Tagged: 66th Republic Day

வாழ்க பாரதம், வளர்க இந்தியா

இன்று 66 வது குடியரசு  தின விழா கொண்டாடும் இந்தியர் ஒவ்வொருவருக்கும் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்தியாவைப்பற்றி நாம் வேதத்தில் எஸ்தர் 1: 1 மற்றும் எஸ்தர்8:9 ல்  இந்தியா தேசம் முதல் எத்தியோப்பியா தேசம் வரைக்கும் ஆட்சி செய்த மன்னர் அகாஸ்வேரு காலத்திலேயே நமது இந்தியாவைப் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தியா என்பது ஒரு நாடு, அது ஒரு தேசம். இங்கு வாழும் மக்களுக்கு அதனால்தான் இந்தியர்கள் என்ற பெயர் வந்தது. அதுவே காலப்போக்கில் சுருங்கி இந்து என்று ஆகியது. இந்து என்றாலும் இந்தியா என்றாலும் அது தேசமே! ஒரு நாடே! தவிர அது ஒரு மதம் இல்லை. வேண்டுமானால் வரலாற்றை ஆராய்ந்து பாருங்கள். உங்களுக்கே உண்மை புரியும். உண்மை ஒருநாளும் தோற்காது. வானத்தையும், பூமியையும், சமுத்திரத்தையும், நீரூற்றுகளையும், ஆறுகளையும் உண்டாக்கிய தேவனாகிய கடவுள் ஆதாம் என்ற மனிதனை மண்ணின் மூலம் உருவாக்கி அவர் மூலமாகவே இந்த மனுக்குலம் முழுவதையும் படைத்தார். பிறகு நோவா காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு உலகத்தை அழிக்க நினைத்த இறைவன் அவர் நல்லவராக இருந்ததால்...