Tagged: இன்றைய சிந்தனை

ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்

திருப்பாடல் 119: 23 – 24, 26 – 27, 29 – 30 ”ஆண்டவர் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்” இறைவன் மோசே வழியாக இஸ்ரயேல் மக்களை தான் வாக்களித்த நாட்டிற்கு வழிநடத்தினார் என்பதை, மீட்பின் வரலாறு நமக்கு தெளிவாக உணர்த்துகிறது. இந்த மீட்பின் வரலாற்றில் பல இலட்சக்கணக்கான மக்களை வழிநடத்துவது என்பது எளிதான காரியமல்ல. அவர்களைக் கட்டுக்கோப்பாக வன்முறையில்லாமல், பாதுகாப்பாக வழிநடத்த வேண்டுமென்றால், இறைவனின் துணையும், அவர் கொடுத்திருந்த வழிமுறைகளையும் கடைப்பிடிப்பது அவசியமாகிறது. இத்தகைய எண்ணத்தை வலியுறுத்தக்கூடிய வகையில் அமைந்ததுதான், இந்த திருப்பாடல். கடவுளின் திருச்சட்டத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்துகிறார். கடவுளின் சட்டப்படி நாம் நடக்கிறபோது, நமது வாழ்க்கையில் நாம் இடறி விழமாட்டோம். கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், நமது வாழ்க்கையில், நாம் துணிவோடு நடப்பதற்கு, அது வழிசெய்யக்கூடியதாக இருக்கிறது. நம்மை அரவணைத்துச்செல்லக்கூடியதாக இருக்கிறது. சிதறிக்கிடந்த இஸ்ரயேல் மக்களை ஒன்றுசேர்ப்பதற்கு உதவியாக இருந்தது...

நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே

திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19 ”நீதியுள்ளோர் ஆண்டவரைப்புகழ்வது பொருத்தமானதே” இந்த உலகத்தில் நீதிமான்களை எல்லாருமே புறந்தள்ளிவிடுகிறார்கள். அவர்களை எள்ளி நகையாடுகிறார்கள். அவர்களை ஒரு பொருட்டாக மதிப்பதில்லை. அவர்கள் அனைவராலும் ஏளனமாகப் பார்க்கப்படுகிறார்கள். எதற்காக? ஏன் அவர்கள் இப்படிப் பார்க்கப்படுகிறார்கள்? அவர்கள் நீதியோடு, நேர்மையோடு வாழ வேண்டும் என்பது, இந்த உலகத்தின் பார்வையில் வாழத்தெரியாத மனிதர்களாக அவர்களை அடையாளம் காட்டுகிறது. அதுமட்டுமல்லாது, அவர்கள் நேர்மையாக வாழ்ந்ததால், அவர்கள் பல துன்பங்களையும் சந்திக்க நேரிடுகிறது. அந்த துன்பங்களைப் பார்க்கிறபோது, நாம் ஏன் நேர்மையோடு வாழ வேண்டும் என்கிற எண்ணம் நமக்குள்ளாக வருகிறது. ஆனால், இதுதான் சரியான வாழ்க்கை, இப்படி வாழ்வது தான் இறைவனுக்கு ஏற்புடைய வாழ்க்கை என்பதை, திருப்பாடல் ஆசிரியர் வலியுறுத்திச் சொல்கிறார். அது கடினமான வாழ்க்கை தான். இந்த உலகத்தின் பார்வையில் பரிகாசம் செய்யப்படக்கூடிய வாழ்க்கை தான். ஆனாலும், அந்த வாழ்க்கையின் நிறைவை,...

நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு

திருப்பாடல் 27: 1, 4, 13 – 14 ”நெஞ்சே ஆண்டவருக்காகக் காத்திரு” ஒருவரின் உள்ளத்தில் கவலையும் கலக்கமும் எழுகிறபோது, பலவிதமான கேள்விகள் உள்ளத்தில் தோன்றுகிறது. கடவுள் இருக்கிறாரா? அப்படி இருந்தால் இவ்வளவு கவலைகள் நமது வாழ்க்கையில் வருமா? இந்த கேள்விகள் எல்லாருக்கும் தோன்றாது. மாறாக, கடவுளுக்கு பயந்து வாழக்கூடிய ஒரு சிலருடைய வாழ்வில் நிச்சயம் இது தோன்றும். இந்த கேள்விகள் எழக்கூடிய தருணங்கள் கடினமான, கடுமையான தருணங்கள். காரணம், நம்பிக்கை இழக்கக்கூடிய தருணங்களில் மற்றவர்களின் வழிகாட்டுதல் இல்லையென்றால், அது கடவுள் நம்பிக்கையோ சீர்குலைத்துவிடும். இப்படிப்பட்ட மோசமான தருணத்தில் தான், திருப்பாடல் ஆசிரியரும் இருக்கிறார். அவருடைய உள்ளத்தில் பலவிதமான கேள்விகள் தோன்றுகிறது. அவைகளுக்கு அவரால் பதில் சொல்லி சமாளிக்க முடியவில்லை. என்ன செய்வது? எப்படி இந்த கேள்விகளுக்கு பதில் சொல்வது என்கிற ஏக்கம் அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுவதை நம்மால் உணர முடியும். இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலாக அவர், ”காத்திரு” என்கிற பதிலை...

ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்

திருப்பாடல் 34: 1, 8, 16 – 17, 18 – 19 ”ஆண்டவர் எத்துணை இனியவர் என்று சுவைத்துப் பாருங்கள்” ஒரு மனிதரைப்பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால், அவருடைய நெருக்கமானவரிடத்தில் கேட்டால் முழுமையாக அறிந்து கொள்ளலாம். இந்த உலகத்தில் இருக்கிற மனிதர்கள் ஒவ்வொருவருமே ஒவ்வொருவிதமான ஆளுமையைப் பெற்றவர்கள். ஒரு சிலரைப் பார்த்தால் பயமாக இருக்கும். ஒரு சிலரைப் பார்த்தால் பேச வேண்டும் என்பது போல இருக்கும். ஆனால், வெளித்தோற்றத்தை வைத்து ஒருவரை நாம் எடைபோட்டு விட முடியாது. வெளியில் சிரித்துக்கொண்டிருக்கிறவரின் பின்புலம் மோசமானதாகக் கூட இருக்கலாம். ஒருவரிடம் உள்ள நெருக்கம் தான், அவரைப்பற்றி முழுமையாக அறிந்து கொள்ள உதவுகிறது. கடவுள் இனியவர் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். காரணம், அவர் கடவுளை முழுமையாக சுவைத்திருக்கிறார். முழுமையாக அனுபவித்திருக்கிறார். கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் அதிகமாக பெற்றிருக்கிறார். எனவே தான், கடவுளை அவர் இனியவர் என்று சொல்கிறார். கடவுளின் இனிமையை நாம் சுவைக்க...

ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 ”ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்” விவிலியத்தில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள் யார்? ஏழைகளை நாம் இரண்டு வகையாகப் பார்க்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஏழைகள் என்று நாம் சொல்கிறோம். அதேபோல, கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும் ஏழைகள் என்று சொல்கிறோம். இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்க வேண்டும் என்ற நியதில்லை. ஆனால், பணம் இருந்தாலும், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்கிறவர்கள், கடவுளை தங்களது முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள். இறைவன் இந்த இரண்டு பேரையுமே கருத்தில் கொள்கிறார். அதாவது, இந்த உலகத்தில் யாரெல்லாம் நிர்கதியில்லாமல் இருக்கிறார்களோ, கடவுளே தங்களது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும், கடவுள் கண்ணோக்குகிறார். அவர்களது குரலுக்கு செவிசாய்க்கிறார். கடவுள் எப்போதுமே, இந்த சமுதாயத்தின் தாழ்நிலையில் இருக்கிறவர்களை கைதூக்கி விடக்கூடியவராக இருக்கிறார். அவர்களது நிலைகண்டு மனம் வெதும்புகிறவராக, அவர்களும் நல்வாழ்வு...