Tagged: இன்றைய சிந்தனை

முழந்தாளிடு முன்னேற்றத்தைப் பாரு…

லூக்கா 6:12-19 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். ஜெபிக்கும் போது நாம் கடவுளோடு உறவாடுகிறோம். நம்முடைய ஜெபம் நமக்கு ஜெயத்தை தர வல்லது. ஜெபத்தில் நாம் கடவுளின் அதிசயத்தை கண்டுணர்கிறோம். ஜெபத்தில் நம்முடைய குறைகளைக் கண்டுபிடித்து நிறைவை நோக்கி பயணம் செய்ய முடிகிறது. முழந்தாளிட்டு ஜெபிக்கும் போது நம் வாழ்வில் முன்னேற்றம் முந்திக்கொண்டு வரும் என்பதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தின் முக்கிய செய்தி. முழந்தாளிட்டு நன்கு ஜெபிக்கும் போது பல செயல்களை நாம் மிகவும் எளிமையாக செய்ய முடிகிறது. அவற்றுள் இரண்டு இன்று. 1. குறிக்கோளை குறி வைக்கலாம் ஜெபிக்கும் போது நம் வாழ்விற்கான குறிக்கோள் மிகவும் தெளிவாகிறது. பலருக்கு குறிக்கோள் இருக்கிறது. ஆனால் சில காலங்களிலே...

நன்மைக்கு விடுமுறை இல்லை

லூக்கா 6:6-11 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கையை நீட்டி நன்மையை பெறுகின்ற ஒவ்வொரு கிறிஸ்தவா்களும் நன்மை செய்ய வேண்டும் என்ற அழைப்பைப் பெறுகின்றார்கள். நன்மை என்று ஆண்டவரின் உடலை எதற்காக சொல்கிறோம்? நாம் நன்மை செய்பவர்களாக மாற வேண்டும் என்பதற்காகவே. இயேசு நடந்த இடமெல்லாம் நன்மையை மட்டுமே செய்தார். நாமும் அப்படி செய்ய வேண்டும் என்ற அழுத்த திருத்தமான அறிவிப்போடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். நன்மை செய்யும் போது நாம் இரண்டு காரியங்களை கண்டுக்கொள்ளவே கூடாது. 1. குறைகளைக் கண்டுக் குனியாதே நாம் நன்மைகள் செய்யும் போது பல விதமான விமர்சனங்கள் வரும். அவைகள் நம் நன்மைகளுக்கு தடையாக இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும். நாம்...

கிறிஸ்துவே முழுமுதற்செல்வம்

”கிறிஸ்துவின் பொருட்டு அனைத்தையும் குப்பையென்று கருதுகிறேன்” என்று, பவுலடியார் சொல்வார். இன்றைய நற்செய்தியின் சாராம்சத்தைத்தான், பவுலடியார் நிச்சயம் தன் வாழ்வில் அனுபவித்து இதனைச் சொல்லியிருக்க வேண்டும். இயேசுவின் சீடராக இருக்க வேண்டியவர் எப்படி இருக்க வேண்டும்? அவருக்குரிய தகுதிகளாக இயேசு கிறிஸ்து எதிர்பார்ப்பது என்ன? எப்படி நாம் இயேசுவின் சீடர்களாக மாற முடியும்? இந்த கேள்விகளுக்கான பதில் அனைத்தும், இன்றைய வாசகத்தில் காணப்படுகிறது. கிறிஸ்துவை முழுமுதற்செல்வமாக நாம் பெற வேண்டுமென்றால், நமது வாழ்வில் நாம் பலவற்றை இழந்துதான் ஆக வேண்டும். ஆனால், கிறிஸ்துவை நாம் பெறுகிறபோது, நமக்கு வேறு எதுவும் நிச்சயம் தேவையில்லை தான். ஏனென்றால், கிறிஸ்து தான் நமது வாழ்வின் இலக்காக இருக்கிறார். ஓட்டப்பந்த வீரன் ஒருவனுக்கு வெற்றி ஒன்று தான் இலக்காக இருக்க முடியும். அதற்காக, அவன் எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறான். அந்த வெற்றி ஒன்று தான் வாழ்வின் இலக்காக இருக்கிறது. அதை அடைகிறபோது, மற்ற இழப்புகள்,...

மகிழ்ச்சியாக இருக்க விடுங்கள்…

லூக்கா 5:33-39 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் மகிழ்ச்சியாக இருப்பதை விரும்பாத ஒருசிலர் எதையாவது, அவசியமில்லாததைச் சொல்லி நம்முடைய மகிழ்ச்சியை தடைசெய்ய அதிக ஆசைப்படுவர். அவர்களைக் காணும் போது எப்படி நடந்துக் கொள்ள வேண்டும் என்பதை இன்றைய நற்செய்தி வாசகம் சொல்லித் தருகிறது. 1. கண்டுக்கவே வேண்டாம் கேட்க வேண்டும். ஆனால் அதற்கு பதில் பேசக் கூடாது. அதை பெரிதாக எண்ணக் கூடாது. பெரிதாக எண்ணினால் அவர்கள் பெரிய ஆளாக மாறிவிடுவார்கள். நம் மகிழ்ச்சி பறிபோகும். இயேசு பரிசேயர்கள், சதுசேயர்கள் பேசும்போது கையாண்ட பாணியை நாம் கையாள வேண்டும். 2. கறைப்படுத்தவே வேண்டாம் நம் மகிழ்ச்சிக்கு தடையாக இருக்கும் மனிதர்களை ஏதாவது செய்ய வேண்டும் என்ற...

கடவுள் செய்யும் நல்லது எதற்கு?

லூக்கா 4:38-44 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். நாம் பிறந்த நாளிலிருந்து நம்மோடு இருந்து நம்மை வழிநடத்தும் ஆண்டவர் நமக்கு எந்தக் குறையும் வைப்பதில்லை. சிங்கக்குட்டிகள் பட்டினி இருந்தாலும் ஆண்டவரைத் தேடுவோருக்கு எந்தக் குறையும் இராது என்பது நமக்குத் தெரியும். நாம் இன்பமாக இருக்கும்போது நம்மோடு இணைந்து மகிழ்கிறார். துன்பமாக இருக்கும்போது நமக்கு துணையாக இருக்கிறார். இப்படி உதவி செய்யும் கடவுள், இப்படி நமக்கு நல்லது செய்யும் கடவுள் அவர் நம் நல்வாழ்விற்கு காரணமாக இருப்பது போல நாமும் அடுத்தவர் நல்வாழ்விற்கு காரணமாக இருக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றார். அதுதான் இன்றைய நற்செய்தி வாசகத்தில் பேதுரு மாமியார் வழியாக விளக்கப்படுகிறது. பேதுருவின் மாமியார் இறைவனிடமிருந்து ஆசீர்வாதம் பெற்று...