Tagged: இன்றைய வசனம் தமிழில்

நன்றியுணர்வு

நன்றி மறப்பது நல்லதன்று என்று வள்ளுவர் கூறுகிறார். நமது வாழ்வில் நாம் பல மனிதர்களுக்கு நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும். ஆனால், நன்றியுணர்வு என்கிற வார்த்தையும், அதற்கான பொருளும் இன்றைய சமூகத்தில் ஒரு பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. செய்த நன்றியை மறப்பது, நாம் தற்கொலை செய்துகொள்வதற்கு சமம். நன்றி என்ற வார்த்தைக்கு, இன்றைய நற்செய்தி வாசகத்தல் எடுத்துக்காட்டுக்களாக செக்கரியாவும், எலிசபெத்தும் சித்தரிக்கப்படுகிறார்கள். எலிசபெத்தம்மாளுக்கு பல வருடங்களாக குழந்தை இல்லை. குழந்தை பெறக்கூடிய வயதையும் கடந்துவிட்டாள். அந்த தருணத்தில் கடவுளின் அருள் அவளுக்கு கிடைக்கிறது. குழந்தை பாக்கியத்தைப் பெற்றுக்கொள்கிறாள். தான் பெற்றெடுக்கப்போகும் குழந்தைக்கு, யோவான் என்று பெயரிட பணிக்கப்படுகிறார்கள். பொதுவாக, குழந்தைக்கான பெயரை தாயோ, தந்தையோ தேர்ந்தெடுப்பார்கள். அந்த பெயர்களில் தங்களின் நெருக்கமான உறவுகளின் பெயரையோ அல்லது தந்தை, தாயின் பெயரையோ வைப்பது இன்றைக்கும் நம் மத்தியில் காணப்படுகிறது. அதேபோல செக்கரியாவின் உறவினர்கள் எதிர்பார்க்கின்றனர். ஆனால், செக்கரியாவும், எலிசபெத்தம்மாளும் கடவுள் செய்த நன்மைகளுக்கு, நன்றியுணர்வோடு...

இறைவனின் அருள்

இறைவனுடைய அருளைப்பெறுவது என்பது மிகப்பெரிய பேறு. அதற்கு ஈடுஇணை இந்த உலகத்திலே எதுவும் கிடையாது. அதற்கு மேல் பெறக்கூடிய சிறப்பு இந்த உலகத்திலே இல்லை. மரியாளுக்கு கடவுளுடைய வார்த்தை அறிவிக்கப்பட்டபோது, இத்தகைய மகிழ்ச்சி அவளுள் நிறைந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஏனென்றால், வானதூதர் அவளைப்பார்த்து, ”அருள்மிகப்பெற்றவரே!வாழ்க!” என்று வாழ்த்துகிறார். கடவுளுடைய அருளை அன்னை மரியாள் பெற்றிருக்கிறாள் என்பதுதான் இதனுடைய பொருள். ஆக, அந்த வார்த்தைகள் அன்னை மரியாளுக்கு சொல்ல முடியாத அளவுக்கு ஆனந்தத்தைக் கொடுத்திருக்கும். அதே வேளையில், கடவுளின் அருள் மற்றொரு அனுபவத்தையும் தாங்கியதாக இருக்கும். அதுதான் மரியாளின் இதயத்தை வாளாக ஊடுருவ இருப்பதாகும். கடவுளின் அருள் கொடுக்கப்படுவது பெற்றுக்கொண்டு வைத்திருப்பதற்கு மட்டும் அல்ல. அது வாரி வழங்கப்படுவதற்காக கொடுக்கப்படுகிறது. அதில், நாம் நமது வாழ்வை, தியாகம் செய்ய வேண்டியது வரலாம். இழப்புகளைச் சந்திக்கலாம். ஆனால், கடவுளின் அருளைப்பெறுவதற்கு, எதையும் இழப்பதற்கு தயாராக இருக்கிறேன் என்பதுதான், அன்னை மரியாளின் வாழ்வாக இருந்தது....

நேர்மையுற்றோரின் வாழ்வு

கடவுளின் தூதர் மரியாளை வாழ்த்துகிறபோது, மரியாள் கலங்குகிறாள். “இந்த வாழ்த்து எத்தகையதோ” என்ற அச்சம் கொள்கிறாள். மரியாள் எதற்காக கலங்க வேண்டும்? கடவுளின் தூதரே அவரை வாழ்த்துகிறபோது, அவள் மகிழ்ச்சி தானே கொண்டிருக்க வேண்டும். அதை விடுத்து, அவள் கலங்குவது எதற்காக? என்ற கேள்வி நிச்சயம் நமது உள்ளத்திலே எழும். யார் நம்மைப் புகழ்ந்தாலும், அதிலே மகிழ்ச்சி அடைவதை விட, அதில் நாம் எச்சரிக்கை உணர்வு கொண்டிருப்பது மிக முக்கியமானதாகிறது. யார் நம்மைப் புகழ்கிறார்களோ அவர்கள் மட்டில் கொண்டிருக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வல்ல, நமது வாழ்வை இதே போன்று வாழ வேண்டும் என்கிற எச்சரிக்கை உணர்வு நமக்குத் தேவைப்படுகிறது. இதுவரை சிறப்பாக வாழ்ந்திருக்கிறோம். இனியும், மற்றவர்களின் நல்ல வார்த்தைகளுக்கு ஏற்ப, புகழ்ச்சிக்கு ஏற்ப, நமது வாழ்வை வாழ வேண்டிய பொறுப்புணர்வு இங்கே நமக்கு தேவைப்படுகிறது. அந்த பொறுப்புணர்வு, இவ்வளவு நாள் வாழ்ந்த வாழ்வை, இனிவரக்கூடிய நாட்களிலும் சிறப்பாக வாழ வேண்டிய, அந்த...

மனஉறுதி

கடவுள் நம்பிக்கை உள்ளவர்களும், கடவுள் மீது பற்று உள்ளவர்களும் தங்களது வாழ்வில் சந்திக்கும் சோதனை, பல மடங்கு வேதனையானது. ஏனென்றால், மக்களின் கேலிப்பேச்சுக்களும், உள்ளத்தைக் காயப்படுத்தும் பேச்சுக்களும் அடிக்கடி வாழ்வில் நடக்கக்கூடியதாக இருக்கும். கடவுள், கடவுள் என்று பின்னால் சென்றானே, கடவுள் இவனுக்கு என்னதான் கொடுத்தார், என்ற எகத்தாளப் பேச்சுக்கள், மக்கள் நடுவில் அன்றாடம், நாம் பார்க்கக்கூடிய நிகழ்வு. இப்படிப்பட்ட ஒரு நிலையில் தான் செக்கரியா மாட்டிக்கொண்டார். செக்கரியாக ஒரு குரு. கடவுளுக்கும், மனிதருக்கும் இடையே பாலமாக இருக்கக்கூடியவர். மக்களின் விண்ணப்பங்களை, தான் செலுத்தும் பலி மூலமாக, இறைவனிடம் எடுத்துச்சொல்கிறவர். அப்படிப்பட்ட, குருவுக்கு மிக்ப்பெரிய குறை வாழ்வில் இருந்தது. அதுதான் குழந்தை இல்லாத குறை. நிச்சயம் பலபேருடைய ஏளனத்திற்கு அவர் ஆளாகியிருப்பார். பலிசெலுத்துகிறபோதெல்லாம், தனக்காக, தன்னுடைய மனைவிக்காக மன்றாடியிருப்பார். ஆனால், ஒன்று தெளிவாகத்தெரிகிறது. அவர் சோர்ந்து போகவில்லை. உறுதியாக இருக்கிறார். எனவே தான், இத்தனை ஆண்டுகளானாலும், உண்மையான கடவுளை விட்டு விலகிச்செல்லாமல்...

இயேசு என்னும் மீட்பர் !

அவருக்கு இயேசு என்று பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார் என்பது வானதூதரின் செய்தி. இயேசு என்னும் பெயருக்கு மீட்பர் என்பது பொருள். இயேசு நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பவர் என்பதே அவரது பெயரின் பொருள். கிறிஸ்துமஸ் விழா தரும் செய்தியும் இதுவே. அவர் நம்மைப் பாவங்களிலிருந்து மீட்பார், விடுவிப்பார். நமது பாவங்களிலிருந்து நாம் நமது சொந்த முயற்சியினால் விடுதலை பெற முடியாது. நமது இயல்பே பாவம் செய்வதற்கேற்ற இயல்பாக அமைந்திருப்பதால், நமது சொந்த ஆற்றலால் விடுதலை பெறவும் இயலாது. எனவே, இயேசுவின் அருளை நாடுகிறோம். அவரது மீட்புக்காக வேண்டுகிறோம். இந்தக் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது, நமது வாழ்வில் அவரது மீட்பு நிறைவாகக் கிடைக்க வேண்டுமென்று சிறப்பாக மன்றாடுவோம். மன்றாடுவோம்: மீட்பு வழங்கும் நாயகனாம் இயேசுவே, எங்களைப் பாவத்திலிருந்தும், தீமைகள் அனைத்திலிருந்தும் விடுவிக்க வந்தீரே, உம்மைப் Nபுhற்றுகிறோம். உமது மீட்பு இந்த அருளின் காலத்தில் எம்மீது நிறைவாய் இறங்குவதாக....