Tagged: இன்றைய சிந்தனை

புத்தாண்டு, கன்னி மரியாள் – இறைவனின் தாய் பெருவிழா

கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக ! புதிய ஆண்டின் முதல் நாளாகிய இன்று நமது பதிலுரைப் பல்லவி இவ்வாறு இறைவனின் ஆசியை வேண்டுகிறது: “கடவுளே, எம்மீது இரங்கி எமக்கு ஆசி வழங்குவீராக”. என்ன அருமையான வேண்டுதல்! ஆண்டின் முதல் நாளில் மட்டுமல்ல, ஆண்டின் ஒவ்வொரு நாளும் காலை தோறும் நாம் எழுப்ப வேண்டிய நல்லதொரு வேண்டுதல். இந்த வேண்டுதல் நமக்கு இரண்டு இறையியல் உண்மைகளை நினைவூட்டுகிறது: 1. இறைவனின் ஆசி இன்றி, நம்மால் வெற்றி பெற இயலாது. நமது பணிகள் பலன் தரமாட்டாது. எனவே, இறைவனின் துணையுடனே நமது அன்றாடக் கடமைகள் ஆற்றப்பட வேண்டும். 2. இறைவன் இரக்கம் நிறைந்தவர், அவரது பேரிரக்கம் நம்மோடு என்றுமுள்ளது. நாம் கேட்காமலே நம்மீது இரக்கம் பொழியும் இறைவன், ஆவலோடு வேண்டும்போது நிச்சயம் ஆசிகளை மழையெனப் பொழிவார். திருப்பாடல் 67 ஒரு நன்றிப் புகழ்ப்பா. “நரம்பிசைக் கருவிகளுடன் பாடவேண்டிய புகழ்ப்பாடல்” என மூல...

வாழ்வின் சோதனைகள்

1யோவான் 2: 18 – 21 சோதனை என்பது வாழ்வின் எல்லாருக்கும் வரக்கூடியது. ஒரு சிலர் சோதனைகளைத் தாங்க முடியாமல், அந்த சோதனைகளுக்கு பலியாகி விடுகின்றனர். ஒரு சிலர் அதனை எதிர்த்து நிற்கின்றனர். மற்றும் சிலர், சோதிக்கிறவர்களோடு சேர்ந்து கொள்கிறார்கள். இன்றைய வாசகம், இப்படிப்பட்டவர்கள் மட்டில், எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்துகிறது. நாம் கிறிஸ்துவோடு இருக்கிறபோது, நமக்கு பல்வேறு சோதனைகள் வரும். கிறிஸ்துவுக்கு எதிராக இருக்கிறவர்கள் இந்த சோதனைகளை நமக்கு ஏற்படுத்துவார்கள். நம்மை கிறிஸ்துவிடமிருந்து பிரிக்க முயற்சி எடுப்பார்கள். நாம் அவர்களின் சோதனைகளுக்கு பலியாகி விடக்கூடாது என்பது தான், யோவான் தன்னுடைய கடிதத்தில் குறிப்பிடுகிறார். ஏனென்றால், எதற்காக நாம் இதுவரை காத்திருந்தோமோ, அந்த காலம் வந்து விட்டது. கிறிஸ்துவுக்காக காத்திருந்த காலம் கனிந்து விட்டது. இந்த காலத்திற்காகத்தான் இவ்வளவு நாட்கள் நம்மையே நாம் தயாரித்துக் கொண்டு இருந்தோம். இவ்வளவு நாட்கள் பொறுமையாக இருந்த நாம், இந்த சோதனையான காலத்திலும்...

அன்னாவின் எதிர்நோக்கு

யூதர்களைப் பொறுத்தவரையில் தங்களது நாடு கடவுளால் சிறப்பாக தேர்ந்தெடுக்கப்பட்ட நாடு என்ற எண்ணம் இருந்தது. மற்றவர்களை தாங்கள் ஆளுவதற்காகவே பிறந்தவர்கள் என்கிற சிந்தனையும் அவர்களின் உள்ளத்தில் இருந்தது. ஆனாலும், இது மனித வழிகளைக் கொண்டு நிறைவேற்ற முடியாது, கடவுளின் உதவியுடன் தான் நிறைவேற்ற முடியும் என்று நினைத்தனர். அதற்கான காலம் கனியும்போது, தாங்கள் நினைத்தது அனைத்தும் நடைபெறும் என்று நம்பினர். இந்த நம்பிக்கையுடன் வாழ்ந்தவர்கள் பலர் இருந்தார்கள். இதனைப்பற்றி பல கருத்துக்கள் மக்கள் மனதில் தங்கியிருந்தது. ஒரு சிலர் கடவுள் யாரையாவது அனுப்புவார் என்று காத்திருந்தனர். மற்றும் சிலர், கடவுளே நாம் எதிர்பார்க்காத முறையில் வந்து, அனைத்தையும் மாற்றுவார் என்று எண்ணினர். மற்றும் ஒருசிலர், இதுபோன்றதை நம்பாமல், விடாத செபத்திலும், நடப்பவற்றை அமைதியான முறையிலும் கவனத்தோடு கண்காணித்துக்கொண்டிருந்தனர். நிச்சயமாக இயல்பாகவே கடவுளின் நாள் வரும் என்று நம்பிக்கையோடு எதிர்நோக்கியிருந்தனர். அதில் ஒருவா் தான் இன்றைய நற்செய்தியில் வரும் அன்னா என்கிற பெண்....

ஆன்மீகம் நிறைந்த குடும்பங்கள் !

இன்று திருக்குடும்ப விழாவைக் கொண்டாடுகிறோம். ஒவ்வொரு குடும்பமும் ஆண்டவர் இயேசுவின் ஆசிபெற்ற குடும்பமாக விளங்க இன்று சிறப்பாக மன்றாடுவோம். குடும்பங்கள் பலவிதமான சிக்கல்களைச் சந்திப்பதை இன்று பார்க்கிறோம். மண முறிவுகள், பிளவுகள், ஊடகங்களின் தாக்கத்தால் அறநெறிச் சிக்கல்கள் போன்றவை குடும்பத்தின் ஆணி வேரையே அசைத்துப் பார்க்கின்றன. திருமணம் செய்யாமல், குடும்ப வாழ்வுக்குள் நுழையாமல் விருப்பம்போல் வாழலாம் என்னும் மனநிலை மெல்ல, மெல்ல பரவி வருகிறது. எனவே, குடும்பங்களை உறுதிப்படுத்தும் பணியை நாம் அக்கறையுடன் ஆற்றவேண்டும். குடும்பங்கள் ஆன்மீகம் நிறைந்தவையாகத் திகழ்ந்தால்தான், இன்றைய சவால்களைச் சந்திக்க முடியும். இந்த குடும்பங்களின் ஆன்மீகம் இறைநம்பிக்கை, நற்பணி, நல்லுறவு, நற்செய்தி அறிவி;ப்பு என்னும் நான்கு தளங்களில் கட்டப்பட வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் நாள்தோறும் செபித்து, இறைவார்த்தையின்படி, அருள்சாதனங்களில் பங்கேற்று வாழ்வதே இறைநம்பிக்கையின் வெளி;ப்பாடு. தங்கள் கடமைகளை நேர்மையுடனும், கடமையுணர்வுடனும் நேர்த்தியாக ஆற்றுவது நற்பணியின் வெளிப்பாடு. பல்வேறு விதமான உறவுகளில் பாராட்டு, மன்னிப்பு, விட்டுக்கொடுத்தல், இழத்தல் போன்ற...

புனித மாசில்லாக் குழந்தைகள் – மறைச்சாட்சியர் விழா

மாசற்ற குழந்தைகள் திருவிழா மாசற்ற குழந்தைகள் தினம் என்றால் என்ன? இதனைக் கொண்டாடுவதன் நோக்கம் என்ன? உரோமை அரசால், யூதர்களை ஆள்வதற்கு என்று நியமிக்கப்பட்ட ஏரோது அரசரால் கொல்லப்பட்ட குழந்தைகளைத்தான், மாசற்ற குழந்தைகள் தினமாக, திருச்சபை கொண்டாடுகிறது. ஏரோது எதற்காக, ஒன்றுமறியாத பச்சிளங்குழந்தைகளைக் கொல்ல வேண்டும்? ஞானிகளால் மெசியா பிறந்திருக்கிறார் என்பதை அறிந்த ஏரோது, குழந்தையினால் தன்னுடைய அரசுக்கு ஆபத்து என்று நினைத்தான். ஆனால், எந்த குழந்தை தன்னுடைய பதவிக்கு ஆபத்தாக வருகிறது என்பதை அவனால் கண்டுபிடிக்க முடியவில்லை. தன்னுடைய பதவியை காப்பாற்றுவது ஒன்றே, அவனுடைய இலக்காக இருந்தது. அதற்காக எத்தனை குழந்தைகளை பழிகொடுத்தாலும் தகும் என்று நினைத்தான். அவர்கள் அனைவரையும் ஈவு, இரக்கமில்லாமல் கொன்றொழித்தான். எத்தனை குழந்தைகள் கொல்லப்பட்டார்கள் என்பது தெளிவாக இல்லை. ஆனால், கொல்லப்பட்ட குழந்தைகள் அனைவருமே, திருச்சபையினால் மறைசாட்சிகளாக அறிவிக்கப்பட்டிருக்கின்றனர். அதிகார வெறிக்கு பழிகடாக்கள் தான் இந்த மாசற்ற குழந்தைகள். இன்றைக்கு பெற்றோர், தாங்கள் நிறைவேற்ற முடியாத...