Tagged: தேவ செய்தி

வாழ்வு என்னும் கொடையைப் போற்றுவோம்

இழப்பீடு என்பது இழப்பிற்கு சமமான ஒன்றைக் கொடுப்பதாகும். நாம் ஏதாவது பொருளை இழந்து விட்டால், அல்லது மழை, வெள்ளத்தில் நமது பொருட்களை இழந்துவிட்டால், அரசாங்கம் நமக்கு இழப்பீடு தருகிறது. அரசாங்கம் தரக்கூடிய இழப்பீடு நூறில் ஒரு பங்குக்கு கூட சமமாகாது என்பது வேறு கதை. ஆனால், இழப்பீடு வழங்குகிறது. அதேபோலத்தான், விபத்திற்கென்று இழப்பீடு, மருத்துவ இழப்பீடு என்று, இதில் பல வகைகள் அடங்கியிருக்கிறது. ஆக, ஒன்றிற்கு ஈடாக, அல்லது ஈடுபடுத்தும்விதமாகக் கொடுக்கப்படுவதுதான் இழப்பீடு என்பதை நாம் அறிந்து கொள்ளலாம். இன்றைய நற்செய்தியில் வாழ்விற்கு ஈடாக எதை நாம் கொடுக்க முடியும்? என்ற கேள்வி எழுப்பப்படுகிறது. பொருட்களுக்கு இழப்பீடாக பணத்தைக் கொடுத்துவிடலாம். ஆனால், இழப்பீடு தர முடியாத ஒன்று இருக்கிறது என்றால், அது நிச்சயம் வாழ்வு தான். பொன் கோடி கொடுத்தாலும், பதவி, புகழ், அந்தஸ்து பெற்றாலும், நமது வாழ்வை இழந்துவிட்டால், அவ்வளவுதான். இந்த உலகத்தில் ஒன்றுமே இல்லை. எனவே, வாழ்வை பாதுகாப்போடு,...

மேகமும், காரிருளும் ஆண்டவரைச் சூழ்ந்துள்ளன

மேகம் என்பது கடவுளோடு நெருங்கிய தொடர்புடைய வார்த்தையாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எகிப்தின் அடிமைத்தளையிலிருந்து விடுதலைபெற்று வருகிறபோது, கடவுள் பகலில் மேத்தூணாக நின்று, அவர்களைப் பாதுகாத்தார். இங்கே மேகத்தூண் கடவுளின் உடனிருப்பைக் குறிக்கக்கூடிய வார்த்தையாக இருக்கிறது. கடவுள் விண்ணகத்தில் இருக்கிறார். விண்ணகம் மேலே இருப்பதாக மக்கள் நம்பினர். ஆக, கடவுளைச்சூழ்ந்து நிற்பதுதான் மேகங்கள் என்று மக்கள் நம்பினர். நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து திருமுழுக்கு பெறுகிறபோது, வானம் பிளவுபட்டு அங்கிருந்து இறைத்தந்தையின் குரலொலி கேட்பதை நாம் பார்க்கிறோம். இன்றைய நற்செய்தி வாசகத்திலும் ஆண்டவரின் உருமாற்ற நிகழ்வில் இதனைப்பார்க்கிறோம். மேகத்தினின்று இறைத்தந்தையின் குரல் ஓங்கி ஒலிக்கிறது. இவ்வாறு மேகங்கள் கடவுளின் உடனிருப்பை நமக்கு வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அதேபோல, மேகங்கள் இந்த உலகத்திற்கு பொதுவானவை. எங்கும் நிறைந்திருப்பவை. இறைவனும் அனைவருக்கும் பொதுவானவர், எங்கும் நிறைந்திருக்கிறவர் என்பதை இங்கு நாம் கற்றுக்கொள்ளலாம். எங்கும் நிறைந்திருக்கிற இறைவனில் நாம் தந்தைக்குரிய கண்டிப்பையும், தாய்க்குரிய பாசத்தையும் கற்றுக்கொள்வோம். அது நமக்கு...

கடவுளின் வரத்திற்காக காத்திருப்பது தவறா?

மத்தேயு 15:21-28 கடவுள் நல்லவர். நம்பிக்கையோடு நாம் கேட்ட அனைத்தையும் நமக்கு தரக்கூடியவர். ஒருசில நேரங்களில் நாம் கேட்ட மன்றாடடுக்கள் அனைத்தும் மிக விரைவில் கிடைப்பதில்லை. சில நேரங்களில் நாம் காத்திருந்து தான் பெற வேண்டியிருக்கும். நம் அன்புக் கடவுள் நம்மை அதிகமாகவே அன்பு செய்கிறார். அவர் நமக்கு எதையும் தராமல் மறுப்பதில்லை. மாறாக வாரி வழங்கும் வள்ளல் அவர். ”பால்குடிக்கும் தன் மகவைத் தாய் மறப்பாளோ? கருத்தாங்கினவள் தன் பிள்ளைமீது இரக்கம் காட்டாதிருப்பாளோ? இவர்கள் மறந்திடினும், நான் உன்னை மறக்கவே மாட்டேன்” என்ற இந்த இறைவார்த்தைகள் அவரின் அதிகப்படியான அன்பை எடுத்துக்காட்டுகின்றன. இதை உணராமல் நாம் பல வேளைகளில் அவசரப்படுகிறோம். நான் கேட்ட வரத்தை கடவுள் இன்னும் தரவில்லையே என்று மிகவே அவசரப்படுகிறோம். அப்படி அவரசப்படும் நமக்கு இன்றைய நற்செய்தி வாசகம் மிக மிக அவசியமான ஒன்றாக இருக்கிறது. கானானியப் பெண் பேய் பிடித்திருந்த தன் மகள் குணம் பெற...

வாழ்வு வழிபாடாக மாறட்டும்

லேவியர் புத்தகத்திலே, 11வது அதிகாரத்தில் எவையெவை சாப்பிடக்கூடியவை, எவையெவை சாப்பிடக்கூடாதவை என ஒழுங்குகள் வரையறுக்கப்பட்டுள்ளன. இறந்த மற்றும் சில விலங்குகளின் இறைச்சியை உண்ணக்கூடாது என்பதற்கு காரணம் இல்லாமலில்லை. பல காரணங்களை நாம் சொல்லலாம். 1. யூதர்கள் தீய ஆவிகளை நம்பினர். இறந்துபோன உடல்மீது தீய ஆவிகளின் தாக்கம் இருக்கும் என்ற காரணத்தால், தவிர்த்தனர். 2. ஒரு சில விலங்குகள் வேறு மதத்தில் உள்ளவர்களுக்கு புனிதமானவையாக இருந்தன. உதாரணமாக, பூனையும், முதலையும் எகிப்தியர்களுக்கு புனிதமானவை. வேறு மதத்தினர் வழிபடுவது, நிச்சயமாக யூதர்களுக்கு தீட்டுப்பட்டதாகத்தான் இருந்திருக்கும்.3. சில விலங்குகளின் இறைச்சி, அவர்கள் வாழ்கின்ற சூழ்நிலையில் அவர்களுக்கு திங்கிழைக்கக்கூடியதாக இருந்தது. பன்றியின் இறைச்சியை நன்றாக வேகவைத்து சாப்பிடாவிட்டால், அது பல வழிகளில் மனிதர்களுக்கு கேடு விளைவிக்கக்கூடியது. எனவே, அதுபோன்று கேடுவிளைவிக்கக்கூடிய இறைச்சியை தவிர்த்தனர். 4. சில மூடநம்பிக்கைகளின் காரணமாகவும், சில விலங்குகளின் இறைச்சியை, யூதர்கள் தவிர்த்து வந்தனர். இந்தப்பிண்ணனியில் தான் இயேசுவின் போதனையை நாம் பொருத்திப்பார்க்க...

இயேசு தரும் கொடை

பெறுவதை விட, கொடுத்தலே மிகச்சிறந்தது. இயேசு இந்த உலகத்திற்கு தன்னையே கொடுக்க வந்தார். அதை முழுமையாகக் கொடுத்தார். அதை மகிழ்வோடு கொடுத்தார். நிறைவோடு வாழ்ந்தார். இன்றைய நற்செய்தியிலும், இயேசுவைத்தேடி பல நோயாளிகள் வந்தார்கள் என்று வாசிக்கிறபோது, இயேசுவைப் பற்றி இப்படித்தான் எண்ணத்தோன்றுகிறது. இயேசுவிடம் மக்கள் கண்ட பரிவு, பாசம், அன்பு தான், இத்தனை மக்கள் அவரைத் தேடி வரக்காரணமாக அமைந்திருந்தது. வந்தவர்கள் அனைவருமே, இயேசுவிடமிருந்து எந்த அளவுக்குப் பெற்றுக்கொள்ள முடியுமோ, அதைப் பெற்றுக்கொள்வதில் கவனமாக இருந்தார்கள். ஆனால், பெற்றுக்கொண்ட அருளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ள அவர்களுக்கு மனம் வரவில்லை. தொடர்ந்து இயேசு காட்டிய அந்த வழியிலும் வாழ அவர்கள் தயாராக இல்லை. தங்களது கடமை முடிந்தவுடன், தங்களது தேவை நிறைவேற்றப்பட்டவுடன், அவரை மறந்துவிடுகிறார்கள். நமது விசுவாச வாழ்விலும், இந்த மனநிலையை அதிகமாகப் பார்க்கிறோம். இறைவனிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டு, பெற்றுக்கொண்டிருக்கிற கொடைகளுக்கு பல வேளைகளில் நாம் உண்மையாக இருப்பதில்லை. அதை மற்றவர்களுக்கும் கொடுத்து,...

%d bloggers like this: