ஒருவரை ஒருவர் வாழ்த்துங்கள்

கடவுளின் பேரில் நம்பிக்கை கொண்டு அவரையே தெய்வமாக ஏற்றுக்கொண்டு, கடவுளின் பிள்ளைகள் என்ற உரிமையை பெற்று வாழும் எனக்கு அன்பானவர்களே! உங்கள் ஒவ்வொருவரையும் நானும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய பெயரால்
வாழ்த்துகிறேன்.
பிரியமானவர்களே! உங்களுக்கு ஓன்று தெரியுமா? நாம் எதை மற்றவர்களுக்கு செய்ய நினைக்கிறோமோ, அதுவே நமக்கும் கிடைக்கும். நீங்கள் உங்கள் அடுத்திருப்போரை வாழ்த்துவீர்களானால் நீங்கள் கடவுளால் வாழ்த்தப்படுவீர்கள்.
அதனால்தான் ஆண்டவர் பகைவரிடமும், அன்பு கூருங்கள். உங்களை துன்புறுத்துவோருக்காக இறைவனிடம் வேண்டுங்கள். இதைச் செய்தால் நாம் விண்ணகத்தந்தையின் மக்கள் ஆவோம்.
  உங்களிடம் அன்பு செலுத்துவோரிடம் மட்டும் அன்பு செலுத்தினால்
அதினால் கைம்மாறு என்ன கிடைக்கும்? இதை உலக மக்கள்
யாவரும் செய்கிறார்கள்.நாம் கடவுளின் பிள்ளைகள் என்பதற்கு
என்ன சாட்சி இருக்கிறது?
உங்கள் சகோதர,சகோதரிகளுக்கு மட்டும் வாழ்த்து சொல்வீர்களா
னால் நீங்கள் விசேஷித்து செய்த காரியம் ஒன்றுமில்லையே?
மத்தேயு 5 – 47.
பவுல் எழுதிய ஒவ்வொரு கடிதத்திலும் கடைசியாக வாழ்த்து கூறி எழுதியிருக்கிறதை காணலாம். விவிலியம் வாசிக்கும் நாமும் அதன்படியே நடப்போம்.
விசுவாச அடிப்படையில் அன்பர்களாய் இருக்கும் அனைவருக்கும் உங்கள் தலைவர்கள் அனைவருக்கும், வாழ்த்துக்கூருங்கள்.  அப்பொழுது இறையருள் உங்கள் அனைவரோடும் இருக்கும்.
  இதை வாசிக்கும் என் அன்பு நண்பர்களே இதை நான் ஏன் உங்களுக்கு எழுதுகிறேன் என்றால் நான் எந்த காரியத்திற்காக மற்றவர்களை வாழ்த்தினேனோ, அதையெல்லாம் நான் கேட்காமலே
ஆண்டவர் எனக்கு கொடுத்தார். நான் பெற்றுக்கொண்டதை நீங்களும் பெற்றுக்கொள்ள வேண்டுமாய் இதை சொல்கிறேன்.
ஜெபம்.
=======.
எல்லாம் வல்ல இறைவா!  நீர் தன்னலமற்ற தியாகமே உள்ள இறைவன். உமது சாயலாக எங்களை படைத்தீர். நீர் இந்த உலகத்தில் வாழ்ந்தபொழுது ஒவ்வொருவரையும் தேடிச்சென்று உதவி செய்து
அவர்களை வாழ்த்தி, ஆசீர்வதித்து வழிநடத்தி வந்தீர். உமது சாயலாக படைக்கப்பட்ட நாங்களும் நீர் இந்த உலகத்தில் வாழ்ந்தது போல வாழ எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சொல்லித்தாரும்.
நாங்களும் மற்றவர்களை வாழ்த்தி அவர்கள் தேவைகளை சந்திக்க உதவிசெய்யும். உம்மைப்போல் வாழ உதவி செய்வதற்காய் உமக்கு கோடான கோடி நன்றி. ஸ்தோத்திரம். எல்லா மகிமையும் உம் ஒருவருக்கே செலுத்துகிறேன். என்றென்றும் உயிருள்ள தேவனே,
ஆமென்! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: