Tagged: தேவ செய்தி

இயேசு மூட்டிய தீ

இயேசு இந்த உலகத்திற்கு வந்து, அவரது பணிவாழ்வை ஆரம்பித்தபோது, இலக்கில்லாமல் ஆரம்பிக்கவில்லை. தன்னுடைய பணிவாழ்வில், தனக்கென்று ஓர் இலக்கை வைத்திருந்தார். அந்த இலக்கை நிறைவேற்றுவதை, தனது வாழ்வின் உயிர்மூச்சாகக் கொண்டிருந்தார். அதைப்பற்றித்தான், இன்றைய நற்செய்தி வாயிலாக இயேசு பேசுகிறார். மண்ணுலகில் தீ மூட்டவே வந்தேன். அதுதான் தனது விருப்பம் என்று சொல்கிறார். அது என்ன தீ? நேர்மையாளர்கள் இன்னும் நேர்மையோடு வாழவும், அமைதியை ஏற்படுத்த விரும்புவோர் அவர்களோடு கடவுள் இருக்கிறார் என்பதை உணரவும், நல்லவர்கள் இன்னும் அதிக நன்மை செய்வதற்கான எரிபொருளாக இயேசு வந்திருக்கிறார். மனிதர்களுக்குள்ளாக நன்மை செய்ய வேண்டும் என்கிற எண்ணமிருந்தாலும், செய்வதா? வேண்டாமா? என்கிற விவாததத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கிற விதமாய், அவருடைய வாதம் அமைந்திருக்கிறது. அவருடைய வாழ்க்கை அமைந்திருக்கிறது. அதுதான் இன்னும் பல நல்லவர்களை உருவாக்குவதற்கு துணையாக இருந்தது. இயேசு என்கிற ஒரு மனிதன், இந்த உலகத்தையே தன் வசப்படுத்த முடிந்தது என்றால், தனியொரு ஆளாக அல்ல. அவர்...

ஆண்டவர் தாமே என் உரிமைச் சொத்து

திருப்பாடல் 16: 1 – 2&5, 7 – 8, 11 உரிமைச்சொத்து என்கிற வார்த்தையின் பொருள் என்ன? எண்ணிக்கை 18: 20 சொல்கிறது: ”இஸ்ரயேல் மக்களிடையே உனக்கு பங்கும், உரிமைச் சொத்தும் நானே”. இந்த வார்த்தைகளை ஆரோனுக்கு ஆண்டவர் சொல்கிறார். ஆரோன் ஆண்டவரால், இறைப்பணிக்காக அர்ப்பணம் செய்யப்பட்டவர். ஆரோனின் வழிவரக்கூடிய குருக்கள் அனைவருக்கும் முன்னோடி ஆரோன். உரிமைச் சொத்து என்பது நமக்கு கிடைக்க வேண்டிய பங்கு. ஒரு குடும்பத்தில் நான்கு சகோதரர்கள் இருக்கிறார்கள். தந்தையின் சொத்தில் நான்கு பேருக்குமே பங்கிருக்கிறது. தந்தை விரும்புகிறாரோ இல்லையோ, சட்டத்தின்படி, தந்தையின் சொத்தில், மகனுக்கு பங்கு இருக்கிறது. அதில் ஒரு சில உள்விவகாரங்கள் இருந்தாலும், பொதுவான எண்ணம்: தந்தையின் சொத்தில் மகனுக்கு பங்கு உண்டு என்பதுதான். இங்கு ஆரோனுக்கு, கடவுள் உரிமைச்சொத்தாக கொடுக்கப்படுவது என்பது, இறைவனின் பணியாளர்களுக்கு கொடுக்கப்படக்கூடிய மிகப்பெரிய விலைமதிப்பில்லாத பரிசு. இந்த உலகத்தையே கொடுத்தாலும் பெற முடியாத பொக்கிஷம். கடவுளின் பணியாளர்...

என்றும் உள்ளது ஆண்டவரது பேரன்பு

திருப்பாடல் 136: 1 – 3, 16 – 18, 21 – 22&24 நன்றி என்கிற மூன்றெழுத்து வார்த்தை, நம்முடைய மூச்சோடு கலந்துவிட்ட வார்த்தை. நமக்கு நன்மை செய்கிறவர்களை உள்ளன்போடு நினைத்துப்பார்ப்பது நம்முடைய கடமை. ஒருவர் நன்மை செய்கிறபோது அல்லது நமக்கு உதவி செய்கிறபோது, நன்றி என்ற வார்த்தையை உதிர்க்கிறோம். நன்றி என்ற வார்த்தை பொதுவாக உச்சரிக்கப்பட்டாலும், அது உதட்டளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும், உள்ளத்தளவில் உச்சரிக்கப்படுகிற வார்த்தையாகவும் உணரப்படுகிறது. நன்றி என்ற வார்த்தை எப்போது உச்சரிக்கப்பட்டாலும் அது உணர்வுப்பூர்வமாகவும், உதட்டளவிலும் அமைந்துவிடாமல், உள்ளத்திலிருந்து எழுவதாக அமைய வேண்டும். அதுதான் இன்றைய திருப்பாடல் நமக்கு தருகிற செய்தி. நன்றி என்பது மூன்றாவது நபருக்கு வார்த்தையால் சொல்லிவிடுகிறோம். நம்மைப் பெற்றெடுத்து, நம்மை பேணிவளர்த்த நம்முடைய அன்புப்பெற்றோருக்கு நாம் எப்போதும் நன்றி என்று சொல்வதில்லை. அப்படிச்சொல்லப்படுகிற வார்த்தையை எவரும் விரும்புவதும் இல்லை. காரணம், அது நம்முடைய நெருங்கிய உறவுகளிடமிருந்து நம்மை அந்நியப்படுத்திவிடுகிறது. அப்படியென்றால், நம்முடைய...

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் லூக்கா 1:39-56 உங்கள் அனைவருக்கும் அன்னை மரியாளின் விண்ணேற்பு பெருவிழா நல்வாழ்த்துக்களையும், சுதந்திர திருநாள் நல்வாழ்த்துக்களையும் மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த தித்திப்பான நாளிலே நல்ல உடல் ஆரோக்கியமும், குறைவில்லா வருமானமும், தீராத சந்தோசமும், சிறந்த நற்பண்புகளையும் நீங்கள் பெற்றிட உங்களை வாழ்த்துகிறேன். விண்ணேற்பு அன்னை மரியின் பரிந்துரையும், ஆண்டவரின் ஆசீரும் உங்களுக்கு நிறைவாகவே கிடைப்பதாக! இன்றைக்கு நம் தாய்க்கும் தாய்நாட்டிற்கும் விழா எடுக்கிறோம். இருவருக்கும் இடையே நெருங்கிய ஒற்றுமையும் தொடர்பும் இருப்பதை நாம் பார்க்கலாம். தாய்க்கு எதற்காக? ஒரு சாதாரண தாயைவிட மேலாக, மரியாள் பிள்ளைகளாகிய நம்மீது முழுமையான அக்கறை கொண்டிருப்பவள். கண்மணிபோல கருத்தாய் காப்பவள். அதனால் நாம் அவருக்கு விழா எடுத்துக்கொண்டாடுவது மிகவும் பொருத்தமானது ஆகும். – “அன்னை தன்னைத் தேடிவரும் அனைவருக்கும் அடைக்கலம் தரும் நகரம்” – என்கிறார் புனித தமசீன்...

நம்மை உயிர் வாழச்செய்த இறைவன் போற்றி

திருப்பாடல் 66: 1 – 3a, 5&8, 16 – 17 செபம் என்பது விண்ணப்பங்களையும் மன்றாட்டுக்களையும் அடுக்கிக்கொண்டே செல்வதாக இருக்கக்கூடாது. மாறாக, அது புகழ்ச்சியின் செபமாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் பாடல் தான், இன்றைய திருப்பாடல். நம்முடைய செபம் என்று சொல்லப்படுவது அடுக்கடுக்கான விண்ணப்பங்கள் தான். விண்ணப்பங்களையும், மன்றாட்டுக்களையும் தாண்டி, நம்மால் சிந்திக்க முடியவில்லை. அதற்குள்ளாகவே நம்முடய செபத்தை அமைத்துக் கொள்வதில் நாம் நிறைவு அடைகிறோம். உண்மையான செபம் புகழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதை கருத்தில்கொண்டு, நம்முடைய செபம் அமைய வேண்டும் என்பது இங்கே நமக்கு விடுக்கப்படுகிற செய்தி. இஸ்ரயேல் மக்கள் செபத்திற்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுத்தனர். ஒரு நாளில் பல வேளைகளில் செபித்தனர். அதனை கடமையாகவும் எண்ணினர். அவர்களுடைய செபம் புகழ்ச்சியை அடித்தளமாகக் கொண்ட செபங்களாக இருந்தது. அதற்கு காரணம் இல்லாமலில்லை. ஏனென்றால், அவர்கள் இறைவனிடமிருந்து பெறுவதற்கு ஒன்றுமேயில்லை. அவர்கள் ஏற்கெனவே நிறைய பெற்றிருந்தனர். பெற்றுக்கொண்ட நன்மைகளுக்கு...