Tagged: Daily manna

பலியினால் உம்மை மகிழ்விக்க முடியாது

திருப்பாடல் 51: 1 – 2, 10 – 11, 16 – 17. இஸ்ரயேல் மக்கள் வாழ்வில், கடவுளுக்கு பலி செலுத்துவது என்பது மிக மிக முக்கியமான ஒன்று. அதற்கு அதிக அளவில் முக்கியத்துவத்தைக் கொடுத்தார்கள். லேவியர் புத்தககத்தில் நாம் வாசித்துப் பார்த்தால் பலி செலுத்துவது பற்றிய விளக்கங்களை நாம் தெளிவாகப் பார்க்கலாம். எதையெல்லாம் பலி செலுத்த வேண்டும்? எப்படி பலி செலுத்த வேண்டும்? என்று பல ஒழுங்குமுறைகளை இஸ்ரயேல் மக்கள், லேவியர் நூலைப் பின்பற்றி கடைப்பிடித்தார்கள். ஆக, பலி செலுத்துவது இஸ்ரயேல் மக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்று என்பது தான், இங்கு நாம் அறிய வேண்டிய ஒன்றாக இருக்கிறது. எதற்காக பலி செலுத்தப்படுகிறது? கடவுள் நம்மிடமிருந்து பலி வேண்டுவதில்லை. அவருக்கு அது அவசியமுமில்லை. நாம் புதிதாக பலி என்று ஒன்றை செலுத்திவிட முடியாது. ஏனென்றால், நாம் செலுத்தக்கூடிய காணிக்கையும் அவருடைய அருளினால் தான் பெற்றிருக்கிறோம். பின் ஏன் பலி...

கொடுப்பவர்களாக வாழ்வோம்

தவக்காலம் என்பது நம்மைப் பண்படுத்துகின்ற காலம். நம்மைப் பக்குவப்படுத்துகின்ற காலம். நமது வாழ்வை செதுக்குகின்ற காலம். தவக்காலம் நமக்குக் கற்றுத்தரும் ஒரு முக்கியமான பாடம் ”கொடுத்தல்”. கொடுத்தல் நமது வாழ்வின் அங்கமாக இருக்க வேண்டும். கொடுத்தல் இயல்பானதாக இருக்க வேண்டும். எதையும் எதிர்பார்ப்பதாக இருக்கக்கூடாது. நாம் கொடுக்கிறபோது, அது நமக்குள்ளாக வலியை ஏற்படுத்த வேண்டும். வலியோடு கொடுப்பதுதான் உண்மையான கொடுத்தல். இன்றைய நற்செய்தியில் கொடுப்பவர்களுக்கு கடவுள் எப்படி கொடுக்கிறவராக இருக்கிறார் என்பது தெளிவாகச்சொல்லப்படுகிறது. மற்றவர்களுக்கு கொடுத்தவர்கள், தாங்கள் கொடுக்கிறோம் என்கிற எண்ணத்தோடு கொடுக்கவில்லை. தாங்கள் கொடுத்தால் தங்களுக்கு பிரதிபலன் கிடைக்கும் என்ற எண்ணமும் அவர்களுக்கு இல்லை. கொடுத்தல் அவர்களுக்கு இயல்பாக இருந்தது. ஆனால், இடதுபுறம் உள்ளவர்கள் ஏதாவது கிடைக்கும் என்று தெரிந்திருந்தால், கொடுத்திருப்போம் என்று சொன்னவர்கள். அது உண்மையான கொடுத்தல் அல்ல. அவர்களுக்குரிய கைம்மாறை அவர்கள் நிச்சயமாகப் பெற்றுக்கொண்டார்கள். கடவுள் கொடுத்த இந்த வாழ்வில் மற்றவர்களுக்கு கொடுத்து வாழ்வதே, வாழ்விற்கு நாம்...

மனம் மாற்றமும், நற்செய்தியை நம்புதலும் !

இன்றைய நற்செய்தி வாசகத்தில்  (மாற்கு 1: 12-15) “காலம் நிறைவேறிவிட்டது. இறையாட்சி நெருங்கி வந்தவிட்டது. மனம் மாறி நற்செய்தியை நம்புங்கள்” என்னும் இயேசுவின் அழைப்பைக் கேட்கிறோம். இது இயேசுவின் பொதுவான அழைப்பாக இருந்தாலும், இத்தவக்காலத்திற்கான சிறப்பான அழைப்பு. மனம் மாறுவது நற்செய்தியை நம்புவது என்னும் செய்தியில் நமது கவனத்தைச் செலுத்துவோம். இயேசுவின் அழைப்பு இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கிறது: 1. மனம் மாறவேண்டும். 2. நற்செய்தியை நம்பவேண்டும். நமது பாவச் செயல்கள், தீய மனநிலைகள், இறைவனுக்கெதிரான வாழ்வு இவற்றை விட்டுவிடுவது என்பது அழைப்பின் முதல் கட்டம். இது கடினமானது. ஆனால், அழைப்பின் இரண்டாம் கட்டம் நற்செய்தியை நம்புவது. அதாவது, தீய செயல்களை விட்டுவிடுவது மட்டும் போதாது. இயேசுவின் நற்செய்தியை நம்பவேண்டும். அதாவது, இறைவனைத் தந்தையாக ஏற்றுக்கொண்டு. அவரை அன்பு செய்து, அவருக்காகவே வாழவேண்டும். இதுவே நற்செய்தி வாழ்வு. இதுவே நற்செய்தியை நம்புவது. இத்தவக்காலத்தில் தீய செயல்களை விட்டுவிடுவோம். இறைவன்மீது நமக்குள்ள நம்பிக்கையை ஆழப்படுத்தி,...

மத்தேயுவின் மகிழ்ச்சி

வரிவசூலிக்கிறவர் மக்களால் வெறுக்கப்பட்ட காலத்தில், இயேசு அப்படிப்பட்ட ஒருவரை, தனது சீடர்களுள் ஒருவராக ஏற்றுக்கொண்டது ஆச்சரியத்தைத் தருகிறது. ஆனால், அதுதான் இயேசு. திருடர்கள் மற்றும் கொள்ளையர்களோடு, வரிவசூலிக்கிறவர்களை மக்கள் நினைத்தனர். அவர்கள் தொழுகைக்கூடத்தில் நுழைவதற்கு மக்களால் தடுக்கப்பட்டார்கள். சாதாரண மக்கள் கூட்டத்திலிருந்து, அவர் வெறுத்து ஒதுக்கப்பட்டார். நேர்மையான வரிவசூலிக்கக்கூடியவரைப் பார்ப்பதது அபூர்வமாக இருந்தது. அப்படிப்பட்டவர்களுக்கு ஆங்காங்கே சிலை வைக்கப்பட்டிருந்தது என்று வரலாறு சொல்கிறது. அப்படியென்றால், எந்த அளவுக்கு மக்கள் வரிவசூலிக்கிறவர்களால் சுரண்டப்பட்டனர் என்பதை, நாம் அறிந்து கொள்ளலாம். இங்கே மத்தேயுவின் செய்கை, நம்மையெல்லாம் ஆச்சரியப்பட வைக்கிறது. அவர் இயேசுவால் அழைக்கப்பட்டிருக்கிறார். அது அவருக்கு மகிழ்ச்சி. அந்த மகிழ்ச்சி தனக்கு மட்டும் போதும், என்று அவர் நினைத்திருக்கவில்லை. மாறாக, தான் பெற்ற மகிழ்ச்சி, தனது நிலையில் இருக்கிற, திருந்த வேண்டும் என்று ஆசைப்படுகிற, தன்னைப்போன்ற தன்னுடைய நண்பர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைக்கிறார். எனவே, இயேசுவை அழைத்து ஒரு விருந்து படைக்கிறார். அந்த...

நொறுங்கிய உள்ளத்தை இறைவா, நீர் அவமதிப்பதில்லை

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 16 – 17 நொறுங்கிய உள்ளம் என்பது என்ன? ஒருவர் செய்த நன்மைகளை மறந்து, அவருக்கு எதிராகச் செய்த தவறுகளை எண்ணிப்பார்த்து, மனம் வருந்துகின்ற உள்ளமே நொறுங்கிய உள்ளம். நன்மை செய்தவருக்கு எதிராகச் செய்த தவறுகளை நினைத்துப்பார்க்கிறபோது, குற்ற உணர்வுகள் மேலோங்கி, தன்னையே வெறுக்கக்கூடிய மனநிலை, இவ்வளவுக்கு கீழ்த்தரமாக இருந்திருக்கிறோமே என்று கழிவிரக்கம் கொள்கிற நிலை தான், நொறுங்கிய உள்ளம். தனக்கு மன்னிப்பு கிடையாதா? தான் தவறு செய்தவர், தன்னுடை பலவீனத்தைப் புரிந்துகொண்டு தனக்கு மன்னிப்பு வழங்கிட மாட்டாரா? என்று வேதனையோடு, மனத்தாழ்மையோடு, ஏக்கத்தோடு காத்திருக்கிற நிலை தான் நொறுங்கிய உள்ளம். திருப்பாடல் ஆசிரியர், நொறுங்கிய உள்ளத்தினராகக் காணப்படுகிறார். தன்னுடைய வாழ்வில் ஏராளமான நன்மைகளைச் செய்த இறைவனுக்கு எதிராக, தான் தவறுகளைச் செய்துவிட்டேனே, நன்றி உணர்வு இல்லாமல் வாழ்ந்துவிட்டேனே என்று வேதனைப்படுகிறார். அந்த நொறுங்கிய உள்ளத்தோடு கடவுளை ஏறெடுத்தும் பார்க்கத்...