Tagged: Daily manna

வரலாறு படைக்க வா!

மத்தேயு 11:11-15 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருமுழுக்கு யோவானைப் பற்றி சிந்திக்கும் இந்த நல்ல நாளில் அவர் வாழ்வு வரலாறு படைக்க நம்மை அழைக்கிறது. ஆண்டவர் இயேசு கிறிஸ்து அவரைப் பார்த்து, மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை” என்கிறார். இந்தக் கூற்று திருமுழுக்கு யோவானின் சாதனை மிக்க வாழ்வை நமக்கு சுட்டிக்காட்டுகிறது. அவரைப் போன்று நாமும் வாழ, வரலாறு படைக்க முடியுமா? முடியும் முயற்சியிருந்தால். முயற்சி எங்கே? நமக்குள்ளே இருக்கிறது அதை முடுக்கிவிடுவோம் வாருங்கள். இரண்டு முறைகளில் நாம் முடுக்கிவிடலாம். 1. கனவு நாம் என்ன செய்யப்போகிறோம்? எப்படி சாதிக்கப்போகிறோம்? என்னென்ன வழிகளில் வரலாறு படைக்கப்போகிறோம் என்ற திட்டவட்டமான தெளிவுகள்...

தேடி போ! உயரே கொண்டு வா!

மத்தேயு 18:12-14 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். இவ்வுலகில் பிறந்த அனைவரும் பயனுள்ளவர்கள். பயனற்றவர்கள் என்று யாரும் கிடையாது. எல்லாரையும் கடவுள் தாயின் கருவறையில் அர்ச்சித்து அற்புதமான பணி செய்ய அழைக்கின்றார். யாரையும் ஒதுக்காதீர்கள், யாரையும் வெறுக்காதீர்கள் என்ற அன்பான வேண்டுகோளோடு வருகிறது இன்றைய நற்செய்தி வாசகம். குறைகள் உள்ளவர்களை தேடிக் கண்டுபிடித்து, அவர்களை உற்சாகப்படுத்தி உயரே கொண்டு வரை இந்த நாள் நம்மை அழைக்கிறது. குறைகள் இருந்தாலும் உற்சாகத்தினால் மேலே வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள். உயரே வந்தவர்கள் பலர் இருக்கின்றார்கள். அவர்களுள் இதோ இரண்டு சாதனையாளர்கள்: 1. நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் நிக்கொலாஸ் ஜேம்ஸ் உஜிசிக் (Nicholas James Vujicic) என அழைக்கப்படும், 36 வயது...

இன்று புதுமையானவற்றைக் காண்பாய்!

லூக்கா 5:17-26 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். கடவுளிடமிருந்து ஆசீர் வேண்டும் என நாம் ஏங்குவது உண்டு. அதற்காக தான் நாம் தினமும் ஆசைப்படுகிறோம். நாம் ஆசைப்படும் அந்த ஆசீரை இன்றைய நற்செயதி வாசகம் நமக்கு சொல்லித் தருகிறது. முடக்குவாதமுற்றவர் அந்த ஆசீரைப் பெற்றுக்கொண்டார். நாமும் பெற வேண்டுமெனில் இரண்டு வழிகள் அதற்கு உண்டு. 1. பாவமன்னிப்பு நாம் ஒவ்வொரு நாளும் கடவுளிமிருந்து ஆசீரை பெற வேண்டுமெனில் பாவமன்னிப்பு என்பது அவசியமானது. இந்த பாவமன்னிப்பை நாம் அனுதினமும் திருப்பலியல் கலந்துக்கொண்டு பெற்றுக்கொள்ளலாம். நம் பாவத்தை மனதுருகி அறிக்கையிடலாம். பாவத்திலிருந்து மன்னிப்பு பெற்றோமெனில் கடவுளின் ஆசீர் மிக எளிதாக நமக்குள் பாய்ந்து வர முடியும். பாவத்திலிருந்து வெளியே வந்த...

ஆச்சரியமான அன்பு வாழட்டும்!!!

லூக்கா 3:1-6 இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு அன்பின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நாம் அன்போடு இருக்க வேண்டும், அன்பை பரப்ப வேண்டும், அன்பின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு வந்திருக்கிறது.  அன்பு என்பது நவீனகாலத்தில் எப்படி இருக்கிறது என்பதை இந்த நகைச்சுவைகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் அன்பு என்பது என்ன? அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை...

தூய கன்னி மரியாவின் அமலோற்பவம் பெருவிழா

அன்னையைப் போன்று அவதாரம் எடு! லூக்கா 1:26-38 இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் தூய அமலோற்பவ மாதா பெருவிழா திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நல்ல உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவரிடம் மன்றாடுகிறேன். 1858 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் நாள் பெர்னதெத் என்ற ஆடு மேய்க்கும் சிறுமி லூர்து நகரில் உள்ள மசபேல் குகைக்கருகில் நின்றுகொண்டிருந்தாள். அப்பொழுது திடிரென்று வெண்மையான ஆடை அணிந்த பெண் ஒருவர் அவருக்கு முன்பாகத் தோன்றினார். அவரைப் பார்த்த பெர்னதெத், “அம்மா உங்களுடைய பெயர் என்ன? என்று கேட்டார். அதற்கு அவர், “நாமே அமல உற்பவம்” என்று பதிலளித்தார். இன்று அன்னையாம் திருச்சபை மரியாளின் அமலோற்பவப் பெருவிழாவை மகிழ்வோடு கொண்டாடுகின்றது. இந்த நல்ல நாளில் முதலில் இவ்விழாவின் வரலாற்றுப் பின்னணியைத் தெரிந்துகொண்ட பின்பு,...