எல்லாம் நன்மைக்கே!

ஜான் ஒரு பெரிய கம்பெனியில் மேனஜராக வேலைப்பார்த்து வந்தான். கை நிறைய சம்பளம்,நல்ல முதலாளி.கடவுள் பக்தி உள்ளவர். ஜானுக்கு ஒரு தம்பியும்,தங்கையும் உண்டு. ஜானின் தம்பி,தங்கை இருவரும் படித்துக்கொண்டு இருந்ததால் கைநிறைய சம்பளம் வாங்கினாலும் படிப்பு
செலவு,வீட்டு செலவு என்று போதுமானதாக இல்லை. இதனால் ஜான் அநேக வேளைகளில் சோர்ந்து போவான். அவன் அம்மா அவனுக்காக ஆறுதல் சொல்லி,அவனுக்காக ஜெபித்து வந்தார்கள்
நம்மை உருவாக்கி நேசிக்கிற ஆண்டவர் நம்மை ஒருபோதும் கைவிட மாட்டார்.நம்மை விட்டு விலகவும் மாட்டார். அவர் காட்டும் பாதையில் நடப்போமானால் அதில் நிச்சயம் நன்மை இருக்கும் என்று நம்பிக்கையோடு கூறிவந்தார்கள். ஆனால் ஜானுக்கோ அவ்வளவாய் நம்பிக்கை
இல்லை. ஒரு  ஆண்டு சென்றது.
இந்த சூழ்நிலையில் போய்க்கொண்டு இருந்த கால நேரத்தில் ஜானுக்கு,வேறு ஒரு கம்பெனியில் இருந்து லெட்டெர் வந்தது. இப்பொழுது வேலை பார்க்கும் கம்பெனியை விட கூடுதலான சம்பளம் கிடைக்கும், வெளிநாடுகளுக்கு செல்ல வாய்ப்பு இருப்பதாக சொல்லி கடிதம்
அனுப்பியிருந்தார்கள். ஜானுக்கு இதில் மிகவும் பிரியமாக இருந்தது. ஆனால் அவன் அம்மா கடிதத்தை ஆண்டவரின் பாதத்தில்வைத்து ஜெபித்தபொழுது இது கடவுளுக்கு பிரியம் இல்லாத செயல் என்று உள்ளத்தில் உணர்த்தப்பட்டார்கள். அதை மகனிடம் கூறி நீ இப்பொழுது வேலைப்பார்க்கும் கம்பெனியிலேயே தொடர்ந்து வேலை செய்.வேறு கம்பெனி மாற வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் ஜான் அதை கேட்பதாக இல்லை. அம்மாவை சமாதானப்
படுத்தி அவன் விருப்பத்தை நிறைவேற்றுவதில் தீவிரமாக இருந்தான்.அம்மாவால் வேறு ஒன்றும் சொல்ல முடியவில்லை. அவர்கள் ஆண்டவரையே பற்றிக்கொண்டார்கள். உம் சித்தம்
இல்லாத செயலில் ஈடுபடும் என் பிள்ளையை மன்னித்து கண்டித்து உணர்த்தும் என்று வேண்டிக்கொண்டார்கள்.
ஜான் வேறு கம்பெனியில் வேலைக்கு சேர்ந்து 2 மாதம் ஆனது. அவனுக்கு வெளிநாடு செல்லவும் வாய்ப்பு கிடைத்தது. ஜான் மிக சந்தோஷமாக வெளிநாடு செல்ல ஆயத்தமானான். அவன் அம்மா
வோ இது கடவுளுக்கு சித்தமில்லையே என்று வருந்தி அன்பான இயேசப்பா நீர் எப்படியாவது தடுத்து நிறுத்தும் என்று மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே இருந்தார்கள். ஜான் மிக சந்தோஷமாக
தன் பெற்றோரிடம் விடைப்பெற்று வீட்டில் இருந்து கிளம்பி விமான நிலையத்திற்கு சென்றான். போகிற வழியில் ஒரு சம்பவம் நடந்ததால் 3 மணி நேரம் தாமதமானது. எப்படியாவது கடைசி நிமிஷ நேரத்திலாவது சென்றுவிட பிரயாசப்பட்டான். ஆனால் என்ன செய்ய அவனால் குறிப்பிட்ட நேரத்தில் விமான நிலையத்தை சென்று அடைய முடியவில்லை. அவன் மிகவும் மனம் ஒடிந்து போனான். தன வாழ்வே பறிபோனதாக நினைத்தான்.
எல்லாம் வல்ல இறைவன் எல்லாவற்றையும் நன்மைக்காகவே செய்வார் என்பதை அவன் உணரவில்லை.மிகவும் விரக்தியோடு வீடு வந்தான். அவன் அம்மாவுக்கு மிகவும் சந்தோஷம். தன் ஜெபம் கேட்கப்பட்டது என்பதால் ஆண்டவரே உமக்கு நன்றி என்று சொன்னார்கள். ஏனெனில் வெளிநாடு பயணம் ஆண்டவரின் சித்தமில்லையே. ஜான் மிகுந்த விரக்தியோடு இருந்ததால் யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. டிவி போட்டு செய்தி பார்த்தான். அப்பொழுது வந்த செய்தி அவனை அதிற்சிக்குள்ளாக்கியது. அவன் போக இருந்த விமானம் புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளாகியதே அந்த செய்தி. அப்பொழுது தான் அவன் அம்மா சொன்னது அவனுக்கு
ஞாபகம் வந்தது.உடனே அவன் அம்மாவை கட்டிப்பிடித்து அழுதான். உங்கள் வார்த்தையை நான் அசட்டை செய்தேன். ஆனாலும் உங்கள் ஜெபத்தினால் என்னை காப்பாற்றிவிட்டீர்கள்.
என்று சொன்னான்.அம்மா ஜானை அனைத்து கவலைப்படாதே . நம் ஆண்டவர் எதைச் செய்தாலும் அதை நன்மையாக வாய்க்கும் படியே செய்வார்.என்று சொன்னார்கள்.
இதைத்தான் நாமும் விவிலியத்தில் கடவுளுக்கு அஞ்சி நடப்போரையும், தம் பேரன்புக்காக காத்திருப்போரையும், ஆண்டவர் கண்ணோக்குகிறார். திருப்பாடல்கள் 33:18 , சீராக் 51:8 ஆகிய வசனங்களில் காண்கிறோம். எல்லாம் நன்மைக்கே !!! சோர்ந்துபோகாதீர்கள். உரோமையர் 8:28.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: