Category: இன்றைய வசனம்

பெருமையுள்ளவனைப் பார்க்கிலும் பொறுமையுள்ளவன் உத்தமன் சபை உரையாளர் ( பிரசங்கி ) 7 : 8

நாளைக்கு என்ன நம்முடைய வாழ்க்கையில் நடக்கும், அது எப்படி இருக்கும் என்று நமக்கு தெரியாது. அப்படியிருக்க பெருமை பாராட்ட வேண்டியதின் அவசியம் தான் என்னவோ?நொடிப்பொழுதில் தோன்றி மறையும் புகை போன்றவர்கள் நாம்.வீம்பு பாராட்டி பெருமைக் கொண்டு கடவுள் விரும்பாத காரியத்தை செய்து வாழ்வதைவிட பொறுமையோடு இருப்பதே உத்தமம்.பெருமையினால் தீமையே உண்டாகும். செருக்குற்றோரை அவர் இகழ்ச்சியுடன் நோக்குகிறார்,தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார். யாக்கோபு 4 : 6. மற்றும்        1 பேதுரு 5 : 5 ல் வாசிக்கிறோம். ஆகையால் கடவுளுடைய வல்லமைமிக்க கரத்தின்கீழ் நம்மை தாழ்த்தும் பொழுது ஆண்டவர் நம்மை உயர்த்துவார். ஏற்ற காலத்தில் ஏற்ற நேரத்தில் நம்மை ஆசீர்வதித்து காத்துக்கொள்வார். நம்முடைய கவலையெல்லாம் அவரிடம் வைத்துவிட்டு அவரின் கிருபைக்கு காத்திருப்போம். ஆண்டவரின் கிருபை அளவில்லாதது. ஒரு கம்பெனியில் ஒரு நேர்மையுள்ள மனிதர் வேலைப்பார்த்து வந்தார். அவர் கடவுளுக்கு மிகவும் பயந்து பயபக்தியோடு வாழ்ந்ததால் லஞ்சம் வாங்குவதை விரும்பமாட்டார். தன்னிடம் ஒப்படைத்த வேலையை மிகவும் அருமையாக, உண்மையாக செய்து வந்தார். ஆனால் சில பேருக்கு...

அன்பை நம்மேல் பொழிந்திடும் ஆண்டவர்.

தம் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்புக்கூர்ந்தார். யோவான் 3: 16. இந்த உலகில் வந்த யாவரையும் மீட்கும்படி தமது அன்பு முழுவதையும் நம்மேல் பொழிந்து நமக்கு நித்திய வாழ்வை அளித்திருக்கிறார். நாம் கவலை அற்றவர்களாய் வாழும்படி நம்முடைய சுமையை அவரேசுமந்து நமக்கெல்லாம் இளைப்பாறுதலை தந்திருக்கிறார். கனிவும், மனத்தாழ்மையும் உள்ள ஆண்டவர் நமது நுகத்தை அவர்மேல் ஏற்றுக்கொண்டு நமக்கு விடுதலை அளித்துள்ளார். அவரே நம் தந்தை. அவரிடமிருந்தே அனைத்தும் வருகின்றன. அவருக்காகவே நாம் இருக்கின்றோம். அதற்காகவே நம்மை படைத்துள்ளார். அந்த அன்பின் தெய்வத்தின் வழியில் நடந்து இளைப்பாறுதலை பெற்றுக்கொள்வோம். அவரே ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து. ஆண்டவரின் அன்பு என்றென்றைக்கும் நிலைத்திருக்கும் . அவரின் அன்புக்கு அழிவே இல்லை. இந்த உலகில் எந்த ஒரு கடவுளும் செய்யாத காரியத்தை நம்முடைய ஆண்டவர் நமக்கு செய்திருக்கிறார். அன்பின் மகத்துவத்தையும்,வல்லமையையும், நமக்கு புரிய வைக்கவே மனித உருக்கொண்டு இந்த உலகிற்கு வந்தார்....

நன்மையால் தீமையை வெல்லுங்கள்!! ரோமர் 12 : 21

தீமையையை வெறுத்து நன்மையை பற்றிக்கொண்டால் அப்பொழுது அந்த காரியம் கடவுளுக்கு மிகவும் பிரியமாக இருக்கும். ஏனெனில் நம்முடைய அன்பு கள்ளமற்றதாய் இருப்பதையே ஆண்டவர் எதிர்பார்க்கிறார். மற்றவர்களிடம் நம் உடன் பிறப்புகள் போன்று ஒருவருக்கொருவர் உளங்கனிந்த அன்பு காட்டுங்கள். பிறரை உங்களைவிட மதிப்புக்கு உரியவரென எண்ணுங்கள் என்று ரோமர் 12 : 9,10 ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். இரண்டு நண்பர்கள் மிகவும் பிரியமாய் ஒருவருக்கொருவர் மிகுந்த அன்போடு பழகி வந்தனர். இதனால் பொறாமை கொண்ட இன்னொருவர் அவர்களை எப்படியாவது பிரிக்க வேண்டும் என்று நினைத்து அவர்களிடம் அன்புக் காட்டுவதுபோல் நன்றாக பேசி அவர்களின் சில ரகசியங்களை அறிந்துக்கொண்டு ஒவ்வொருவரிடம் இல்லாத கதையை சொல்லி அவர்களிடே பிரிவினையை உண்டு பண்ணி அதன் மூலம் தான் சில நன்மைகளை அனுபவித்து வந்தார். ஒரு காலக்கட்டத்தில் அவரின் குணத்தை அறிந்துக்கொண்ட நண்பர்கள் இருவரும் கலந்து மனம் விட்டு பேசி தாங்கள் பிரிந்ததற்கு இன்னொருவரின் சூழ்ச்சியே காரணம் என்று தெரிந்துக்கொண்டு மறுபடியும் நல்ல நண்பர்களாய் இருந்தார்கள். இந்த உலகில் தீமை செய்பவர்கள் நிறைய பேர்கள் இருக்கிறார்கள்.நாம்தான்...

உலகை வெல்லுவது நம்முடைய நம்பிக்கையே!!

நம்பிக்கையானது நம்பப்படுகிறவைகளின் உறுதியும்,காணப்படாத வைகளின் நிச்சயமுமாயிருக்கிறது. எபிரேயர் 11 : 1. நம் கண் முன்னே தோன்றும் காரியத்தை யார் வேண்டுமானாலும் நம்பலாம். நம் கண்ணுக்கு புலப்படாத, நாம் அறியாத ஒரு காரியத்தை நம்புவதையே மேன்மையாக ஆண்டவர் நினைக்கிறார். ஏனெனில் கடவுளிடமிருந்து பிறக்கும் அனைத்தும் உலகை வெல்லும். இந்த உலகை வெல்லுவது நம் நம்பிக்கையே.1 யோவான் 5 : 4. நம்முடைய நம்பிக்கை உறுதிப்படும் பொழுது அதைக் கனப்படுத்தவே ஆண்டவர் விரும்பி நமக்குள் செயலாற்றி அந்த நம்பிக்கையை நிறைவேற்றித்தருவார். கடவுள் நம்மிடம் கொண்டுள்ள அன்பை நாம் அறிந்துள்ளோம்.அதை நம்புகிறோம்.அப்படியிருக்க பல நேரங்களில் மனம் சோர்ந்து போய் வாழ்க்கையை வெறுமையாய் நினைக்கிறோம். நாம் இயேசுவை இறைமகன் என்று நம்பினால் நம்மைத் தவிர இந்த உலகத்தை யாரால் வெல்ல முடியும்?ஆண்டவரை உறுதியாய் பற்றிக்கொண்ட மனதை உடையவர்கள் அவரையே நம்பியிருக்கிறபடியால் அவர்கள் ஒவ்வொருவரையும் கடவுள் பூரண சமாதானத்துடன் காத்துக்கொள்வார். கடவுள் நமக்கு நம்பிக்கையில் பலப்படும் பொருட்டு ஞானத்தை உடைய ஆவியையும், ஆலோசனை உடைய ஆவியையும், பெலனை கொடுக்கும் ஆவியையும், அறிவை உணர்த்தும் ஆவியையும், அவருக்கு...

நம்முடைய பெற்றோரை மதித்து அன்புக்காட்டி நடப்போம். வி.ப.20:12

கடவுள் நமக்கு கொடுத்த பத்து கட்டளைகளில் ஒரு கட்டளை உன் கடவுளாகிய ஆண்டவர் உனக்களிக்கும் நாட்டில் உன் வாழ்நாள்கள் நீடிக்கும்படி உன் தந்தையையும், உன் தாயையும், மதித்து நட என்பதாகும். விடுதலை பயணம் 20 : 12. சிலசமயங்களில் நாம் நம்முடைய பொறுமை-யின்மையால் அவர்கள் மேல் கோபம் கொண்டுவிடுகிறோம். நம்மை பெற்றெடுத்து நம்மை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டுவர அவர்கள் எவ்வளவோ தியாகங்களை செய்கிறார்கள் என்பதை நாம் ஒருபோதும் மறக்கவே கூடாது. ஒரு சின்ன கதையை உங்களோடு பகிர்ந்துக்கொள்கிறேன். ஒருநாள் ஒரு தந்தையும், மகனும் வீட்டின் ஜன்னல் அருகே உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தார்கள். அந்த தந்தைக்கு கொஞ்சம் வயதாகிவிட்டதால் கண் பார்வை கொஞ்சம் மங்கலாகிவிட்டது. அந்த ஜன்னலின் தொலைவில் ஒரு காகம் வந்து அமர்ந்தது. அது கருப்பாக இருந்ததால் தந்தை மகனை நோக்கி அங்கு ஏதோ கருப்பாய் உட்கார்ந்திருக்கிறதே ! அது என்ன என்று கேட்டார்? அப்பொழுது மகன், அப்பா அது ஒரு காகம் என்று சொன்னான். தந்தைக்கு வயதாகிவிட்டதாலும் தான் கேட்டதை மறந்துவிட்டதாலும் மறுபடியும் கொஞ்ச...