இரவு ஜெபம்

முன்:நாம் தூங்க செல்லும் முன் இந்த நல்ல நாளை நமக்குத்தந்து பல அருட்கொடைகளை
வழங்கிய இறைவனக்கு நன்றி செலுத்துவோம்.இன்று நாம் செய்ய தவறிய நம் கடைமைகளை
இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் எதாவது நன்மை செய்தருளித்தல் அவற்றைநம் அன்பின்
காணிக்கையாக இறைவனுக்கு ஒப்புக் கொடுப்போம்.

முன்:தந்தை,மகன்,தூய ஆவியின் பெயராலே.ஆமென்.
முன்:என் இறைவா!
அணை:என் இறைவா!உம்மை ஆராதிக்கிறேன்.என் முழு உள்ளத்தோடு உம்மை நேசிக்கிறேன்.என்னைக் உண்டாக்கி கிறிஸ்துவனாக்கி இந்த நாளில் என்னைக்
காப்பாற்றியதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன்.இன்று நான் செய்த தீமைகளுக்காக
என்னை மன்னித்தருளும்.எதாவது நன்மை செய்திருந்தால் அதை ஏற்றுக் கொள்ளும்.
நான் தூங்கும் பொழுது என்னைக்காப்பற்றி ஆபத்துகளிலே இருந்து என்னை விடுவித்தருளும்
உமது அருள் என்னோடும் நான் நேசிக்கும் அனைவரோடும் எப்போழுதும் இருப்பதாக
ஆமென்.

முன்:என் இறைவா !நன்மை நிறைந்தவர் நீர்.அனைத்திற்கும் மேலாக அன்புக்கு உரியவரும்
நீரே.

அணை:என் பாவங்களால் உம்மை மன நோகச்செய்தேன்,எனவே குற்றங்கள் பல செய்தேன்
எனவும் நன்மைகள் பல செய்ய தவறினேன் எனவும் மனம் நொந்து வருந்துகிறேன்.உமது
அருத்துனையால் மனந்திரும்பி இனிமேல் பாவம் செய்வதில்லை எனவும் உறுதி கொண்டுள்ளேன்.எங்கள் மீட்பராம் இயேசு கிறிஸ்துவின் பாடுகளில் பயணமாக இறைவா
என்னை மன்னித்தருளும்.
தலை:கர்த்தர் கற்பித்த செபம்
அணை:பரலேகத்தில் உள்ள எம்தந்தை உம்முடைய நாமம் புனிதம் எனப்போற்றப் பாடுவதாக
உமது அரசு வருக,உமது சித்தம் விண்ணுலகில் செய்யப்படுவது போல மண்ணுலகிலும்
செய்யப்படுவத்தாக.எங்கள் அன்றாட உணவை எங்களுக்கு இன்று அளித்தருளும்.எங்களுக்குப் தீமை செய்தவர்களை நாங்கள் பொருப்பது போல.எங்கள்
பாவங்களை பொறுத்தருளும்,எங்கள் சோதனையில் விழவிடாதேயும்.தீமைகளில் இருந்து
எங்களை விடுவித்தருளும்.ஆமென்.

முன்:எல்லாம் வல்ல தந்தையாம் இறைவனை விசுவாசிக்கிறேன்.

அணை:அவருடைய ஏகசுதனாகிய இயேசு கிறிஸ்துவையும் விசுவாசிக்கிறேன்.இவர்
பரிசுத்த ஆவியினால் கன்னிமரியிடமிருந்து பிறந்தார்.போஞ்சு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டுக்
சிலுவையில் அறையுண்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டவர்.பாதாளத்தில் இறங்கி மூன்றாம்நாள்
மரித்தோரிடம்மிருந்து உயிர்த்தெலூந்தர் பரலோகத்திற்கு எழுந்தருளி எல்லாம் வல்ல தந்தையாகிய
இறைவனின் வலது பக்கத்தில் வீற்றுருக்கிறார்.அவ்விடத்தில் இருந்து சீவியரையும் மரித்தவரையும்
நடுத்தீர்க்க வருவார்.தூய ஆவியை விசுவாசிக்கிறேன். புனிதர்களுடைய சமூக உறவை விசுவாசிக்கிறேன்.பாவ பொறுத்தலை விசுவாசிக்கிறேன் சரீர உயிர்ப்பையும் நித்திய வாழ்வையும்
விசுவாசிக்கிறேன்.ஆமென்.

முன்:என்றும் கன்னியான புனித மரியே!
அணை: என் ஆன்மாவைக்காத்டிட உதவியருளும்.

மங்கள வார்த்தை செபம்
அருள் நிறைந்த மரியே வாழ்க!கர்த்தர் உம்முடனே பெண்களுக்குள் பேறு பெற்றவள் நீரே!உம்
திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசீர் பெற்றவரே.புனித மரியே இறைவனின் தாயே
பாவிகளாகிய எங்களுக்காக எப்போதும் எங்கள் மரண வேளையிலும் வேண்டிக்கொள்ளும்.ஆமென்.

முன்:இயேசு,மரி,சூசை
அணை:என் இதயத்தையும் ஆன்மாவையும் உங்களிடம் ஒப்படைக்கிறேன்.

முன்:இயேசு,மரி,சூசை
அணை:என் மரண வேலையில் எனக்கு உதவி செய்ய வாருங்கள்.

முன்:இயேசு,மரி,சூசை
நமது திருத்தந்தைக்காகவும்,நமது ஆயர்களுக்காகவும் நாம் வேண்டிக்கொள்வோம்
அணை:கடவுளின் மக்களை நல்வழியில் நடத்திட ஆண்டவர் அவர்களை பாதுகாத்து அவர்களுக்கு
துனைபுரிவராக.

முன்:நம் பெற்றோர்,நமக்கு உதவிபுரிவோர் மற்றும் நாம் வேண்டிக்கொள்ள கடமைப்பட்டவர்களுக்காக,
அணை:நமக்கு நன்மை புரிவோருக்கு ஆண்டவர் முடிவில்லா வாழ்வைப் பரிசளிப்பாரக.
முன்:நம் உடன் உளைப்பாலர்களுக்காகவும் பழைய மாணவர்களுக்காகவும்,

அணை:தொன் போஸ்கோவின் படிப்பினையில் விசுவாசமாக இருக்கக் செய்து,ஆண்டவர் அவர்களை
தம் அருகில் வைப்பாராக.

முன்:மரித்த ஆன்மாக்களுக்காக.
அணை:ஆண்டவரே அவர்களுக்கு நித்திய இளைப் பாற்றியை அளித்தருளும்.முடிவில்லாத ஒளி
அவர்கள் மேல் ஒளிர்வதாக சமாதானத்தில் இளைப்பாறுவார்களாக
முன்:நம் இல்லத்திர்க்காக
அணை:திருக்குடும்பத்தை போன்று ஆண்டவர் நம்மைத் தமது அன்பிலும் சமாதானத்திலும்
வைத்துகாப்பாராக.
முன்:புனித தோன்போஸ்கோவை இளைஞர்களுக்குத் தந்தையும் ஆசிரியருமாக ஏற்படுத்தினீர்.

அனை:அவர் வழியாக கன்னி மரியாவின் துணையோடு உமது திருச்சபையின் புதிய சபைகள்
செழித்தோங்க செய்தீர்.நாங்களும் அதே அன்புத்தியால் பற்றி எரிந்து ஆன்மாக்களை தேடவும் உமக்கு
மட்டுமே ஊழியம் செய்யவும் எங்களுக்கு அருள் வேண்டும்மென்று ஆண்டவராகிய இயேசு கிருஸ்து
வழியாக உம்மை மன்றாடுகிறோம் ஆமென்.

முன்:கிருபை தயாபத்துக்கு மாதவாயிருக்கிற….
அணை:எங்கள் இராக்கினியே வாழ்க! எங்கள் சீவியமே,தஞ்சமே,மதுரமே வாழ்க! பரதேசிகலாயிருக்கிற நாங்கள் ஏவையின் மக்கள் உம்மைப்பார்த்து கூப்பிடுகிறோம்.இந்தக் கண்ணீர்
கணவாயிலே நின்று பிரலாபித்து அழுது உம்மை நோக்கிப் பெருமூச்சி விடுகிறோம்.ஆதலால்
எங்களுக்காக வேண்டி மன்றாடுகிற தாயே உம்முடைய தயாளமுள்ள திருக்கண்களை எங்கள் பேரில் திருப்பியருளும்.இதன்றியே நாங்கள் இந்தப் பிரதேசம் கடந்த பிற்பாடு உம்முடைய திருவயிற்றின்
கனியாகிய இயேசு நாதருடைய பிரத்தியட்சனமான தரிசனத்தை எங்களுக்குப் தந்தருளும்.கிருபாகரியே! தயாபரியே! பேரின்ப ஆன்புமிகு கன்னி மரியே.ஆமென்.

முன்: அருள் நிறைந்த மரியே வாழ்க ஆண்டவர் உம்முடனே, பெண்களுக்குள் ஆசிர்வதிக்கப்பட்டவள்
நீரே, உம்முடைய திருவயிற்றின் கனியாகிய இயேசுவும் ஆசிர்வதிக்கப்பட்டவரே.

புனித மரியே! இறைவனின் தாயே,பாவிகளாய் இருக்கிற எங்களுக்காக எப்போழுதும் எங்கள் மரண
நேரத்திலும் வேண்டிக் கொள்ளும்.ஆமென்.

பிதாவுக்கும் சுதனுக்கும் தூய ஆவிக்கும் மகிமை உண்டாவதாக……

ஆதியில் இருந்ததுபோல் இப்பொழுதும், எப்பொழுதும் என்றென்றும் இருப்பதாக.ஆமென்.

தலைவர்: எல்லாம் வல்ல இறைவன் தந்தை,மகன்,தூய ஆவி அனைவரையும் ஆசிர்வதிப்பாராக.ஆமென்.

முடிவுப் பாடல்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: