Tagged: தேவ செய்தி

வேற்றினத்தாரைக் கண்டித்தீர், பொல்லாரை அழித்தீர்

திருப்பாடல் 9: 1 – 2, 5, 15, 1b – 8 கடவுள் அனைவருக்குமான கடவுள். எந்த பாரபட்சமும் காட்டாதவர். எல்லாருக்கும் நடுநிலையில் இருந்து நீதி வழங்குகிறவர். தவறு செய்கிற அனைவரையும் கண்டிக்கிறார், தண்டிக்கிறார் என்பது இன்றைய திருப்பாடல் நமக்குத் தரும் செய்தி. கடவுள் இஸ்ரயேல் மக்களை தன்னுடைய சொந்த இனமாகத் தேர்ந்து கொண்டார். அவர்கள் வழியாக இந்த உலக மக்களை மீட்டெடுக்க முடியும் என்று கடவுள் நம்பினார். அந்த நம்பிக்கையில் தான், இறைவாக்கினர் வழியாக அவர்களோடு பேசினார். அவர்களை வழிநடத்தினார். தான் அவர்களுக்காக முன்குறித்து வைத்திருந்த மீட்புத்திட்டத்திற்கு அவர்களை தயாரித்தார். இறைவனின் மீட்புத்திட்டத்தை முழுமையாக உணராத மக்கள் கடவுளுக்கு எதிராக புறக்கணித்துச் சென்றபோது, அவர்களை தண்டித்து திருத்துவதற்கு கடவுள் தயங்கவில்லை. வேற்றினத்தாரையும் கடவுள் அன்பு செய்தார். ஏனெனில் அவர்களும் கடவுளின் படைப்புக்கள் தான். அவர்களுக்கும் கடவுள் தந்தை தான். அவர்களை மீட்டெடுப்பதற்குத்தான் இஸ்ரயேல் மக்களை அவர் தேர்ந்தெடுத்தார். நீதியோடு,...

இயல்புகளுக்கேற்ப வாழ்வை முன்னெடுப்போம்

செபம் என்றால் “இதுதான்“ என்பதை நாம் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால், இதுதான் இன்றைக்கு திருச்சபையில் நாம் சந்திக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனையாகவும் இருக்கிறது. திருச்சபை என்பது பலதரப்பட்ட எண்ணங்களையும், சிந்தனைகளையும், இயல்புகளையும் கொண்ட மிகப்பெரிய அமைப்பு. ஒரு சிலர் இயல்பாகவே துடிப்பாக இருப்பர். சிலர் அமைதியான இயல்பைக் கொண்டவர்களாக இருப்பர். திருச்சபையின் வழிபாட்டு முறை அனைவருக்கும் ஏற்றதாக இருக்கும்படி நடக்கிறபோதுதான், அனைவருமே ஈடுபாட்டோடு பங்கு பெறுவதற்கு வசதியாக இருக்கும். ஒரு சிலர் ஆடிப்பாடி இறைவனைப் போற்ற விரும்பலாம். ஒரு சிலர் அமைதியாக இறைவனை மனதிற்குள் நினைத்து போற்றலாம். அவரவர் இயல்பிற்கேற்ப வழிபடுவதற்கு, அனைவருமே உதவியாக இருக்க வேண்டும். இதுதான் சிறந்தது, வழிபாடு இப்படித்தான் இருக்க வேண்டும் என்று நமது எண்ணங்களைப் புகுத்துகிறபோது, அங்கே இயல்பாக பிரச்சனை எழுகிறது. இன்றைய நற்செய்தியிலும் அதைத்தான் பார்க்கிறோம். மார்த்தாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. மரியாவின் உபசரிப்பு, விருந்தோம்பல் பற்றிய எண்ணம் வேறு. இரண்டுமே...

ஆண்டவரே! நீர் என்னை மீட்டீர்

யோனா 2: 2, 3, 4, 7 ஆண்டவர் தன்னை மீட்டதாக இறைவாக்கினர் யோனா முழுமையாக நம்புகிறார். யோனா இறைவாக்கினர் நினிவே நகரத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிப்பதற்காக அனுப்பப்பட்டவர். கடவுளை முழுமையாக நம்புகிறவர். ஆனாலும், தன்னுடைய வார்த்தை எப்படியானாலும் நிறைவேற்றப்பட வேண்டும் என்று விரும்புகிறவராக சித்தரிக்கப்படுகிறார். ”இன்னும் நாள்பது நாட்களில் நினிவே நகர் அழிக்கப்படும்” என்கிறார். ஆனால், மக்கள் மனம் மாறியதால் கடவுள் தன் மனதை மாற்றிக்கொள்கிறார். யோனா அறிவித்தபடி, நினிவே அழிக்கப்படவில்லை. இது யோனாவுக்கு கோபத்தை வரச்செய்கிறது. தான் அவமானப்படுத்தப்பட்டதாக நினைக்கிறார். மக்கள் தன்னை இனிமேல் மதிக்க மாட்டார்கள் என்று நினைக்கிறார். இறுதியில் கடவுளை முழுமையாக அறிந்து கொள்கிறார். தன்னுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கிறபோது, இறைவன் எப்படியெல்லாம் அற்புதமாக தன்னைக் காப்பாற்றியிருக்கிறார் என்பதை உணர்கிறார். இறைவன் மீதுள்ள தன்னுடைய நம்பிக்கையை இந்த பாடலில் உள்ள வார்த்தைகள் மூலமாக உறுதிப்படுத்துகிறார். நம்முடைய வாழ்க்கையிலும், கடவுள் மீதான நம்முடைய நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். சாதாரண...

நம்பிக்கையிழந்த இளைய சமுதாயம்

நம்பிக்கை என்பது ஒரே சமதளத்தில் இருக்கக்கூடியது அல்ல. சில வேளைகளில் மிகுந்த நம்பிக்கை உணர்வு நம்மிடம் மேலோங்கியிருக்கும். பல நேரங்களில் நாம் நம்பிக்கை உணர்வு அற்றவர்களாக இருப்போம். அப்படிப்பட்ட மனநிலையைத்தான் சீடர்கள் தங்களது வார்த்தையில் பிரதிபலிக்கிறார்கள். நிச்சயமாக, இது குற்ற உணர்வில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். தங்களுடைய போதகரிடத்தில் உண்மையாக இல்லாத ஒரு நிலையில் வெளிப்படுகின்ற வார்த்தைகள். சாதாரண மனிதர்களின் நம்பிக்கை வாழ்வில் இருக்கக்கூடிய ஏற்றத்தாழ்வுகளை, உணர்வுப்பூர்வமாக வெளிப்படுத்தக்கூடிய வார்த்தைகள். சீடர்கள் தங்களின் நம்பிக்கை உணர்வை அதிகப்படுத்தும்படியாக இயேசுவிடத்தில் கேட்கிறார்கள். ஒன்று மட்டும், சீடர்களின் வார்த்தையில் தெளிவாக இருக்கிறது. தங்களிடம் நம்பிக்கை குறைவு என்பதை, ஏற்றுக்கொள்கிறார்கள். அந்த நம்பிக்கைக் குறைவை இயேசு ஒருவரால் தான், சரிப்படுத்த முடியும் என்பதிலும் அவர்கள் தெளிவாக இருக்கிறார்கள். இன்றைக்கு நம்பிக்கையை அதிகப்படுத்துவது, கடவுளின் வல்லமையால் மட்டும் தான் முடியும் என்பதை, இந்த நற்செய்தி நமக்குக் கற்றுத்தருகிறது. நமது வாழ்வில், நமது நம்பிக்கை இறக்கம் காண்கிறபோதெல்லாம், நாம் கடவுளின்...

ஏழைகளின் விண்ணப்பத்திற்கு ஆண்டவர் செவிசாய்க்கின்றார்

திருப்பாடல் 69: 32 – 34, 35 – 36 திருப்பாடல் வார்த்தைகளை எண்ணி ஆராய்ந்து பார்க்கிறபோது, துன்பப்படுகிற மனிதனின் வேதனையும், இழப்பும், கடவுளை விட்டால் தனக்கு வேறு ஆதரவு யாரும் இல்லை என்பதையும் இங்கே நாம் புரிந்து கொள்ளலாம். இங்கே தன்னை ஏழையாக ஆசிரியர் சுட்டிக்காட்டுகிறார். விவிலியத்தைப் பொறுத்தவரையில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள், பொருளாதாரத்தின் அடிப்படையில் பின்தங்கியவர்களை அல்ல. மாறாக, கடவுள் மீது தங்களுடைய முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களை விவிலியம் ஏழை என்று சுட்டிக்காட்டுகிறது. அடிமைப்படுத்தப்பட்ட மக்கள் எண்ணிக்கையில் பலராக மத்திய கிழக்குப் பகுதியில் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு உரிமைகள் மறுக்கப்பட்டது. அவர்களின் நியாயத்தை கேட்பார் யாருமில்லை. அடிமைத்தனம் என்பது மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. அவர்களுக்கு பரிந்து பேசுகிறவர்கள் எவருமே இல்லை. இப்படிப்பட்ட நிலையில் இறைவன், தன்னை இவர்களுக்கானவராக அடையாளப்படுத்துகிறார், வெளிப்படுத்துகிறார். இது அடிமைநிலையில் இருந்த மக்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. அந்த ஆன்மீகத்தை அறிந்த கொண்ட மனிதரின் உள்ளக்கேவலாக...