Tagged: Daily manna

ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்

திருப்பாடல் 34: 1 – 2, 3 – 4, 5 – 6, 7 – 8 ”ஏழை கூவியழைத்தான். ஆண்டவர் அவனுக்கு செவிசாய்த்தார்” விவிலியத்தில் ஏழைகள் என்று சொல்லப்படுகிறவர்கள் யார்? ஏழைகளை நாம் இரண்டு வகையாகப் பார்க்கலாம். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களை ஏழைகள் என்று நாம் சொல்கிறோம். அதேபோல, கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும் ஏழைகள் என்று சொல்கிறோம். இவர்கள் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்க வேண்டும் என்ற நியதில்லை. ஆனால், பணம் இருந்தாலும், கடவுளுக்கு முன்னுரிமை கொடுக்கிறவர்கள், கடவுளை தங்களது முழுமுதற்செல்வமாக ஏற்றுக்கொள்கிறவர்கள். இறைவன் இந்த இரண்டு பேரையுமே கருத்தில் கொள்கிறார். அதாவது, இந்த உலகத்தில் யாரெல்லாம் நிர்கதியில்லாமல் இருக்கிறார்களோ, கடவுளே தங்களது வாழ்க்கை என்று வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ, அவர்கள் அனைவரையும், கடவுள் கண்ணோக்குகிறார். அவர்களது குரலுக்கு செவிசாய்க்கிறார். கடவுள் எப்போதுமே, இந்த சமுதாயத்தின் தாழ்நிலையில் இருக்கிறவர்களை கைதூக்கி விடக்கூடியவராக இருக்கிறார். அவர்களது நிலைகண்டு மனம் வெதும்புகிறவராக, அவர்களும் நல்வாழ்வு...

தூய ஆவியின் செயல்பாடுகள்

கடவுளைப்பற்றியும், கடவுள் சார்ந்த செயல்பாடுகளைப் பற்றியும் அறிந்து கொள்வதற்கு நமது மனித அறிவு புரிந்து கொள்ள முடியாம் இருப்பதை நிக்கதேமும், அதனை விளக்குவதற்கு முயற்சி எடுக்கிற இயேசுவைப்பற்றியும் இன்றைய நற்செய்தியில் நாம் பார்க்கிறோம். நிக்கதேம் ஒரு படித்த மனிதர். மறைநூலை நன்கு ஆராய்ந்து அறிந்தவர். இறைஉணர்வு மிக்கவர். கடவுள் மற்றும் கடவுள் சார்ந்த செயல்பாடுகளுக்கு முக்கியத்துவத்தைக் கொடுப்பவர். ஆனால், அவராலே, இயேசுவின் விளக்கத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த உலகத்தில், ஒன்று எப்படி இயங்குகிறது என்பது தெரியாமலேயே பலவற்றைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். மின்சாரமோ, தொலைக்காட்சியோ, வானொலியோ எப்படி இயங்குகிறது என்பது நமக்குத் தெரியாது. ஆனால் அவைகளை நாம் பயன்படுத்துகிறோம். அவற்றைப்பற்றிய முழுமையான அறிவு இல்லையென்றாலும் கூட, அவற்றின் பயன்பாட்டில் நாம் எந்தவித சுணக்கமும் காட்டுவதில்லை. அதே போலத்தான் தூய ஆவியைப்பற்றிய நமது அறிவும். தூய ஆவியின் செயல்பாடு எப்படி என்பதை நம்மால் அறிய முடிவதில்லை. ஆனால், தூய ஆவியின் செயல்பாடு ஒவ்வொரு...

கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு விழா

இந்த விழா ஐந்தாம் நூற்றாண்டில் கொண்டாடப்பட்டதற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொடக்கத்தில் இந்த விழா மார்ச் மாதம் 25 ம் தேதி கொண்டாடப்பட்டது. கிறிஸ்து பிறப்பு விழாவிற்கு 9 மாதங்களுக்கு முன் கொண்டாடப்பட்டது. இது தவக்காலம் அல்லது உயிர்ப்பு பெருவிழாவின் காலங்களில் வந்ததால், இவ்விழா குறித்துக்காட்டும் மகிழ்ச்சி பண்புகளை வெளிப்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, பிற்காலங்களில் டிசம்பர் 18 ம் தேதிக்கு, இந்த விழா மாற்றியமைக்கப்பட்டது. இந்த விழாவானது, மரியாளின் முன்னறிவிப்பு, இயேசு கருவில் உருவான விழா, இறைமகன் மனிதரான விழா என, பல பெயர்களால் அழைக்கப்பட்டது. 1969 ம் ஆண்டிற்கு பிறகு நடந்த வழிபாட்டு மறுசீரமைப்பிற்கு பின், இந்த விழாவானது கிறிஸ்து பிறப்பின் அறிவிப்பு பெருவிழா என்று அழைக்கப்பட்டது. புதிய திருவழிபாட்டு ஒழுங்கின்படி, இந்த விழா மார்ச் மாதம் 25 ம் நாள் கொண்டாடப்பட வேண்டும். புனித வாரத்திலோ அல்லது உயிர்ப்பு விழாவின் வாரத்திலோ வந்தால், உயிர்ப்பு வாரத்திற்கு அடுத்து...

ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே

திருப்பாடல் 118: 2 – 4, 22 – 24, 25 – 27a, (1) ”ஆண்டவர் தோற்றுவித்த நாள் இதுவே” ”கடவுள் தோற்றுவித்த நாள்“ என்கிற இந்த வரிகள் பல நேரத்தில் தவறாக விளக்கம் கொடுக்கப்படுகிறது. இது புதிய நாளை குறிக்கக்கூடிய அர்த்தத்தில் பார்க்கப்படுகிறது. ஆனால், அது தவறு. இது கடவுள் பிற்காலத்தில் அனுப்ப இருக்கிற மீட்பரின் நாளை குறிக்கக்கூடியதாக இருக்கிறது. அதாவது, இயேசுவைக் குறிக்கும் வார்த்தையாக இது இருக்கிறது. இயேசுவில் மீட்பிற்கான அடித்தளக்கல்லை கடவுள் நட்ட இருக்கிறார் என்பதை, இந்த வரிகள் வெளிப்படுத்துவதாக இருக்கிறது. பழங்காலத்தில், மிகப்பெரிய அரசுகள், வெகு எளிதாக தங்களது அதிகாரத்தை சாதாரண நாடுகள் மீது நிலைநாட்டின. இஸ்ரயேலை அவர்கள் ஒரு பொருட்டாக மதித்ததே இல்லை. ஆனால், கடவுள் அவர்கள் வழியாகத்தான் இந்த உலகத்தை மீட்டார். பாபிலோனிலிருந்து நாடுகடத்தப்பட்ட யூதர்கள், தங்களது நாட்டிற்கு வந்து, மீண்டும் கோவிலைப் புதுப்பிக்கத் தொடங்கிய நாட்களில், இந்த திருப்பாடல் எழுதப்பட்டிருக்கலாம்....

ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது

திருப்பாடல் 118: 1, 14 – 15, 16, 18, 19 – 21 (21a) ”ஆண்டவரது வலக்கை உயர்ந்துள்ளது” நமது அன்றாட வாழ்வில், நமக்கு நெருக்கமானவர்களைப் பார்த்து நாம் சொல்வோம்: ”இவர் என்னுடைய வலக்கரம் போன்றவர்”. இங்கு வலக்கரம் என்பது நம்பிக்கைக்குரியவராக அடையாளப்படுத்தப்படுகிறது. எசாயா 41: 13 ”நானே உன் கடவுளாகிய ஆண்டவர். உன் வலக்கையைப் பற்றிப் பிடித்து, ”அஞ்சாதே, உனக்குத் துணையாய் இருப்பேன்”. பொதுவாக எல்லா மக்களுமே வலது கையை முக்கியமாக பயன்படுத்துவதால், அது ஒருவருடைய பலத்தை, ஆற்றலை வெளிப்படுத்துவதாகவும் இருக்கிறது. லூக்கா 20: 43 ”நான் உம் பகைவரை உமக்கு கால்மணையாக்கும்வரை நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்” என்று திருப்பாடலில் உள்ள வசனம் மேற்கோள் காட்டப்படுகிறது. இங்கு வலது கரம், அதிகாரத்தின் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. மாற்கு 10: 37 ல், யாக்கோபு மற்றும் அவருடைய சகோதரர்கள், இயேசுவின் வலப்பக்கத்தில் அமரும் பாக்கியத்தைக் கேட்கின்றனர். மத்தேயு 25 வது...