பரிபூரண ஆசீர்வாதம்

அன்பார்ந்த இறை மக்களே! உங்கள் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள்.
நாம் ஒவ்வொருவரும் மிகவும் விரும்பும் காரியம் ஆசீர்வாதம். அதிலும் பரிபூரண ஆசீர்வாதம் கிடைத்தால் கூடுதல் சந்தோஷமே ஆனால் அந்த பரிபூரண ஆசீர்வாதத்தை எப்படி பெற்றுக்கொள்வது என்று யோசிப்போம். நீதிமொழிகள் 28:20 ல் இதைக்குறித்து வாசிக்கிறோம்.
நேர்மையாக அதாவது உண்மையாக நடப்பவர்களுக்குதான் கிடைக்கும் நீங்கள் நினைக்கலாம், உலகத்தில் எவ்வளவோ பேர்கள் அநியாயம் செய்து எல்லா ஆசீர்வாதங்களுடன் வாழவில்லையா? நீங்கள் கேட்பது சரியே. ஆனால் அவர்களின் வாழ்க்கையை உற்று பார்த்தீர்
களானால் அவர்கள் எப்படி சீக்கிரமாய் பெற்றுக்கொண்டார்களோ அப்படியே சீக்கிரம் காணாமல் போய்விடும். நீதிமொழிகள் 20:21.
இஸ்ரயேல் மக்களுக்கு கடவுள் சவுல் என்ற அரசரை நியமித்தார். காணாமல் போன கழுதையை தேடிச்சென்ற அவரை சாமுவேல் என்ற இறைவாக்கினர் ஆண்டவரின் திருவுளசித்தப்படி சவுலை
திருநிலைப்படுத்தி இஸ்ரயேல் மக்களுக்கு அரசராக நியமித்தார். சவுல் அரசராக பொறுப்பெடுத்து அந்நாட்டை ஆட்சி செய்த பொழுது நிறைய தடவைகளில் ஆண்டவரின் வார்த்தை மீறி செயல்படுவதாக 1 சாமுவேல் புத்தகத்தில் வாசிக்கிறோம். அதனால் கோபம் கொண்ட
கடவுள் அவரை அரசர் பதவியிலிருந்து விலக்கி தாவீதை ராஜாவாக நியமிக்கிறார். தாவீதும் கடவுளுக்கு பிரியமானவராய் வாழ்ந்து  ஆண்டவரின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்கிறார். என் இதயத்துக்கு ஏற்றவன் என்று தாவீதுக்கு கடவுளே புகழாரம்
சூட்டுகிரார். அதனால்தான் தாவீதும் “உம்முடைய சமூகத்தில் பரிபூரண ஆனந்தமும், உம்முடைய வலது பாரிசத்தில் நித்திய பேரின்பமும் உண்டு என்று சங்கீதம் 16:11 ல் பாடுகிறார்.
பிரியமானவர்களே! நாமும் தாவீதைப்போல் ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ள கடவுளுக்கு ஏற்புடையவர்களாய் வாழ விரும்புவோம். என்ன கஷ்டங்கள், பாடுகள் வந்தாலும் அவரின் மன விருப்பத்தை நிறைவேற்றுவதில் உறுதியாக இருப்போம். அவரது நிறைவில் இருந்து நாம் யாவரும் நிறைவாக அருள் பெறுவோம். யோவான் 1:16
ஆசீர்வாதம் உடனே கிடைக்கவில்லையே என்று ஒருவரும் சோர்ந்து போகாமல், அவரை உறுதியாய் பற்றிக்கொண்டு நிலையான நிறைவாழ்வை பெறுவோம். எரேமியா 33:6 . கடவுளும் தம் வாக்குறுதியை உரிமைப்பேறாகப் பெற்றோருக்குத் தம் திட்டத்தின் மாறாத தன்மையை மிகவும் தெளிவாக காட்ட விரும்பி,ஓர் ஆணையால் தம் வாக்கை உறுதிப்படுத்தினார். எபிரெயர் 6:17.

ஜெபம்:
அரசருக்கெல்லாம் அரசரே, ஆண்டவருக்கெல்லாம் ஆண்டவரே, நீர் ஒருவரே சாவை அறியாதவர், அணுக முடியாத ஒளியில் வாழ்பவர், உம்மை கண்டவர் யாரும் இல்லை, காணவும் முடியாத வேந்தரே, உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம், ஆராதிக்கிறோம். தகப்பனே நாங்கள் எல்லாவற்றிலும் பூரண ஆசீரை பெற்று வாழ கிருபை அளிப்பவரே உமக்கு நன்றி. உமது வாக்கும், பேரன்பும் எங்கள் ஒவ்வொருவரிடம் இருப்பதாக.ஆமென்,அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.