Tagged: தேவ செய்திDaily Manna

பாவத்திற்கு பரிகாரம்: ஆசையும், பேராசையும்

லூக்கா 7:36-50 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். மனிதா்கள் நாம் மிகவும் பலவீனமானவர்கள். குறைகள், கறைகள் கொண்டவர்கள். பாவிகளாகிய நாம் நம்முடைய பாவத்திற்கு பரிகாரம் செய்யும் போது நிறைவை நோக்கி புனிதத்தை நோக்கி வளர்கிறோம் என்பதை இன்றைய நற்செய்தி கற்றுத்தருகிறது. பாவத்திற்கு இரண்டு விதங்களில் நாம் பரிகாரம் செய்ய முடியும். 1. ஆசை ஆசை நான் பாவி தான் இருந்தாலும் நான் மாறுவேன் என்ற அதிகப்படியான ஆசை ஆளையே மாற்றுகிறது. அந்த ஆசை வளர வளர அது நம்மை புனிதத்திற்குள் கடத்திச் செல்லுகிறது. புனிதர்கள் அனைவரும் இந்த ஆசையைத் தான் கொண்டிருந்தார்கள். நற்செய்தியில் வரும் பாவியான பெண் இயேசுவின் காலடிகளைக் கழுவி பாவத்திலிருந்து வெளியே வருவதற்கான தன்...

எல்லாவகை அச்சத்தினின்றும் ஆண்டவர் விடுவித்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 இந்த உலகத்தில் வாழ்கிற மனிதர்களுக்கு இயல்பாகவே அச்சம் என்பது உள்ளத்திலே இருக்கிறது. அந்த அச்சம் பலவிதமான காரணங்களுக்காக ஒருவருக்குள் எழலாம். இருளைப் பார்த்து ஒரு சிலர் பயப்படலாம். படிப்பைப் பார்த்து பயப்படலாம். பாம்பைப் பார்த்து பயப்படலாம். எதிர்காலத்தை நினைத்து அச்சம் கொள்ளலாம். மனிதர்கள் அச்சம் கொள்வதற்கு ஏராளமான காரியங்கள் இந்த உலகத்திலே இருக்கிறது. வாழ்க்கையில் எப்படிப்பட்ட அச்சம் இருந்தாலும், கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர்களை, ஆண்டவர் அச்சத்தினின்று விடுவிக்கிறார் என்று திருப்பாடல் ஆசிரியர் கூறுகிறார். கடவுள் மீது நம்பிக்கை உள்ளவர் நிச்சயம் அச்சம் கொள்ளமாட்டார். ஏனென்றால், கடவுளின் பிரசன்னம் தன்னோடு இருப்பதாக அவர் உணர்கிறார். நெருக்கடி வேளையில் ஆண்டவர் கைதூக்கி விடுவார் என்கிற நம்பிக்கை அவரிடத்தில் இருக்கிறது. எத்தகைய தீங்கு வந்தாலும், கடவுள் நிச்சயம் பாதுகாப்பார் என்பதில் உறுதியாக இருக்கிறார். ஏனென்றால்,...