உள்ளத்தில் வாசம் செய்யும் நம் இயேசுகிறிஸ்து

பிரியமானவர்களே! நம்முடைய தேவனாம் கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் அன்பான நல்வாழ்த்துக்கள்.

இந்த உலகத்தில் முதலாவது கடவுள் ஆதாம், ஏவாள் இவர்களை படைத்து அவர்கள் உண்டு உயிர்வாழ ஏதேன் தோட்டத்தில் கனி தரும் மரங்களை உண்டாக்கி, நீங்கள் இங்கு உள்ள எல்லா கனிகளையும் புசிக்கலாம், ஆனால் நன்மை, தீமை அறிவதற்கு உண்டான கனியை நீங்கள் சாப்பிட கூடாது என்று அவர்களுக்கு கட்டளையிட்டார். [தொடக்க நூல் 2:16,17] ஆனால் அவர்களோ ஆண்டவரின் கட்டளைக்கு கீழ் படியாமல் அவர் சாப்பிடக் கூடாது என்று சொன்ன கனியை புசித்து தங்களின் தேவ மகிமையை இழந்து போனதால் பாவம் அவர்களை ஆற்கொண்டது. அவர்களின் வழி மரபில் வந்தவர்கள்தான் நாம் அனைவருமே. வாழ்வு தரும் வாழ்வாய் வந்த அவரை நாம் செய்த பாவத்தினால் அவர் நம்மை யாவரையும் மீட்கும் பொருட்டு மானிட தோற்றம் எடுத்து இந்த உலகத்தில் வந்து நம் பாவத்தை போக்க அவர் சிலுவை சுமந்து இரத்தம் சிந்தி நம்மை மீட்கும் பொருட்டு தன் உடலையே அப்பமாக புசிக்குபடி கொடுத்து வாழ்வு தரும் கனியாக தம்மை ஒப்புக்கொடுத்தார்.

நம் இதயம் நித்தமும் பொல்லாததாக இருப்பதைக்கண்டு [தொடக்க நூல் 6 :5] நம் ஒவ்வொருவரின் இதயத்தில் வாசம் செய்யும்படி நம் இதயத்தை கேட்பவராய் நம்முடைய அருகில் நிற்கிறார். ஏனெனில் நம் இருதயமே திருக்குள்ளதும், மகாகேடுள்ளதுமாய் இருக்கிறது, அதை அறியத்தக்கவன் யார்? என்று [எரேமியா 17:9]ல் வாசிக்கிறோம். நம் இதய சிந்தனைகளையும், உள்ளுணர்வுகளையும் சோதித்து அறியத்தக்கவர் அவர் ஒருவரே. ஆகையால் நாம் நம் இதயத்தை ஒவ்வொருநாளும் அவர் பாதப்படி வைத்து அவரை நம் முழு உள்ளத்தோடும் நோக்கி கூப்பிட்டால் நிச்சயமாகவே நம் இதயத்தில் வாசம் செய்வார். நாமும் நம்முடைய பாவத்துக்கு விலக்கி நல்ல வழியில் நடக்கலாம்.

இதோ நான் கதவு அருகில் நின்று தட்டிக்கொண்டு இருக்கிறேன். யாராவது என் குரலை கேட்டுத் கதவைத் திறந்தால்  [இதயக்கதவு] நான் உள்ளே சென்று அவர்களோடு வாசம் செய்து அவர்களோடு உணவு அருந்துவேன், அவர்களும் என்னோடு உணவு அருந்துவார்கள். [திருவெளிப்பாடு 3:20] சகோதர, சகோதரிகளே நாம் ஒருவருக்கொருவர் எதிராக முறையிடாமல் இருப்போம். இதோ நடுவர் நம் வாயிலில் நிற்கிறார். [யாக்கோபு 5:9] ஆகையால் நாம் யாவரும் அவர் மக்களாய் இருப்போம். அவரே நம் கடவுளாய் இருக்கட்டும். அப்பொழுது நமக்கு ஒரே இதயத்தையும், ஒரே நெறிமுறைகளையும் கொடுப்பார். நாமும் அவருக்கு அஞ்சி நம் நலனையும், நம் பிள்ளைகளின் நலனையும் கருத்தில் கொள்வோம். நம்மோடு எப்பொழுதும் நிலைத்திருக்கும் உடன்படிக்கையை செய்துக்கொள்வார். எனவே நமக்கு நன்மை செய்ய ஒருபோதும் தவறமாட்டார். அவரைப்பற்றிய அச்சத்தை நம் இதயத்தில் பதிய வைப்பார். நாமும் அவரை விட்டு விலகாமல் அவரை நம் இதய சிங்காசனத்தில் உட்கார வைத்து அவரிடத்தில் இருந்து வாழ்வு தரும் கனியை பெற்று எப்பொழுதும் விண்ணுலகில் அவரோடு வாசம் செய்து மகிழ்ந்து வாழ்வோம்.          [எரேமியா 32:39,40.]

ஜெபம்

எங்கள் இதயத்தில் வாசம் செய்யும் அன்பின் தகப்பனே உம்மை எங்கள் முழு உள்ளத்தோடு தொழுதுகொள்கிறோம். எங்களிடம் உள்ள கல்லான இதயத்தை எடுத்து போட்டு சதையான இருதயத்தை தர வேண்டுமாய் கெஞ்சிக் கேட்கிறோம். எங்கள் இதயம் உம்முடைய சிங்காசனமாக மாறட்டும். உம்முடைய சத்தத்தை எப்பொழுதும் கேட்டு நீர் விரும்பும் செயல்களை மாத்திரம் செய்து உம்மை சந்தோஷப்படுத்த உதவி செய்யும். உமது திருவுளச் சித்தப்படி செய்து உம்மில் மகிழ்ந்து களிகூற கிருபையை தாரும். உமது சத்தத்தை கேட்கும் ஞானத்தை அளித்தருளும். உமக்கே நன்றியை செலுத்துகிறோம். நீர் நல்லவர் பேரன்பு உள்ளவர். மன்னிக்கும் தேவன். துதி , கனம், மகிமை, மாட்சிமை, புகழ் யாவும் உமக்கே! உமக்கே!! ஆமென்!! அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.