Tagged: தேவ செய்தி

இறையனுபவம்

யோவான் நற்செய்தியிலே இறையியல் சற்று ஆழமானதாக இருக்கிறது. காரணம், யோவான் இயேசுவின் வார்த்தைகளை மட்டும் எழுதவில்லை. அந்த வார்த்தைகளை தான் புரிந்துகொண்ட விதத்தில் எழுதியிருக்கிறார். அந்த புரிதல் மேலோட்டமான அறிவின் மூலமாக வந்ததில்லை. மாறாக, ஆழ்ந்த சிந்தனையின் மூலமாக, இயேசுவின் வார்த்தைகளை மீண்டும், மீண்டுமாக தியானித்தது மூலமாக வந்தது. இயேசுவோடு வாழ்ந்த யோவானுக்கு, அவரோடு இருந்தபோது, இயேசுவின் போதனைகள் அவ்வளவாக அவருக்கு விளங்கியிருக்கவில்லை. ஆனால், இயேசுவின் விண்ணேற்றத்திற்குப் பிறகு அவருடைய வார்த்தைகளை தனது வாழ்வின் அனுபவத்தோடு பொருத்திப்பார்த்தபோது, அதில் இருந்த உண்மையை அவர் கண்டுகொண்டார். இன்றைய நற்செய்தியில், இயேசு தன்னை இறைத்தந்தையோடு இணைத்துப்பேசுகிறார். கடவுள் எப்படி இருக்கிறார் என்பதை இயேசுவிடமிருந்து அறிந்துகொள்ளலாம். ஏனென்றால், இயேசுவின் வார்த்தைகள் கடவுளின் வார்த்தைகள். இயேசுவின் உணர்வுகள் கடவுளின் உணர்வுகள். இயேசுவின் செயல்பாடுகள் கடவுளின் செயல்பாடுகள். பாவத்திற்கு எதிராக, கடவுள் எப்படி எழுகிறார் என்பதை இயேசுவின் வாழ்விலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். மனிதர்களைக் கடவுள் எப்படி பார்க்கிறார்...

குணம் பெற விரும்புகிறீரா?

இயேசு உடல் நலமற்ற மனிதரிடம் ”குணம் பெற விரும்புகிறீரா?” என்ற கேள்வியைக் கேட்கிறார். பல ஆண்டுகளாக, எப்படியாவது குணம் பெற்று விட வேண்டும் என்று அந்த மனிதர் நிச்சயமாக முயற்சி எடுத்திருப்பார். எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்ற அவரின் எண்ணத்தின் வெளிப்பாடுதான், அந்த குளத்தின் அருகில் அவர் நீண்ட நாட்களாக காத்திருப்பது. அந்த மனிதர் தனது உடல் நலக்குறைபாட்டிற்கேற்ப தனது வாழ்வை மாற்றிக்கொண்டாலும், இதுதான் வாழ்க்கை, இதை வாழ்ந்துதான் ஆக வேண்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டாலும், கிடைக்கிற வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ள, சந்தர்ப்பத்தை அவர் எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறார். இயேசுவிடமிருந்து நிறைவான அருளைப்பெற்றுக்கொள்வதற்கு நமக்கு அடிப்படையிலே இருக்க வேண்டியது, ஆர்வம். எந்த ஒரு சூழலிலும் நம்பிக்கை இழக்காத தன்மை. கடைசி நிமிடத்திலும் இருக்கும் அந்த ஒரு துளி நம்பிக்கை. எதை இழந்தாலும் ஒரு மனிதன் நம்பிக்கை இழக்கக்கூடாது என்பதற்கு இந்த உடல் நலமற்றவர் சிறந்த எடுத்துக்காட்டு. எப்படியாவது குணம் பெற்றுவிட வேண்டும் என்கிற...

தாழ்ச்சி நிறைந்த உள்ளம்

அரச அலுவலர் ஒருவர் தனது மகனுக்காக இயேசுவைத்தேடி வந்த நிகழ்ச்சி இன்றைய நற்செய்தியாக நமக்கு தரப்பட்டிருக்கிறது. யார் இந்த அரச அலுவலர்? அரசரின் அவையில் பணிபுரியக்கூடியவருக்கு தச்சுத்தொழிலாளியின் மகனிடம் என்ன வேலை? அரச அலுவலர் ஏரோது அரசரின் அவையின் பணிபுரியக்கூடியவராக இருக்கலாம். இயேசு கானாவூரில் இருக்கிறார். அலுவலரின் சொந்த ஊரோ கப்பர்நாகும். கிட்டத்தட்ட இரண்டிற்கும் இடையேயான தொலைவு 20 மைல். இங்கே, அரச அலுவலரின் தாழ்ச்சி நிறைந்த நம்பிக்கை நமக்கு உதாரணமாக தரப்படுகிறது. அரசருடைய அவையில் பணியில் இருக்கிற அதிகாரிக்கு பல சலுகைகள் நிச்சயம் இருக்கும். அரண்மணையில் பணிபுரியும் மிகச்சிறந்த மருத்துவர்கள் நிச்சயம் அவருடைய மகனுக்கு சிகிச்சை அளித்திருப்பார்கள். அரசரின் அலுவலகத்தில் பணிபுரிகிறவர் இயேசுவைத் தேடி வந்தால், அது மக்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது அவருக்குத் தெரியும். தான் மிகப்பெரிய அதிகாரத்தில் இருக்கிறேன். எனவே, ஆளனுப்பி இயேசுவை அதிகாரத்தோடு, அழைத்து வர ஆணையிட்டிருக்கலாம். அதையெல்லாம் விட்டுவிட்டு, இயேசுவை அவர் தேடி...

கடவுளின் பராமரிப்பு

பார்வையற்ற மனிதரை இயேசு குணப்படுத்துகிற நிகழ்ச்சி இன்றைக்கு தரப்பட்டுள்ளது. பிறவியிலே பார்வையற்ற மனிதருக்கு குணப்படுத்துகின்ற புதுமை இந்த ஒன்றுதான். பார்வையற்ற அந்த மனிதர் சீடர்களுக்கு நன்கு தெரிந்தவராக இருக்க வேண்டும். எனவேதான் அவர் பிறவியிலேயே பார்வையற்றவராக இருப்பதை அவர்கள் அறிந்திருக்கிறார்கள். யூதர்கள் எப்போதுமே பாவத்திற்கும், துன்பத்திற்கும் தொடர்பு உண்டு என்று நம்பினார்கள். எனவேதான் சீடர்கள் அந்த மனிதன் குருடனாய் பிறந்ததற்கு அவனுடைய பாவமா? பெற்றோர் செய்த பாவமா? என்ற கேள்வியைக் கேட்கிறார்கள். இங்கே நமக்கு ஒரு சந்தேகம் வரலாம். அவன் பிறவியிலேயே குருடன். பின் எப்படி அவன் செய்த பாவம் காரணமாக இருக்கமுடியுமென்று. கிரேக்க அறிஞர்; பிளேட்டோவின் ‘ஆன்மா’ பற்றிய கருத்தை யூதர்கள் நம்பினர். ஆன்மா என்பது ஓர் உயிர் உருவாவதற்கு முன்னதாகவே இருக்கிறது என்ற கோட்பாட்டை நம்பினர். எனவே, பார்வையற்றவன் பிறப்பதற்கு முன்னதாகவே, அவனுடைய ஆன்மா தவறு செய்திருக்கும், எனவேதான் அவன் குருடனாய் பிறந்திருக்கிறான் என்பது சீடர்களின் வாதம். இயேசு...

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா

இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும் மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா மாற்றியமைக்கப்பட்டது. இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது. 1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து...