Category: இன்றைய சிந்தனை

கடவுள் எதிர்பார்க்கும் நேர்மை

ஆமோஸ் 9: 11 – 15 “அந்நாட்களில் விழுந்துகிடக்கும் தாவீதின் கூடாரத்தை மீண்டும் உயர்த்துவேன்” என்று, ஆண்டவர் இறைவாக்கினர் ஆமோஸ் வழியாக கூறுகிறார். இங்கு “தாவீதின் கூடாரம்” என்கிற வார்த்தை நம்முடைய கவனத்தை ஈர்க்கிறது. வழக்கமாக, “தாவீதின் இல்லம்” என்று சொல்லப்படுவது, கூடாரமாக மாறியது எப்படி? இதனுடைய பொருள் என்ன? ஏனென்றால், கூடாரம் என்பது சாதாரணமானது, எளியது, பார்ப்பதற்கு சிறியது. ஆமோசின் காலத்தில், தாவீதின் அரசு மிகச்சிறியதாக, “இல்லம்” என்று அழைக்கப்படுவதற்கு முடியாத அளவிற்கு மாறியது. அதனால் தான், இங்கு கூடாரம் என்கிற வார்த்தையை இறைவாக்கினர் பயன்படுத்துகிறார். “இதோ நாட்கள் வருகின்றன” என்கிற வார்த்தைகள், அவர்களுக்கு நம்பிக்கையைக் கொடுப்பதாக இருக்கின்றன. அவர்களுக்கு விரைவில் அழிவு வரப்போகிறது. ஆனாலும், கடவுள் அவர்களை நிர்கதியாக விட்டு விட மாட்டார். அவர்களுடைய குற்றங்களுக்கு ஏற்ற தண்டனையை அனுபவித்தவுடன், அவர்கள் ஆறுதலைப் பெறுவார்கள். ஆமோஸ் இறைவாக்குரைத்த நேரத்தில், அங்கு வளமை இருந்தது. ஆனால், ஆண்டவர் இல்லை. கடவுளின்...

நீதியுள்ளவர்களாக வாழ்வோம்

ஆமோஸ் 8: 4 – 6, 9 – 12 ஓய்வுநாள் எப்போது நிறைவுறும்? என்று எதிர்பார்க்கிறவர்களை ஆமோஸ் இறைவாக்கினர் கடுமையாகச் சாடுகிறார், “கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடியும்?”. ஓய்வுநாள் என்பது வெறுமனே வழிபாட்டிற்காக மட்டும் வைத்திருக்கவில்லை. மாறாக, அது சமுதாய நீதி சார்ந்து சிந்தித்தன் வாயிலாக ஏற்படுத்தப்பட்டது என்பதுதான் உண்மை. அன்று, வீட்டு உரிமையாளருக்கு மட்டுமல்ல, அந்த வீட்டில் பணி செய்யக்கூடிய பணியாளர்கள், விலங்குகள், அடிமைகள் என அனைவருக்கும் ஓய்வு தரக்கூடிய நாளாக இருந்தது, இணைச்சட்டம் 5: 14 ” ஏழாம் நாளோ உன் கடவுளாகிய ஆண்டவருக்கான ஓய்வுநாள். எனவே, அன்று நீயும் உன் மகனும் மகளும் உன் அடிமையும் அடிமைப்பெண்ணும், மாடு, கழுதை, மற்றெல்லாக்கால்நடைகளும், உன் வாயில்களுக்கும் இருக்கும் அன்னியனும், யாதொரு வேலையும் செய்ய வேண்டாம். நீ ஓய்வெடுப்பது போல், உன் அடிமையும், அடிமைப்பெண்ணும் ஓய்வெடுக்கட்டும்”. ஆனால், வியாபாரிகள் எப்போது ஓய்வுநாள் முடியும்? என்று...

புனிதர்கள் பேதுரு, பவுல் – திருத்தூதர்கள் பெருவிழா

திருத்தூதர் பணி 12: 1 – 11 அதிகாரவர்க்கத்தின் போலித்தனம் திருத்தூதர்கள் காலத்தில், அரசருக்கு வணக்கம் செலுத்துவது, அரசருடைய உருவங்களுக்கு ஆராதனை செலுத்துவது வெறும் கடமை மட்டுமல்ல, அது அவர்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தியது. அவர்கள் அதனைச் செய்ய தவறினால், கடுமையான கொடுமைகளுக்கும், சித்ரவதைகளுக்கும் உள்ளாகினர். ஆனால், இயேசுகிறிஸ்துவை நம்பிய கிறிஸ்தவர்கள் இதனை ஏற்றுக்கொள்ள மறுத்தனர். ஏனென்றால், அவர்களைப் பொறுத்தவரையில், இயேசு ஒருவரே ஆண்டவர். அவரைத் தவிர வேறு யாருக்கும், அடிபணிய மறுத்தனர். இது நிச்சயமாக, ஏரோது அரசனுக்கு கோபத்தை வருவித்திருக்கும். இன்றைய வாசகத்தில், ஏரோது அரசன், திருச்சபையைச் சார்ந்த மக்கள் சிலரைப் பிடித்துக் கொடுமைப்படுத்தியதாக கூறப்படுகிறது. “திருச்சபையைச் சார்ந்த மக்கள்” என்கிற வார்த்தைகள், திருத்தூதர்களைக் குறிக்கிற வார்த்தைகளோ, அல்லது, மேல் மட்ட கிறிஸ்தவ திருச்சபையின் தலைவர்களையோ குறிக்கலாம். ஏரோதுவின் இந்த செயல், கிறிஸ்தவர்கள் தனக்கு எதிராக கலகம் செய்யலாம் என்று அஞ்சியோ, அல்லது பரிசேயர்கள் மற்றும் சதுசேயர்களின் தூண்டுதலினாலோ எழுந்திருக்கலாம். ஒட்டுமொத்தமாக,...

துறந்தால் மகிழ்ச்சி தூரமில்லை

மத்தேயு 13:44-46 “கூலுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்பது நமக்குத் தெரிந்த பழமொழி. மனிதர்கள் பெரும்பாலும் இரண்டிற்கும் ஆசைப்படுவதால் ஆபத்தான பல நேரங்களை சந்திக்க நேரிடுகிறது. மனதிற்குள்ளே நாளும் மகிழ்ச்சி மத்தளமிட வேண்டுமென்றால் ஒருசிலவற்றை நம்மிடமிருந்து கழிக்க வேண்டும். ஒருசில அவசியமற்றவைகளை துறந்து தூரே தள்ளிவிட வேண்டும். நம்முடைய ஒருசில தீய பண்புகளையும் நம்மிடமிருந்து எரித்து சாம்பாலாக்க வேண்டும். இன்றைய நற்செய்தியில் புதையலை கண்டுபிடித்த ஒருவரும், முத்தை கண்டுபிடித்த ஒருவரும் மகிழ்ச்சியை சம்பாதிப்பதற்காக, உருவாக்குவதற்காக தங்களுக்குள் வைத்திருந்த அவசியமற்ற அனைத்தையும் துறக்கிறார்கள். முழுவதும் வேண்டாமென்று துறக்கிறார்கள். ஏனெனில் இந்த குப்பைகளை தூரே தட்டினால் தான் தங்களுக்குள் பேரின்பம் உண்டு என்பதை உணா்ந்த அவர்கள் இந்த சிறப்பான செயலை செய்கிறார்கள். மகிழ்ச்சியை அனுபவிக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது எப்போதும் நம் அருகிலே உள்ளது. அதை நமக்கு மிகவும் தூரமாக்குவது நாம் தான். நிலையான மகிச்சியை நமக்குள் உருவாக்க வேண்டுமெனில் நாம் இழந்தே ஆக வேண்டும்....

இயேசுவின் திரு இதயம் !

இன்று நாம் இயேசுவின் திரு இதயத்துக்கு விழா எடுக்கிறோம். இதயம் என்பது அன்பின் அடையாளம். பரிவின் வெளிப்பாடு. இயேசு பரிவும், கனிவும் நிறைந்த இதயத்தவராக இருந்தார். எனவேதான், என்னிடம் கற்றுக்கொள்ளுங்கள், நான் இதயத்தில் கனிவும் மனத்தாழ்மையும் உடையவன் (மத் 11:29) என்று மொழிந்தார். பழைய ஏற்பாட்டில் இஸ்ரயேல் மக்களின் இதயம் கல்லானதாக மாறிவிட்டதாக, யாவே இறைவன் குறைப்பட்டார். எனவேதான், கல்லான இதயத்தை மாற்றிவிட்டு, கனிவான இதயம் தருவதாக எசேக்கியேல் இறைவாக்கினர் வழியாக வாக்களித்தார். அந்த வாக்குறுதி இயேசுவின் திரு இதயத்தில் நிறைவு பெற்றது. இயேசுவின் இதயம் ஏழைகள், பாவிகள் என ஒதுக்கப்பட்டோர், ஊனமுற்றோர், கைம்பெண்கள், ஆதரவற்றோர் போன்ற ஓரங்கட்டப்பட்ட அனைவருக்காகவும் துடித்தது, அழுதது, பரிவு கொண்டது. அந்த இதயம் இன்றும் நம்மீதும் பரிவு கொள்கின்றது. நமது குறைபாடுகள், பாவங்கள், குற்றங்கள் அனைத்தையும் ஒரு தாயின் இதயம் போன்று பாசத்துடன் பார்த்து, மன்னித்து நம்மை ஏற்றுக்கொள்கிறது. அந்த இதயத்துக்காக நாம் நன்றி கூறி,...