Tagged: தமிழில் தேவ செய்தி

ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை

திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 7 – 8 யூதர்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையும், கடவுளின் செயலோடு பொருத்திப்பார்க்கிறவர்கள். தங்கள் வாழ்வில் நடக்கிற எல்லாமே கடவுளின் ஆணைப்படி தான் நடக்கிறது. கடவுள் தான் தங்களை வழிநடத்துகிறார் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த பிண்ணனியில் தான், திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன? வாழ்க்கையில் ஒரு சில விரும்பாத நிகழ்வுகள் நடக்கிறபோது, நாம் கடவுளிடத்தில் கோபப்படுகிறோம். கடவுள் தான் நம்மை இந்த நிலைக்கு விட்டுவிட்டார் என்று வருத்தமடைகிறோம். அவரிடத்தில் நாம் முறையிடுகிறோம். ஆனால், காலம் கடந்து நாம் சிந்திக்கிற வேளையில், நாம் விரும்பாத நிகழ்வுகள் தான், நமக்கு மிகச்சிறப்பான ஆசீர்வாதத்தை தந்திருப்பதை, நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்திருப்போம். அப்போதுதான், நாம் கடவுளுக்கு அந்த விரும்பாத நிகழ்வுகளைத் தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பிண்ணனியில் பார்க்கிறபோது, கடவுளின் செயல்கள்...

பாலைவனக் குரல்

ஒவ்வொரு கிறிஸ்தவரிடமும் கேட்க வேண்டிய கேள்வி, நீ யார்? என்ன பதில் சொல்லப்போகிறோம்? திருமுழுக்கு யோவானிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டது. ‘நான் பாலை வனக் குரல்’ என்று ஏசாயா இறைவாக்கை (40’3) மேற்கோள்காட்டி பதில் சொன்னார். நாம் ஒவ்வொருவரும் இயேசுவின் முன்னோடிகள். அவரது வருகைக்குத் தயார் செய்யும் தயாரிப்பாளர்கள். அவரது வருகையை முன்னறிவிக்கும் ஒலிப்பான்கள். நம்முடைய சொல், செயல், நடவடிக்கை அனைத்தும் இயேசுவை எதிரொலிப்பதாய், பிறதிபலிப்பதாய் இருக்க வேண்டும். நம் வாழ்வு இயேசுவை அடையாளம் காட்டி அறிமுகம் செய்வதாக இருக்க வேண்டும். தன் எதார்த்த நிலையை ஏற்றுக்கொண்டார். தன் உண்மை நிலையை மறுக்கவில்லை. தன்னை தாழ்த்துவதற்குத் தயங்கவில்லை. தான் ஒரு ‘பாலை வனக் குரல்’ என்றும், “எனக்குப்பின் வருபவர்; அவருடைய மிதியடிவாரை அவிழ்க்கக்கூட எனக்குத் தகுதியில்லை” தாழ்த்தினார். பிறரைப் பெருமையாகப் பேசுவோம். அனைத்திலும் பிறருக்கு முதலிடம் கொடுப்போம். பிறரை உயர்வாக மதிப்போம். பிறரைப்பற்றிய நற்குணங்களை எடுத்துச் சொல்வோம். இவ்வாறு செயல்படும்போது நாம்...

மெல்லிய சத்தம்

இறைவாக்கினர் எலியாவின் காலத்தில் ஆட்சி செய்து வந்த மன்னரின் மனைவி ஈசபேல் எலியாவைக் கொல்ல நினைத்து அந்த ஈசபேல் எலியாவிடம் தூது அனுப்பி, எலியாவே நீர் என்னுடைய இறைவாக்கினர்களை கொன்றது போல நானும் நாளை இந்த நேரத்தில் உன் உயிரை எடுக்காவிடில் என் தெய்வங்கள் எனக்கு தண்டனை கொடுக்கட்டும் என்று சொல்லச் சொல்லி ஆள் அனுப்புகிறாள்.ஏனெனில் இதற்குமுன் பொய்யான இறைவாக்கினரை எலியா கொன்று போட்டார்.அதனால் அவளின் சொல்லுக்கு பயந்து எலியா தனது உயிரைக்காத்துக்கொள்ள தப்பி ஓடுகிறார்.அவர் பாலைநிலத்தில் ஒருநாள் முழுதும் பயணம் செய்து அங்கே ஒரு சூரைச்செடியின் அடியில் அமர்ந்துக்கொண்டு தான் சாகவேண்டும் என ஆண்டவரிடம் மன்றாடுகிறார். ஆண்டவரே! நான் வாழ்ந்தது போதும்,என் உயிரை எடுத்துக்கொள்ளும்,என சொல்லிவிட்டு உறங்கிவிடுகிறார். அப்போது வானதூதர் அவரை தட்டி எழுப்பி எழுந்து சாப்பிடு,என்று சொல்லி ஒரு தட்டில் அப்பமும்,ஒரு குவளையில் தண்ணீரும் இருக்கக்கண்டு அவற்றை சாப்பிட்டுவிட்டு மறுபடியும் படுத்து உறங்குகிறார். இரண்டாம்முறை தூதன் அவரை எழுப்பி எழுந்திரு நீ பயணம் செய்ய...