Tagged: தேவ செய்தி

உண்மை உரைக்கும் தூய ஆவி

இன்றைய நற்செய்தி (லூக்கா எழுதிய நற்செய்தியிலிருந்து வாசகம் 12: 8-12), தூய ஆவிக்கு எதிரான, மன்னிக்க முடியாத குற்றத்தை நமக்கு உறுதிபடுத்துகிறது. மத்தேயு 12: 31 – 32 மற்றும் மாற்கு 3: 28 – 29 ல், இயேசுவின் குணப்படுத்துகின்ற வல்லமையை, தீய ஆவிகளின் சக்திக்கு ஒப்பிடுகிறபோது, இயேசு இதைச் சொல்கிறார். இந்த திருச்சட்ட அறிஞர்கள், கடவுளுடைய அருளையும், ஆசீரையும் தீய ஆவிகளுக்கு ஒப்பிடுகிறார்கள். யூதர்களைப் பொறுத்தவரையில், தூய ஆவியானவரைப்பற்றிய புரிதல் நமக்கு தெரிந்திருக்க வேண்டும். இயேசு இங்கே தூய ஆவியானவரைப் பற்றிப் பேசுகிறபோது, அவர் சொல்கிற அர்த்தமும் நமக்கு விளங்க வேண்டும். அப்போதுதான், நம்மால், சரியான விளக்கத்தைப் பெற முடியும். தூய ஆவியின் செயல்களாக இரண்டு குறிப்பிடப்படுகின்றது. 1. கடவுள் மனிதர்களுக்கு, தூய ஆவியானவர் வழியாக, உண்மையை உரைத்தார். உண்மையை உரைப்பது தூய ஆவியானவரின் பணி. 2. தூய ஆவியனவரின் தூண்டுதலினால் தான், மனித உள்ளம், கடவுள் அறிவிக்கும்...

கடவுளின் உடனிருப்பு

கடவுளின் பராமரிப்பு இங்கே நமக்கு உணர்த்தப்படுகிறது. ஒரு மனிதனின் தலையில், இலட்சக்கணக்கான முடிகள் காணப்படுகிறது. ஆனால், அதில் விழுகிற முடிகள் கூட, கடவுளின் கண்களில் இருந்து தப்பமுடியாது என்றால், கடவுள் நம் மட்டில், எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார், எவ்வளவுக்கு நம்மை பராமரிப்பதில் ஆர்வம் காட்டுகிறார், என்பது இங்கே தெளிவாகிறது. நம் அனைவருக்குமே ஒரு காவல் தூதர் தரப்பட்டிருக்கிறார். அந்த காவல் தூதுவரின் பிரசன்னம், கடவுள் நம் மட்டில் வைத்திருக்கிற, பராமரிப்பின் அளவைக் காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய எல்லா மனிதர்களின் வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு பிரச்சனை இருந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு நாமும் காரணமாக இருக்கலாம், மற்றவர்களும் காரணமாக இருக்கலாம். சில வேளைகளில், பிரச்சனைக்கான காரணத்தையும் நாம் அறிய முடியாமல் இருக்கலாம். எல்லாச் சூழ்நிலைகளிலும் கடவுளின் பராமரிப்பை மட்டும் நாம் மறந்து விடக்கூடாது. அந்த பராமரிப்பின் மீது நாம் வைத்திருக்கிற நம்பிக்கை தான், நமது பிரச்சனைகளிலிருந்து, நாம்...

உண்மையான வாழ்க்கைமுறை

இறைவாக்கினர்கள் பற்றிய, திருச்சட்ட அறிஞர்களின் பார்வை முரணானதாக இருந்தது. அவர்கள் மக்கள் முன்னிலையில், இறைவாக்கினர்களைப் பற்றி மிகுந்த மதிப்பு கொண்டிருந்தவர்கள் போல நடந்து கொண்டார்கள். ஆனால், உண்மையில், இறைவாக்கினர்களின் இறப்பிற்கு காரணமானவர்கள் அவர்களே. அவர்கள் போற்றிய இறைவாக்கினர்கள் அனைவருமே இறந்து போனவர்கள். ஆனால், வாழும் இறைவாக்கினர்களை அவர்கள் கடுமையாக துன்புறுத்தினர். இறந்த இறைவாக்கினர்களுக்கு உயர்ந்த கோபுரங்களை எழுப்பினர். ஆனால், வாழ்ந்து கொண்டிருந்த இறைவாக்கினர்களுக்கு, இறப்பைப் பரிசாகக் கொடுத்தனர். ”உங்கள் அமாவாசை, திருவிழாக்கூட்டங்களையும் என் உள்ளம் வெறுக்கின்றது” (எசாயா 1: 14). ” ஓ மானிடா, நல்லது எது என அவர் உனக்குக் காட்டியிருக்கின்றாரே! நேர்மையைக் கடைப்பிடித்தலையும், இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும், உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர, வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கின்றார்?” (மீக்கா 6: 8). மேற்கூறிய இறைவார்த்தைகள் தான், இறைவாக்கினர்களின் போதனையின் அடிப்படை சாராம்சம். ஆனால், திருச்சட்ட அறிஞர்களின் வாழ்வுமுறைக்கு எதிரானது இதுதான். இயேசு,...

கடவுளோடு இணைந்திருப்போம்

எண் 72 என்பது யூதர்களுக்கு ஓர் அடையாள எண். மூப்பர்கள் 72 பேரை இஸ்ரயேல் மக்களுக்கு அதிகாரிகளாக, பெரியவர்களாக ஏற்படுத்துகிறார். எண்ணிக்கை 11: 16 ”ஆண்டவர் மோசேயிடம் சொன்னது: எழுபதுபேரை என்னிடம் கூட்டிவா. அவர்கள் மக்களுள் உனக்குத் தெரிந்தவர்களாகவும், பெரியோர்களாகவும் அதிகாரிகளாகவும் இருக்குமாறு பார்த்துக்கொள்”. யூதத்தலைமைச்சங்கத்திலும் 72 உறுப்பினர் இருந்தார்கள். உலகத்தில் இருக்கிற மொத்தநாடுகளின் எண்ணிக்கையும் 72 இருப்பதாக யூதர்கள் நம்பினர். லூக்கா நற்செய்தியாளர் இயேசுவை அனைவருக்கும் பொதுவானவராக, மீட்பராக அறிமுகப்படுத்துவதால், இந்த எண்ணைப்பயன்படுத்துகிறார். இயேசுவின் இந்தப்போதனை போதிக்கக்கூடியவர்களுக்கான ஒழுங்குகளைத்தருகிறது. போதிக்கக்கூடியவர்கள் பொருட்களைச் சேர்த்து வைக்க ஆசைப்படக்கூடாது. அவர்களுக்கு கடவுள் தான் சொத்து. அதேபோல போகிற வழியில் யாருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம் என்று சொல்லப்படுவத, தங்களுடைய இலக்கிலிருந்து அவர்கள் விலக அது காரணமாகிவிடக்கூடாது என்பதற்காக. கிறிஸ்துவை நோக்கிச்செல்கின்ற நம்மிலிருந்து நாம் எந்த காரணத்தைக்கொண்டும் விலகக்கூடாது. நமது எண்ணங்கள், சிந்தனைகள், நாம் பயன்படுத்தும் வார்த்தைகள் அனைத்துமே கிறிஸ்துவை மையப்படுத்துவதாக இருக்க வேண்டும்....

அருங்குறிகளும், அடையாளங்களும்

இயேசு வாழ்ந்த காலத்தில் இருந்த மக்களை ஒட்டுமொத்தமாக தீய தலைமுறையினராகக் குறிப்பிடுகிறார். எதற்காக இயேசு அவர்களை இப்படிச்சொல்ல வேண்டும்? அவர்கள் செய்த தவறு என்ன? பொதுவாக, அந்த மக்கள் யாரையும் நம்புவதற்கு அற்புதங்களைச் செய்யச்சொன்னார்கள். ஒருவரை நம்புவதற்கு அவர்களின் செய்கின்ற மாய, தந்திரங்கள் தான் அளவுகோல். அப்படி அவர் செய்யவில்லை என்றால், அவர் நம்புவதற்கு உகந்தவர் அல்ல என்பது அவர்களின் கண்ணோட்டம். இயேசுவையும் அத்தகைய கண்ணோட்டத்தோடு மக்கள் பார்க்கிறார்கள். அவர்கள் மத்தியில் இயேசு பல புதுமைகளைச் செய்திருக்கிறார். அவர்கள் நம்புவதற்கு அவர் செய்த புதுமைகளே போதும். ஆனாலும், அவர்கள் இயேசுவிடத்திலே அருங்குறிகளைச் செய்யச்சொல்கிறார்கள். இது இயேசு முதல்முறையாக அலகையால் சோதிக்கப்பட்ட நிகழ்வை நினைவுபடுத்துகிறது. கல்லை அப்பமாகவும், மலையிலிருந்து கீழே குதிக்கவும், அலகையை வணங்கவும் சொல்கிற அந்த சோதனைகளில், இயேசுவை இறைமகன் என அறிந்திருந்தும், இயேசுவை சோதிப்பதற்காக இவைகளை அலகை சொல்கிறது. அதேபோல்தான், மக்களுடைய எண்ணங்களும். கடவுளை நாம் சோதிக்க முடியாது. கடவுளின்...