Category: இன்றைய வசனம்

நமக்கு எதிராக செய்த பொல்லாப்பை தேவன் அவர்கள் மேலேயே திருப்புவார்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் பெயராலே என் அன்பின் நல்வாழ்த்துக்கள். பொறாமை கொண்ட இந்த உலகத்தில் வாழும் நமக்கு அநேகர் எந்த வகையினாகிலும் தீங்கு செய்ய காத்திருப்பார்கள். ஆனால் நம்முடைய ஆண்டவர் சொல்கிறார், என் மகனே, மகளே நீ கவலைப்படாதே, உனக்கு எதிராக உருவாகும் எந்த ஆயுதமும் வாய்க்காமல் போகும்படி செய்ய எனக்கு அதிகாரம் உண்டு. ஆகையால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் உங்கள் கவலைகள், பாரங்கள் எல்லாவற்றையும் என்னிடத்தில் தாருங்கள் நான் அவைகளை உங்களுக்காக சுமந்து உங்களை ஒரு தீங்கும் அணுகாமல் என் உள்ளங்கையில் ஏந்துவேன் என்று நமக்கு வாக்கு அளித்து அதன்படியே நம்மை காப்பார். பொல்லாப்பை நம்மை விட்டு விலக்கி காத்திடுவார். நீதித்தலைவர்கள் புத்தகத்தில் 9ம் அதிகாரத்தில் நாம் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். அபிமெலேக்கு என்னும் ஒருவன் தனது 70 சகோதரர்களையும், ஒரே கல்லின்மேல் வைத்து கொலை செய்கிறான். அந்த ஊர் மக்களும் அவனையே இஸ்ரயேலை...

ஆண்டவரை நம்பினோர் நிச்சயம் அவராலே ஆசீர்வதிக்கப்படுவர்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவரையே முழுதும் பற்றிக்கொண்டு அவரையே நம்பி இருப்போமானால் நிச்சயம் நம்மை ஒருபோதும் கைவிடவேமாட்டார். யார் மூலமோ எதைக்கொண்டோ செயல்பட வல்லவராய் இருக்கிறார்.சுமார் கி.மு.1020 லிருந்து 1025 வரை உள்ள காலங்களில் ரூத் என்னும் சரித்திரத்தின் மூலம் நமக்கு வேதத்தில் ஒரு சம்பவம் எழுதி வைக்கப்பட்டுள்ளது. அக்கால கட்டத்தில் எலிமெலேக்கு என்னும் பெயர் கொண்ட ஒரு மனிதன் தனது மனைவி நகோமியோடும் தன் இரண்டு பிள்ளைகள் மக்லோன், கிலியோன் ஆகியரோடும் எருசலேமில் வாழ்ந்துக் கொண்டு இருக்கும்பொழுது ஒரு பெரிய பஞ்சம் ஏற்பட்டது. அதனால் அவர்கள் எருசலேமை விட்டு மோவாப் தேசத்துக்கு பிரயாணப்பட்டு போனார்கள். அந்த ஊரில் எவ்வளவோ ஜனங்கள் இருக்கும் பொழுது அவர்கள் மாத்திரம் அந்த ஊரை விட்டு வேறே ஊருக்கு போனார்கள். அங்கு போனால் அவர்கள் சந்தோஷமாக இருக்கலாம் என்று நினைத்து விட்டார்கள். ஆனால் அங்கு போன சில வருஷங்களில் நகோமியின் கணவர் இறந்து விட்டார். அவளுடைய இரண்டு குமாரர் மாத்திரம் இருந்தார்கள்....

ஐசுவரியத்தைச் சம்பாதிக்கிறதற்கான பெலனை நமக்கு கொடுப்பவர் ஆண்டவர். உபாகமம் 8:18.

கர்த்தருக்குள் அன்பான சகோதர, சகோதரிகளுக்கு நம்முடைய தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் வாழ்க்கையில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளினால் சிக்கித் தவிக்கும் உங்களுக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உங்கள் தேவைகள் அனைத்தையும் சந்தித்து உங்களை ஆற்றி தேற்றி, ஆறுதல் அடையச் செய்வார். கடன் பிரச்சனை, வீட்டில் வறுமை, நோய்களினால் தொல்லை, குடும்பத்தில் சமாதானம் இல்லாமல் தவிக்கும் உங்கள் ஒவ்வொருவருக்கும் உங்கள் தேவைகளை சந்திக்கவே, அதாவது உங்களுடைய பின்நாட்களில் உங்களுக்கு நன்மை செய்யும் பொருட்டே, இந்த நாட்களில் ஆண்டவர் உங்களை சில பாடுகளின் வழியாக அழைத்து செல்கிறார். உங்களை சிறுமைபடுத்தி, சோதித்து பின்னர் தமது மகிமையின் ஐசுவரியத்தினால் நீங்கள் ஐசுவரியவானாகும்படி செய்யவே ,அதை சம்பாதிக்கும் திறமையையும், பெலனையும், அறிவையும்,ஞானத்தையும் கொடுக்கிறார். கொஞ்சக்காலம் கஷ்டப்படுகிற உங்களை சீர்படுத்தி, ஸ்திரப்படுத்தி, பலப்படுத்தி நிலைநிறுத்துவார். ஆகையால் இந்த நாளில் உள்ள பாடுகளை நினைத்து மனம் சோர்ந்து போகாமல் அதை பொறுமையோடு சகித்து ஆண்டவரிடத்தில்...

அன்பும், அமைதியும் அளிக்கும் கடவுள் நம்மோடு இருக்கிறார்.

அன்பான சகோதர,சகோதரிகளே!நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் நம்முடைய நம்பிக்கையில் நிலைத்திருந்து நம்மையே சோதித்து பார்த்து நம் நடக்கையை சீர்தூக்கிப் பார்ப்போம். ஒருவருக்கொருவர் மன ஒற்றுமையுடன் இருந்து ஆண்டவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து அமைதியுடனும்,பொறுமையுடனும் வாழும் பொழுது நமது ஆண்டவரும் நமக்கு தமது அன்பையும், அமைதியையும் அளித்து நம்மோடு கூடவே இருந்து நாம் செல்லும் இடமெங்கும் நமது கரம் பிடித்து வழிநடத்தி நாம் விரும்பி கேட்கும் யாவையும் கொடுத்து நமது மனவிருப்பங்கள் முழுவதையும் நிறைவேற்றி நம்மை அரவணைத்து, ஆசீர்வதித்து காத்தருள்வார். கர்த்தர் உலகில் வாழ்ந்த தமக்குரியோர் மேல் அன்பு கொண்டிருந்த அவர் அவர்கள்மேல் இறுதிவரையும் அன்பு செலுத்தினார். அதுபோல் நாமும் ஒருவடோருவர் அன்பு வைத்தால் அவருடைய பிள்ளைகளாய் அவருடைய பிள்ளைகள் என்ற நற்சாட்சியை பெற்று வாழலாம். ஏனெனில் நாம் இயேசுவினிடத்தில் நம்பிக்கை கொண்டால் அவரை அனுப்பிய பிதாவினிடத்திலும் நம்பிக்கை கொள்கிறோம். அவரை யூதாஸ் காட்டிக்கொடுப்பது தெரிந்தும் அவனை ஆண்டவர் வெறுக்கவில்லை. அவனை சிநேகதனே நீ செய்ய வேண்டியதை சீக்கிரமாய் செய் என்றே கூறி முடிவு...

கர்த்தர் வெறுக்கும் காரியங்களை நாம் செய்யாமல் இருப்போம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர்,சகோதரிகளுக்கு,நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஆண்டவர் விரும்பும் காரியங்களில் நடந்து அவர் ஒருவருக்கே மகிமை உண்டாக வாழ்ந்து அவரின் திருவுளத்தை நிறைவேற்ற ஒன்றுபடுவோம். நாம் ஒருவரோடு ஒருவர் உண்மையாய் இருப்போம். நாம் வாழும் வாழ்க்கை நீதியாகவும், நல்லுறவுக்கு வழி கோலுவதாகவும் இருக்கட்டும். ஒருவருக்கு எதிராக மற்றொருவர் தீமைசெய்ய மனத்தாலும் நினைக்காமலும், பொய்யாணை இடுவதையும் தவிர்ப்போம். ஏனெனில் இவைகளை நமது ஆண்டவர் வெறுக்கிறார். செக்கரியா 8 – 16 ,17. நீதியை விதைப்போம்,அன்பின் கனியை அறுவடை செய்வோம். ஆணவத்தையும், இறுமாப்பையும், தீமையையும், உருட்டையும்,  புரட்டையும் கர்த்தர் வெறுக்கிறார். கடவுள் நேர்மையாளரையும், பொல்லாரையும் சோதித்தறிகிறார். வன்முறையில் நாட்டங்கொள்வோரை அவர் வெறுக்கிறார். நேர்மையுடன் நீதி வழங்கவும், ஒருவருக்கொருவர் அன்பும், கருணையும் காட்டுவோம். நம்முடைய சகோதரருக்கு எதிராக தீமைசெய்ய மனத்தாலும் நினைக்கவேண்டாம். ஆவியானவர் வாயிலாக நமது ஆண்டவர் போதிக்கும் திருச்சட்டத்தையும், வாக்குகளையும் கேட்டும் நமது இதயத்தை கடினப்படுத்தாதபடிக்கு ஆண்டவரின் வார்த்தைக்கு செவிகொடுப்போம். அவர் நமக்கு கட்டளையிடும் காரியங்களை நாம் செய்யாவிட்டால் நமது...