Tagged: Daily manna

தன்னலம் துறந்து சிலுவையைச் சுமப்போம்

இயேசுவும் தான் மெசியா என்பதை மறுக்காமல் ஏற்றுக்கொள்கிறார். தான் மெசியா என்பதை ஏற்றுக்கொண்ட இயேசு எப்படிப்பட்ட மெசியா என்பதை இன்றைய நற்செய்தியில் விளக்கிக்கூறுகிறார். வழக்கமாக போரை வழிநடத்திச்செல்கின்ற அரசர் பாதுகாப்பாகத்தான் இருப்பார். அரசரைப்பர்துகாப்பதற்காக படைவீரர்கள் தான் துன்பங்களைத்தாங்கிக்கொண்டு தங்கள் உயிரைத்தியாகம் செய்வர். இங்கேயோ மக்களைப்பாதுகாக்க, மெசியா துன்பப்படவேண்டும், தன் உயிரைத்தியாகம் செய்ய வேண்டும் என்ற புதிய சிந்தனையை இயேசு தருகிறார். மேலும் தன்னைப்பின்செல்கிறவர் கடைப்பிடிக்க வேண்டிய ஒழங்குமுறைகளையும் இயேசு விவிரிக்கிறார். இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் 1. ஒருவர் தன்னலம் துறக்க வேண்டும், 2. நாள்தோறும் சிலுவையைத்தூக்க வேண்டும். தன்னலம் என்பது தன்னை முன்னிறுத்துவது. தன் நலனுக்கான காரியங்களை மட்டும் செய்வது. அதற்காக மற்றவர்களைப்பயன்படுத்துவது. தனக்கு எந்த துன்பமும் வரக்கூடாது, தான் மட்டும் நன்றாக இருந்தால் போதுமானது, மற்றவர்களைப்பற்றிய கவலையும், அக்கறையும் இல்லாத மனநிலை தன்னலம். இயேசுவைப்பின்பற்ற வேண்டுமானால் இந்த தன்னலத்தை துறக்க வேண்டும். அதாவது, தன் ‘நலம்’ துறந்து மற்றவர் நலன் காக்க...

சாம்பல் புதன்

ஒவ்வொரு மனிதருக்குள்ளாக கடவுளின் சாயல், கடவுளின் உருவம் மறைந்து கிடக்கிறது. தொடக்க மனிதன் ஆதாமின் கீழ்ப்படியாமையால் நமது சாயலை, உருவத்தை இழந்துவிட்டோம். அந்த சாயல் நமக்குள்ளாக புதைந்து கிடக்கிறது. மறைந்துகிடக்கிறது. நமக்குள்ளாக புதைந்து கிடக்கிற, இந்த தெய்வீக பிரசன்னத்தை வெளிக்கொண்டு வருவதுதான், நம் வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது. இந்த புனித இலட்சியத்தை அடைய, விவிலியம் நமக்கு மூன்று வழிகளைக் கற்றுத்தருகிறது. செபம், தவம் மற்றும் தர்மம் என்கிற மூன்று வழிகள் மூலமாக, இந்த புனித இலட்சியத்தை நாம் அடையலாம். இதில் தான், இந்த தவக்காலத்தில் அதிக ஈடுபாடு காட்ட வேண்டும். தொடக்க காலத்தில், தலையான பாவங்கள் செய்தவர்கள், கடினமான ஒறுத்தல் முயற்சியை தவக்காலத்தின் தொடக்கத்திலேயே ஆரம்பிக்க வேண்டும். இந்த ஒறுத்தல் முயற்சியில் ஈடுபட்டவர்களுக்கென்று நோன்பு உடை கொடுத்து, சாம்பல் தெளித்து, திருச்சபையிலிருந்து விலக்கிவைக்கும் வழக்கம் இருந்தது. இந்த நோன்பு உடை மற்றும் சாம்பல் தெளிக்கும் வழக்கமானது, பழைய ஏற்பாட்டு யோனா புத்தகத்தைச்...

இருக்கிறதா, இல்லையா ?

இன்றைய நற்செய்தி வாசகம் (மாற்கு 8: 14-21) இயேசுவின் வாழ்வில் நடைபெற்ற ஒரு சிறிய, ஆனால் சுவையான நிகழ்வைச் சொல்கிறது. மாற்கு நற்செய்தியாளருக்கே உரிய தனித்தன்மைகளுள் ஒன்று இத்தகைய சிறு, சிறு தனித்தன்மை வாய்ந்த செய்திகளைப் பதிவு செய்திருப்பது. படகிலே பயணம் செய்துகொண்டிருக்கும்போதுதான் சீடர்களுக்கு நினைவு வருகிறது தேவையான அப்பங்களை எடுத்துச்செல்ல மறந்துவிட்டார்கள் என்று. படகில் அவர்களிடம் ஒரேயொரு அப்பம் மட்;டுமே இருந்தது. அந்த ஒரு அப்பத்தைக் கொண்டு எத்தனை பேருக்கும் உணவளிக்கும் ஆற்றல் மிக்க ஆண்டவர் தம்முடன் இருந்ததை அவர்கள் மறந்துவிட்டார்கள் என்பதையும் மாற்கு இயேசுவின் வாய்மொழி வழியாகப் பதிவு செய்துள்ளார். இந்த நிகழ்வு இரண்டு பாடங்களைக் கற்றுத் தருகிறது: 1. நம்மிடம் என்ன இருக்கிறது என்று பார்க்காமல், என்ன இல்லை என்றே நாம் கவலைப்பட்டுக்கொண்டிருக்கலாம். அது தவறு. பிறரோடு நம்மை ஒப்பிட்டுப் பார்த்து, நம்மிடம் “அது இல்லை, இது இல்லை” என்று நாம் புலம்பிக்கொண்டிருக்கலாம். “இது இருக்கிறதே” என்று...

மனநிலையை மாற்றுவோம்

இன்றைய நற்செய்தியில் (மாற்கு 8: 11-13) இரண்டு விதமான மனநிலையைப் பார்க்கிறோம். 1. இயேசுவின் மனநிலை 2. பரிசேயரின் மனநிலை. இயேசுவுக்கு நிச்சயமாக வானிலிருந்து அடையாளம் தோன்றச்செய்வது ஒன்றும் கடினமான காரியமல்ல. அவர் நினைத்திருந்தால், எதையும் அவரால் செய்திருக்க முடியும். இதே சோதனை, அவர் பாலைவனத்திலே நாற்பது நாட்கள் நோன்பிருந்து செபிக்கிறபோதும் ஏற்படுகிறது. அப்போதும் அலகையின் சோதனைக்கு இடங்கொடுத்து அருங்குறிகளைச் செய்யவில்லை. இப்போது பரிசேயர்களும் இயேசுவைச் சோதிக்கிறார்கள். ஆனால், இயேசு அதனை நிராகரிக்கிறார். இயேசுவின் வல்லமை தன்னை, தன்னுடைய பலத்தை மற்றவர்களுக்குக் காட்டுவதற்காக அல்ல. மாறாக, இறையரசைக் கட்டி எழுப்புவதற்காக. இறைவனை மாட்சிமைப்படுத்துவதற்காக. எக்காரணத்திற்காகவும், அதனை தனது சுயவிளம்பரத்திற்கு இயேசு பயன்படுத்த விரும்பவில்லை. பரிசேயர்கள் இயேசுவின் புதுமை செய்யும் ஆற்றலை தெரியாதவர்கள் அல்ல. இயேசுவின் அறிவின் ஆழத்தைக் கண்டு அதிசயிக்காதவர்கள் அல்ல. இயேசு தச்சர் மகன் என்றாலும், அவரிடத்திலே தங்கள் அறிவுத்திறமை செல்லாது, என்பதை உணராதவர்கள் அல்ல. இயேசு செய்த அனைத்துப்புதுமைகளும்...

இன்றைய தொழுநோய் !

இன்றைய முதல் வாசகமும் (லேவியர் 13: 1-2, 44-46), நற்செய்தி வாசகமும் (மாற்கு 1: 40-45) தொழுநோயைப் பற்றிப் பேசுகின்றன. இயேசுவின் காலத்தில் மக்களால் மிகவும் அருவருக்கப்பட்ட அந்தத் தொழுநோயினின்று ஒரு மனிதரை இயேசு எவ்வாறு மீட்டார் என்பதையே நற்செய்தி வாசகம் எடுத்துரைக்கின்றது. இயேசுவின் காலத்தில் மட்டுமல்ல, இன்றைக்கு 50 ஆண்டுகளுக்கு முன்னால் வரை தொழுநோயாளர்களின் நிலை ஒரே மாதிரிதான் இருந்தது. அவர்களது நோய்க்கு மருந்தில்லை. அவர்கள் இறைவனால் தண்டிக்கப்பட்டவர்கள் எனக் கருதப்பட்டனர். தம் குடும்பத்தினரிடமிருந்தும், ஊரிலிருந்தும் ஒதுக்கி வைக்கப்பட்டனர். மிகவும் புறக்கணிக்கப்பட்டவர்கள், ஒடுக்கப்பட்டவர்கள் என்னும் பட்டியலிலே இருந்தனர். அப்படி இருந்த ஒரு மனிதரைத்தான், இயேசு துணிந்து தொட்டுக் குணப்படுத்தினார். இதிலே நமது கவனத்தைக் கவரும் ஒரு செய்தி என்னவென்றால், இயேசு அவரது உடலை நலப்படுத்தும் முன்னர், அவரது உள்ளத்தையும், ஆன்மாவையும் தொட்டார், நலமாக்கினார் என்பதுதான். இயேசு விரும்பியிருந்தால், அவரைத் தொடாமலே, ஒரு வார்த்தையினால் நலமாக்கியிருக்க முடியும். ஆனால், இயேசுவின் இந்த...