Category: இன்றைய சிந்தனை

இயேசுவின் அழைப்பு

இயேசுவின் உருமாற்ற நிகழ்ச்சியில் என்ன நடந்தது என்பதை, நாம் உறுதியாகச் சொல்ல முடியாது. ஆனால், அது இயேசுவின் வாழ்வில் மிக, மிக முக்கியமான நிகழ்வு என்பதை நாம் உறுதியாகச் சொல்ல முடியும். கடவுளின் விருப்பம் என்ன? என்பதை தெரிந்த கொள்ள, இயேசு மலைக்குச் செல்கிறார். தன்னுடைய மூன்று முக்கியமான சீடர்களோடு செல்கிறார். ஒருவேளை, அவர்களும் அந்த அனுபவத்தைப் பெற வேண்டும், என்பதற்காகக்கூட அவர்களை அழைத்துச் சென்றிருக்கலாம். மோசேவும், எலியாவும் அவருக்குத் தோன்றுகிறார்கள். இந்த உருமாற்ற நிகழ்வில், இயேசுவின் முகம் மின்னலைப்போல, வெண்மையாக மாற்றம் பெறுவது நமக்கு முக்கியமான செய்தியைத் தருகிறது. தூய்மையான உள்ளத்தோடு கடவுளைத் தேடி வருகிறபோது, நாம் கடவுளால் இன்னும் அதிகமாக தூய்மையாக்கப்படுகிறோம். இயேசு உடலிலும், உள்ளத்திலும் தூய்மையானவராக வாழ்ந்து வந்தார். மக்கள் மத்தியில் தூய்மையான எண்ணத்தோடு பணிசெய்து வந்தார். அவருடைய உள்ளத்தில் பரிவும், இரக்கமும் மிகுந்திருந்தது. அவரிடத்தில் இருந்த தூய்மையான எண்ணமும், உள்ளமும் தான், மக்கள் மத்தியில், மக்களுக்காக...

அன்பே மனிதன்

மத் 5 : 43 -48 ‘அன்பே கடவுள்’ (1யோவான் 4:8) என்பது உண்மையென்றால் ‘அன்பே மனிதன்’ என்று அமைவது தான் நியதி. ஒவ்வொருவரும் கடவுளின் சாயலோடு படைக்கப்பட்டிருக்கிறோம். ‘என் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவராய் இருங்கள் என்கிறார் இயேசு. மனிதனின் நிறைவு என்பது அவன் புனிதனின் நிலையை அடைவதே. அவரின் சாயலோடு படைக்கப்பட்டவர்கள் அவரின் சாயலாகவே மாற வேண்டும். இது சாத்தியமா? சாத்தியமே. எப்படியென்றால், அன்பினால் இது சாத்தியமாகும். நாங்கள் தான் எங்களை அன்பு செய்கிறவர்களை அன்பு செய்கிறோமே என்பது போதாமை. மாறாக விண்ணகத் தந்தை எவ்வாறு அனைவரையும் ஒன்று போல் அன்பு செய்கிறாரோ அவரைப் போல நாமும் தீயவர்களையும், நமது பகைவர்களையும் அன்பு செய்ய வேண்டும். அவன் எனது பெயரைக் கெடுத்து விட்டானே! வாழ்வை சீர்குலைத்து விட்டானே! எனக்குரிய வாய்ப்புகளைத் தட்டிப் பறித்து விட்டானே! அவனை எவ்வாறு அன்பு செய்ய முடியும் என்று நினைக்கும் பொழுதெல்லாம்...

மனநிலையும் வழிபாடும்

மத் 5 : 20 -26 மனநிலையும் வழிபாடும் கண்ணால் காணமுடியாத கடவுளை அன்பு செய்கிறேன். அவருக்குப் பலி செலுத்துகிறேன் என்று அவருக்கும் நமக்கும் உள்ள உறவினை சரிசெய்வதற்கு முன்பாக, முதலில் கண்ணால் நீ காண்கின்ற உன் அயலானோடு உள்ள உறவுச் சிக்கலை சரிசெய்ய வேண்டும் என்பதே இன்றைய நற்செய்தி நமக்கு முன் படைக்கின்ற பாடமாகும். இதற்கு பரிசேயர்களின் அறநெறியைக் காட்டிலும் இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் அறநெறி சிறந்ததாக இருக்க வேண்டும். பரிசேயர்களின் அறநெறி என்பது சட்டத்தை மட்டுமே சார்ந்தது. இரக்கம், அன்பு, மன்னிப்பு இவற்றிற்குச் சட்டத்தில் வேலையில்லை. ஆனால் இயேசு ‘நான் பலியை அல்ல இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்று சொல்லி அவர்களின் சட்டத்திற்கு புதிய பொருளும், அழுத்தமும் கொடுக்கிறார். அவர்களின் சட்டங்கள் அனைத்தும் ஒருவரின் செயலினை மட்டும் கொண்டே மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால் ஆண்டவர் கூறும் புதிய நெறியில் செயலுக்குக் காரணமான மனநிலையையும் (யுவவவைரனந) நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்கிறார்....

நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட

மத் 7 : 7- 12 நிறைவை நிறைவானவரிடம் கேட்க, தேட, தட்ட இத்தவக்காலத்தில் செபத்தின் முக்கியத்துவத்தையும், செபிப்பதின் விளைவுகளையும், நாம் எப்படி செபிக்க வேண்டும் என்பதையும் பல கோணங்களில் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தியும் செபத்தின் உள்ளார்ந்த அர்த்தத்தையும், ஆன்மீகத்தையும் நமக்கு எடுத்துரைக்கிறது. ‘கேளுங்கள் உங்களுக்குக் கொடுக்கப்படும்’ என்றவுடன் நாம் நமது தேவைகளை மளிகைக்கடை பட்டியல் போல எடுத்துவிட ஆரம்பித்து விடுகிறோம். அது பல நேரங்களில் எங்கு? எப்படி? தொடங்குகிறது என்றே தெரியாது. குறிப்பாக இன்று பலபேர் அருட்கொடை இயக்கத்தில் செபிப்பது போலவே செபிப்பது செபம் என்று நினைத்துக் கொள்கின்றனர். ஆனால் ஆண்டவர் நாம் கேட்கின்ற பொருளாதாரக் காரியங்களை விரும்பிக் கேட்பாரோ என்றால் அது கேள்விக் குறியே! காரணம் அவர் செல்வந்தர்களின் மனநிலையை அடியோடு வெறுக்கிறார். மிகுதியான உடைமைகளை வைத்திருப்பவர்களை அடித்து விரட்டுகிறார். இன்னுமொரு இடத்தில் “நீங்கள் இறைவனிடம் வேண்டும் பொழுது, நீங்கள் உள்ளறைக்குச் சென்று கதவை அடைத்துக் கொண்டு, மறைவாய்...

தவக்காலமே அடையாளம்

லூக் 11: 29 – 32 நாம் தவக்காலத்தை ஆரம்பித்து இன்றோடு ஒரு வாரம் ஆகின்றது. நம்மில் பல பேர் இந்த ஒரு வாரத்தில் பல வேண்டுதல்களோடும் கருத்துகளோடும் செபித்திருப்போம். சில புதுமைகளை அடையாளங்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு அடையாளங்கள் அரங்கேறியிருக்கும், சிலருக்கு ஏதும் நிகழாமல் இருந்திருக்கும். இன்று நம்மில் பலபேர் அடையாளங்களைத் தேடியும் புதுமைகளுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தான் இருக்கின்றோம். இயேசுவைக் காட்டிலும், போதகரின் மீது நம்பிக்கை வைத்து அலைந்தோடும் கூட்டம் தான் இன்றைய மிகப்பெரிய அவலநிலை. இப்படிப்பட்ட நமக்கு இன்றைய நற்செய்தி நல்லதொரு செய்தி. முதலில் அடையாளம் என்பது என்ன என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும். அடையாளம் என்பது கண்ணுக்கு தெரிகின்ற ஒன்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. எ.கா:- 1. நாம் நம் திருப்பலியில் பயன்படுத்துகின்ற தூபம், நம் செபங்களும் இத்தூபத்தைப்போல ஆண்டவரை நோக்கி எழுப்பவேண்டும் என்பதன் அடையாளமே. 2. நற்கருணைப்பேழைக்கு அருகிலிருக்கும் அணையாத விளக்கு ஆண்டவர்...