோடு மணிக்கணக்காக நாள்கணக்காக தங்கியுள்ளனர். அவரோடு தங்கி, அவர் செய்த அருஞ்செயல்களைக் கண்டு வியந்து கடவுளைப் போற்றிப் புகழ்ந்துள்ளனர். இறைவனோடு இருந்து இறைவனை போற்றிப் புகழ்ந்து செபிக்கும் மக்கள் மீது பரிவுள்ளவர் நம் இறைவன். அவர்கள் பசியாலோ நோயாலோ அவதிப்படுவதை அவரால் தாங்க முடியாது. தன்னைத் தேடி வந்தோரைத் தவிக்க விடமாட்டார். வாழ்க்கைப் பயணத்தில் வழியில் தளர்ச்சியடைந்துவிட இந்த இயேசு விரும்புவதில்லை. இடம் பாலை நிலமாயினும், நேரம் பொழுது போன நேரமாயினும் தன் மக்களைத் தவிக்க விடாதவர் நம் தெய்வம். இந்த இறைவன் இயேசுவைத் தேடி தொடர்ந்து வரவேண்டும். அவரோடு தங்க வேண்டும். நாளும் பொழுதும் பாராது அவரோடு தங்க வேண்டும். எல்லா சூழலிலும் இறைவனைப்...

கடவுளிடம் நாம் கொண்டுள்ள நம்பிக்கை

இயேசுவிடம் உதவி கேட்டு வருகிறவர்கள் பலவிதமான பதில்களைத் தருகிறார்கள். இயேசுவும் அவர்களுக்கு பல கேள்விகளைக் கொடுக்கிறார். எல்லாவற்றிலும் அவர்களது நம்பிக்கையை அடிப்படையாக வைத்து, இயேசு அவர்களுக்கு உதவி செய்கிறார். இயேசுவின் இந்த கேள்விகளும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. வேறு வேறாகவே இருக்கிறது. உதாரணமாக, கானானியப்பெண் தன்னுடைய மகளுக்காகப் பரிந்து பேசக்கூடிய நிகழ்ச்சியில் இயேசு முதலில் மறுப்பதற்கான பதில்களையும், மழுப்பலான பதில்களையும் தருகிறார். இறுதியில் அவளது நம்பிக்கை வெற்றிபெறுகிறது. அவளது தேவையை இயேசு நிறைவேற்றுகிறார். இன்றைய நற்செய்தியில், நூற்றுவர் தலைவர் உதவி கேட்ட உடனே, தான் அவரோடு நேரிலேயே வருவதாக வாக்களிக்கிறார். அவரது ஒரு வார்த்தை தன்னுடைய மகனைக் குணப்படுத்தும் என்கிற அந்த நூற்றுவர் தலைவனின் விசுவாசத்தில், இயேசு ஆச்சரியம் கொள்கிறார். அவனுடைய தேவையை நிறைவேற்றுகிறார். இரண்டுமே வெவ்வேறு விதமான நிகழ்வுகள், கோணங்கள். ஆனால், இரண்டிலும், கடவுளின் ஆசீரைப் பெற்றுக்கொடுத்தது அவர்களின் உண்மையான நம்பிக்கை. கடவுளிடம் நாம் செல்ல, அவரிடம் உதவி கேட்க...