Category: இன்றைய சிந்தனை

இயேசுவே உண்மையான வாயில்

”ஆடுகளுக்கு வாயில் நானே” என்று இயேசு சொல்கிறார். முற்காலத்தில் கிராமங்களிலும், நகரங்களிலும் பொதுவான் ஆட்டுக் கொட்டில்கள் அமைக்கப்பட்டிருந்தன. பகலில் மேய்ந்தபிறகு மாலையில் ஒட்டு மொத்த ஆடுகளும் ஒரே கொட்டிலில் அடைக்கப்பட்டன. அந்த கொட்டில் பாதுகாப்பான கதவினால் அடைக்கப்பட்டிருந்தது. கொட்டிலைப் பாதுகாக்கக்கூடிய ஆயனிடம் மட்டும் தான், அதற்கான திறவுகோல் இருந்தது. அவர் மட்டும் தான் வாயில் வழியாக நுழைய முடியும். இதைத்தான் 2வது மற்றும் 3வது இறைவார்த்தை சொல்கிறது: ”வாயில் வழியாக நுழைபவர் ஆடுகளின் ஆயர். அவருக்கே காவலர் வாயிலைத் திறந்துவிடுவார். ஆடுகளும் அவரது குரலுக்கே செவிசாய்க்கும்”. ஆடுகளை கோடைக்காலத்தில் மலைப்பகுதியில் மேய்க்கச் செல்கிறபோது, ஒவ்வொரு நாளும் திரும்பி வருவது கடினம். எனவே, மலைப்பகுதியில் கொட்டிலை அமைப்பர். இது ஊரில் அமைப்பது போல பாதுகாப்பானது அல்ல. திறந்தவெளியில் கொட்டிலை அடைத்திருப்பர். ஆடுகள் உள்ளே செல்வதற்கும், வெளியே வருவதற்கும் ஒரு சிறிய வழியை ஏற்படுத்தியிருப்பர். இரவு நேரங்களில் ஆயனே அந்த வழியில் படுத்திருப்பார். அவரைத்தாண்டி,...

தந்தையும், மகனும்

நானும் தந்தையும் ஒன்றாய் இருக்கிறோம், என்கிற இயேசுவின் வார்த்தைகள் நம்மை சிந்திப்பதற்கு அழைப்பு விடுக்கிறது. “ஒன்றாய்“ என்பதன் பொருள் என்ன? நமது அடிப்படை மறைக்கல்வி, கடவுள் மூன்று ஆட்களாய் இருக்கிறார் எனவும், ஆனால் ஒரே கடவுள் எனவும் கற்றுத்தந்திருக்கிறது. அதற்கான காரணத்தைப் பார்க்கிறபோது, மூன்று பேருக்கும் ஒரே ஆற்றல், ஒரே வல்லமை, ஒரே கடவுள் தன்மை இருப்பது என்று சொல்லப்படுகிறது. இதனை அடியொற்றி நாம் சிந்திக்கிறபோது, இயேசு தந்தையாகிய கடவுளின் இதயத்தோடு இணைந்தவராய் இருக்கிறார் என்று நாம் புரிந்து கொள்ளலாம். என்னைப் பார்க்கிறவர், தந்தையையே பார்க்கிறார் என்று இயேசு சொல்வதன் பிண்ணனியும் இதுதான். தந்தையாகிய கடவுளைப் பார்க்க விரும்புகிறவர் எவரும் இயேசுவைப் பார்த்தாலே போதும். ஏனெனில், இயேசு கடவுளின் பண்பை வெளிப்படுத்துகிறவராய் இருக்கிறார். இயேசு பாவிகளை பெருந்தன்மையோடு மன்னிக்கிறபோது, கடவுளின் மன்னிப்பை நாம் பார்க்கலாம். இயேசு நற்செய்தி அறிவிக்கிறபோது, கடவுளின் வார்த்தையை நாம் கேட்கலாம். இயேசு புதுமைகள் செய்கிறபோது, கடவுளின் வல்ல...

பேதுருவின் இறையனுபவம்

திருத்தூதர் பணி 9: 31 – 42 திருத்தூதர் பேதுரு செய்கிற வல்ல செயல்களை, அற்புதங்களை இன்றைய வாசகம் நமக்கு எடுத்துரைக்கிறது. முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு சுகமும், இறந்து போனவர்க்கு உயிரும் கொடுக்கிறார். இயேசுவோடு வாழ்ந்தபோது, பல அற்புதங்களை செய்ய முடியாமல் இருந்தவர், இப்போது தனியாகவே அற்புதங்களைச் செய்வது, நிச்சயம் அங்கிருந்தவர்க்கெல்லாம் ஆச்சரியத்தை உண்டு பண்ணியிருக்க வேண்டும். எப்படி இவரால் இவற்றைச் செய்ய முடிகிறது? என்கிற கேள்வி மக்களின் உள்ளங்களை துளைத்தெடுத்திருக்க வேண்டும். ஒரு குழந்தை தன் தாய் இருக்கிறபோது, நடந்து வருகிறது என்று வைத்துக்கொள்வோம். ஒருவேளை அந்த குழந்தை நடக்கிறபோது கீழே விழுந்துவிட்டால், அது மீண்டும் எழ முயற்சிக்காது. மாறாக, அழ ஆரம்பிக்கும். தாய் தன்னை தூக்க வேண்டும் என்று அடம்பிடிக்க தொடங்கும். அதே குழந்தை தாய் இல்லாத நேரத்தில், நடந்து வருகிறபோது கீழே விழுகிறது என்று வைத்துக் கொள்வோம். அங்குமிங்கும் பார்க்கும். தொடர்ந்து எழுந்து நடக்க ஆரம்பிக்கும். இயேசுவோடு...

திறந்த உள்ளத்தினராக வாழ்வோம்

திருத்தூதர் பணி 9: 1 – 20 சவுலுடைய மனமாற்றம் பற்றிய சிந்தனைகளை இன்றைய முதல் வாசகம் நமக்குக் கற்றுத்தருகிறது. சவுல் திருச்சபையை அழித்தொழிக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டு செயல்பட்டவர். யூதப் பாரம்பரியத்தில் வளர்ந்தவர். கிறிஸ்தவம் யூத மறையை அழித்துவிடும். எனவே, அதனை எப்படியாவது தடை செய்ய வேண்டும் என்று, விரோத மனப்பான்மையோடு செயல்பட்டவர். மற்றவர்களால் அவர் இயக்கப்பட்டார் என்று சொன்னாலும், அவருடைய உள்ளத்திலும் கிறிஸ்தவர்களை அழிக்க வேண்டும் என்கிற எண்ணம் இயல்பாகவே இருந்தது. ஆனால், அனைவரும் ஆச்சரியப்படக்கூடிய வகையில் அவர் ஒரே ஒரு காட்சியினால் மனமாற்றம் அடைகிறார். இது எப்படி சாத்தியம்? சவுல் உயிர்த்த இயேசு அவருக்கு கொடுத்த காட்சியினால் மனம்மாறினால் என்று ஒரு வரியில் சொன்னாலும், சவுலின் மனமாற்றம் எப்போது தொடங்கியிருக்கும் என்பது தான் உண்மை. அந்த தொடக்கத்தின் நிறைவு தான், இந்த மனமாற்றம். எது சவுலின் மனமாற்றத்திற்கு காரணமாக இருந்திருக்கும்? நிச்சயம் தொடக்க கிறிஸ்தவர்கள் கொண்டிருந்த...

இறைத்திட்டத்திற்கு அர்ப்பணிப்போம்

திருத்தூதர் பணி 8: 1 – 8 அழுகை, மகிழ்ச்சி என்கிற இரண்டுவிதமான உணர்வுகளையும் சேர்த்து, இந்த வாசகம் நமக்கு தருகிறது. அழுகைக்கு காரணம் என்ன? ஸ்தேவான் இறந்துவிட்டார். கிறிஸ்துவின் நற்செய்தியை துணிவோடு அறிவித்த ஸ்தேவான் கொலை செய்யப்பட்டுவிட்டார். அது மட்டுமல்ல, கிறிஸ்தவர்களை சவுல் துன்புறுத்துகிறார். மகிழ்ச்சிக்கு காரணம் என்ன? பிலிப்பு நற்செய்தியை அறிவிக்கின்றார். மக்கள் நடுவில் பல புதுமைகளைச் செய்கிறார். ஆக, ஒருபுறத்தில் மக்கள் கவலையினாலும், துன்பங்களினால் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில், மக்கள் மகிழ்ச்சியின் விளிம்பில் இருந்து கொண்டிருக்கிறார்கள். ஸ்தேவானின் இறப்பு நிச்சயம் மக்களுக்கு மிகப்பெரிய இழப்பை உருவாக்கியிருக்க வேண்டும். இதற்கு மேல், தங்களுக்கு கடவுளுடைய வார்த்தையை யார் போதிப்பார்கள்? என்கிற எண்ணம் சந்தேகமாய் எழுந்திருக்க வேண்டும். ஆனால், கடவுளின் திட்டம் அற்புதமானது, ஆச்சரியத்தை உண்டு பண்ணக்கூடியது என்பதை மக்கள் அறிந்திருப்பார்கள். அதனுடைய வெளிப்பாடு தான், இந்த கவலையும், மகிழ்ச்சியும். கடவுளின் மீட்புத் திட்டம் ஒரு குறிப்பிட்ட மனிதரோடு முடிந்து விடுவதில்லை....