Category: இன்றைய சிந்தனை

அன்னை மரியாளின் பிறப்பு விழா – தாயின் அன்பு

இன்றைக்கு நம் அனைவருக்குமே ஒரு மகிழ்ச்சியான நாள். மீண்டும், மீண்டும் கடவுளுக்கு நன்றி செலுத்த வேண்டிய நாள். நம் தாய் அன்னை கன்னிமரியாளின் பிறந்த நாள். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற கத்தோலிக்கத் திருச்சபை அந்த தாயின் பிறந்தநாள் விழாவைக் கொண்டாடுவதில் அகமகிழ்கிறது. எத்தனை சோதனைகள், எத்தனை தப்பறைக்கொள்கைகள், எத்தனை எதிர்ப்புக்கள் – இவற்றிற்கு நடுவில், நிச்சயம் அன்னை கன்னிமரியாள் மீது வைத்திருக்கிற மக்களின் பக்தி, நம்மை மகிழ்ச்சியடைய வைக்கிறது. அகில உலக திருச்சபையின் தூணாக இருந்து, தனது செபத்தாலும், பரிந்துரையாலும் ஒவ்வொருநாளும் அன்னை கன்னிமரியாள் நம்மைச் சிறப்பாக வழிநடத்திக் கொண்டிருக்கிறார். இன்றைக்கு உலகமெங்கிலும் இருக்கிற ஆலயங்களில் அன்னை கன்னிமரியாளுக்குத்தான் அதிகம் என்கிற அளவுக்கு, அன்னை மரியாளின் மீது மக்கள் அளவுகடந்த பாசம் வைத்திருக்கின்றனர். இதற்கு அடித்தளமாக இருப்பது, அன்னை நம்மீது, தன் பிள்ளைகள் மீது வைத்திருக்கிற, நிரந்தரமான அன்பு. ஒரு தாயின் அன்பை நாம் ஒரு குறுகிய எல்கைக்குள் அடக்கிவிட முடியாது....

எது உண்மை ஞானம் ?

சாக்ரடீஸ், பிளேட்டோ, அரிஸ்டாடில் வழி வந்த கிரேக்கர்கள் ஞானத்துக்கும், அறிவாற்றலுக்கும் பெரிதும் முக்கியத்துவம் அளித்தார்கள். பெரிய சிந்தனையாளர்கள், ஞானிகள் அவர்கள் மத்தியிலே வாழ்ந்தனர். ஆனால், “இவ்வுலக ஞானம் கடவுள் முன் மடமையாய் உள்ளது” என்கிறார் பவுல். எனவே, எது உண்மை ஞானம் ? என்னும் கேள்வியை எழுப்பி, விடையும் தருகிறார். “யாரும் தம்மைத் தாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டாம்” என்கிறார். இவ்வுலக படிப்போ, பட்டங்களோ, செல்வமோரூhநடடip; நிறை வாழ்வை, இறையன்பைத் தர முடியாது. கிறிஸ்து மட்டுமே நமது ஞானம், நமது செல்வம், நமது பெருமை. அவரது கீழ்ப்படிதல் அனைவருக்கும் பாடம். எனவே, மனிதரைக் குறித்து, நமது சாதனைகளைக் குறித்து நாம் யாரும் பெருமை பாராட்ட வேண்டாம். இயேசுவைக் குறித்து, அவரது தியாகத்தைக் குறித்து பெருமை கொள்வோம். அதுவே உண்மையான ஞானம். மன்றாடுவோம்: ஞானத்தின் ஊற்றான இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் வாழ்க்கையில் பெற்றுக்கொண்ட எதுவும் எங்களுக்குச் சொந்தமல்ல. அனைத்தும் உமக்கே சொந்தம் என்னும்...

மற்றவர்களுக்காக வாழுவோம்

இயேசு தொழுகைக்கூடத்தில் போதனையை முடித்துவிட்டு, பேதுருவின் இல்லம் வருகிறார். வழிபாடு முடித்துவிட்டு வருகிற போதகருக்குத்தான் தெரியும், எவ்வளவுக்கு தனது ஆற்றலை, சக்தியை அந்த வழிபாட்டுக்குத்தான் கொடுத்தோம் என்று. வழிபாடு முடிந்து வருகிற எந்த ஒரு போதகரும், ஓய்வாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்களே ஒழிய, ஓயாது தங்களது உடலை வருத்திக்கொள்ள விரும்ப மாட்டார்கள். நிச்சயம் அந்த ஓய்வுக்கு அவர்கள் தகுதியானவர்கள்தான். ஆனால், இயேசு தனக்கு ஓய்வு வேண்டும் என்பது தெரிந்தும், அங்கே மனிதத்தேவை இருக்கிறபோது, தனது ஓய்வை முன்னிறுத்தாமல், தேவையை நிறைவேற்ற வருகிறார். பேதுருவின் மாமியார் உடல் நலமடைந்த உடனே, அவர்களுக்கு பணிவிடை செய்ய எழுந்து வந்ததாக நற்செய்தியாளர் எழுதுகிறார். இப்போதுதான் குணமடைந்திருக்கிறது, எனவே இன்னும் நன்றாக ஓய்வு எடுப்போம் என்றில்லாமல், வந்திருக்கிறவர்களை நல்ல முறையில் பேணிக்காக்க மும்முரமாய் இருக்கிறார் அவர். கடவுள் நமக்கு கொடுத்திருக்கிற உடல் ஆரோக்கியத்தை, ஆற்றலை தேவையில் உள்ளவர்களுக்கு பயன்படுத்த எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை,...

இயேசுவின் கடின உழைப்பு

இயேசு மக்களுக்கு ஓய்வுநாட்களில் கற்பித்ததாக, நற்செய்தியாளர் கூறுகிறார். ஓய்வுநாள் என்பது கடவுளுக்கான நாள். இஸ்ரயேல் மக்கள், இறைவனிடமிருந்து தாங்கள் பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு நன்றி செலுத்தும் நாள். இறைவனையே நாள் முழுவதும் தியானிக்க, அவரிடத்தில் செபிக்க ஏற்புடைய நாள். போதகர்களின் மறையுரைகளை, கருத்தூன்றிக் கேட்கும் நாள். ஆக, இயேசு மக்கள் மத்தியில் சிறந்த போதகராக வாழ்ந்ததை, மக்களால் ஏற்றுக்கொண்டதை, இது உணர்த்துகிறது. கற்பித்தல் என்பது எளிதானல்ல. எல்லோராலும் நிச்சயம் கற்பிக்க முடியாது. அது ஒரு கலை மட்டுமல்ல. அதில் கடின உழைப்பும் அடங்கியிருக்கிறது. இயேசு ஓய்வுநாட்களில் மக்களுக்கு கற்பித்தார் என்றால், எந்த அளவுக்கு அவர் தன்னையே தயாரித்திருக்க வேண்டும். இறை அறிவில் தன்னையே வளர்த்தெடுத்திருக்க வேண்டும். செய்கிற பணி எதுவானாலும், கடின உழைப்பு மிக, மிக முக்கியம். அதற்கு இயேசு சிறந்த எடுத்துக்காட்டு. மக்களுக்கு புரிகிற மொழியில் சொல்வதும், மக்களை மீண்டும் மீண்டும் கேட்கத்தூண்டுவதும், நமது தயாரிப்பிலும், கடின உழைப்பிலும் தான் இருக்கிறது....

மன உறுதிக்காக பாராட்டு

இனி வருகின்ற சில வாரங்களில் நாம் புதிய ஏற்பாட்டிலிருந்து, புனித பவுலடியாரின் திருமடல்களிலிருந்து முதல் வாசகத்திற்கு செவி மடுக்க இருக்கிறோம். முதல் மூன்று நாள்களும் தெசலோனிக்கருக்கு எழுதப்பட்ட இரண்டாம் திருமுகத்திலிருந்து நாம் வாசிக்க இருக்கிறோம். இத்திருமடல் கிறிஸ்துவின் இரண்டாம் வருகை பற்றிய உண்மைகளைத் தெளிவுபடுத்தும் ஒரு திருமடல். இன்றைய வாசகத்தில் பவுலடியார் தெசலோனிக்க நகர இறைமக்களுக்குப் பாராட்டும், அவர்களுக்காக கடவுளுக்கு நன்றியும் செலுத்துகிறார். அவர்களின் இறைநம்பிக்கை ஓங்கி வளர்வதற்காகவும், அவர்கள் ஒருவர் ஒருவர்மீது கொள்ளும் அன்பு பெருகி வழிவது குறித்தும் அவர் பெருமிதம் கொள்கிறார். “ உங்கள் துன்பங்களுக்கிடையே நீங்கள் காட்டிய சகிப்புத் தன்மையையும், இன்னல்களுக்கிடையே நீங்கள் கொண்டிருந்த மனவுறுதியையும், நம்பிக்கையையும் முன்னிட்டுப் பெருமைப்படுகிறோம்” என்று எழுதுகிறார். ஆம், துன்ப நேரங்களில்தான் ஒருவரது இறைநம்பிக்கை உரசிப் பார்க்க முடியும். இன்னல்களின் மத்தியில்தான் மனவுறுதியும், சகிப்புத் தன்மையும் வெளிப்பட வேண்டும். ஆண்டவர் இயேசுவின்மீது நாம் கொள்கின்ற நம்பிக்கையை நமக்கு இன்னல்கள், துன்பங்கள் நேரிடும்போது...