Tagged: Daily manna

கடவுள் அவரது அன்பினால் நமக்கு புத்துயிர் அளிப்பார்.செப்பனியா 3:17

அன்பார்ந்த சகோதர,சகோதரிகளே,நமது தேவனாகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் சோர்ந்து போயிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் நம் ஆண்டவர் தமது வார்த்தைகளை அனுப்பி நம்மை தேற்றி, ஆதரித்து கண்மணியைப்போல் காத்து, நமது பெலவீனத்தை எடுத்துபோட்டு அவரின் பெலத்தால் நம்மை நிரப்பி, நம் தேவைகள், ஏக்கங்கள் யாவையும் சந்தித்து கிருபையளிக்கிறார். நமக்கு எதிராக எழும்பும் எல்லாக்குற்றங்களில் இருந்தும் நம்மை விடுவிக்க நல்லவராகவும்,வல்லவராகவும் இருக்கிறார். ஆண்டவர் நமது தண்டனை தீர்ப்பை தள்ளி, நம் பகைவர்களை அப்புறப்படுத்தி, நம் நடுவில் இருக்கிறார். இனி எந்த தீங்கையும் காணாதபடிக்கு நம்மை ஆதரிக்கிறார். செப்பனியா 3:15. நம்முடைய கடவுளாகிய ஆண்டவர் நம் நடுவில் இருந்து நமக்கு மீட்பு அளித்து நமது பெயரில் மகிழ்ந்து அவருடைய அன்பினால் நமக்கு புத்துயிர் அளித்து நம்மைக் குறித்து மகிழ்வார். இது எப்போது என்றால் நாம் அவர் விரும்பும் காரியங்களை செய்து அவரின் சித்தத்தை நிறைவேற்றினால் நமதுபேரில் அகமகிழ்வார். இயேசுகிறிஸ்து இந்த உலகில் வாழ்ந்த காலத்தில் ஒருநாள் அவரை நோக்கி...

ஒருவரோடொருவர் சமாதானமுள்ளவர்களாய் இருப்போம். மாற்கு 9:50.

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் ஒவ்வொருவருக்கும் எங்கள் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் ஒவ்வொருவரும் நம்மால் கூடுமட்டும் எல்லோரிடமும் சமாதானமுள்ளவர் களாய் வாழ்ந்து நம்முடைய ஆண்டவரின் திருசித்தத்தை நிறைவேற்றுவோம். நமக்கு அமைதியை தருபவர் அவரே! சமாதானத்தை உங்களுக்கு விட்டுச் செல்கிறேன். என் சமாதானத்தையே உங்களுக்கு அளிக்கிறேன், நான் உங்களுக்கு தரும் சமாதானம் உலகம் தரும் சமாதானம் போன்றது அல்ல. நீங்கள் உள்ளம் கலங்க வேண்டாம். மருள வேண்டாம் என்று நம் தேவன் நமக்கு யோவான் 14:27ல் நமக்கு வாக்கு அருளியிருக்கிறார். வாக்கு அளித்த நம் கடவுள் உண்மையுள்ளவர். அதை கடைசி வரை நமக்கு நிறைவேற்றுவார். இன்றும் நம்மில் எத்தனை பேர் எல்லோரிடமும் அன்பு செலுத்துகிறோம் என்று நம்முடைய இருதயத்தை ஆராய்ந்து பார்ப்போம். இயேசுவின் பாதையில் நடக்கிற நாம் அவர் காட்டிய வழியில் இருக்கிறோமா? நம்மையே உயிருள்ள பலியாக அவருக்கு படைக்கிறோமா? அவருக்கு உகந்த வாழ்வை வாழ்கிறோமா?என்று நம்மை ஆராய்ந்து நம்மிடத்தில் இருக்கும் தவறுகளை...

நாம் நமது ஆண்டவரின் மேல் நம்பிக்கையாயிருப்போம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம்முடைய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இந்த நாளிலும் நாம் அநேக தொல்லைகளின் மத்தியில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறோம். ஒவ்வொருவருக்கும் ஒருவிதமான பாடுகள், கஷ்டங்கள் வருகிறது. ஆனால் அவைகளில் இருந்து தப்பிக்க நமக்கு விடுதலை அளிக்க நம் தேவன் நம் அருகில் நின்று நம்மை எல்லாத்தீங்குக்கும் விலக்கி காப்பாற்ற நமது அருகில் ஆவலாய் காத்திருக்கிறார். நாம் செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்றுதான். அவரை நோக்கி பார்த்து அவரை கூப்பிட்டு அவரிடத்தில் நமது எல்லாத் தேவைகளையும் அறிக்கையிட்டு அவரின் சித்தப்படி நடந்தோமானால் நமது எல்லா தேவைகளையும் அவரே பொறுப்பெடுத்து நமது தேவைகள் யாவையும் பூர்த்தி செய்வார். நம்பிக்கையுடையவர்களே! இன்றே ஆண்டவரிடத்தில் வாருங்கள், அவர் இரட்டிப்பான ஆசீர்வாதங்களை தருவார். நாம் அவர்மேல் வைத்த நம்பிக்கை நம்மை ஒருபோதும் வெட்கப்படுத்தாது. ஆண்டவரின் தூய ஆவியானவர் நம்முடைய இருதயத்தில் இருந்து நாம் செய்ய வேண்டிய அனைத்து காரியங்களையும் நமக்கு போதிப்பார். அவரின் வார்த்தைக்கு கீழ்படிந்து நடந்தோமானால் நிச்சயம் நாம் நம்முடைய எல்லா ஆசீர்வாதத்தையும் பெற்றுக்கொள்வோம். ஆண்டவரின் மேல்...

கண்ணின் மணியென நம்மை காத்தருளினார்.இ.சட்டம் 32:10

கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். இன்றும் நம் ஆண்டவராகிய இயேசு நம்மை வழிநடத்தும் விதம் ஆச்சரியமானது, அதிசயமானது. நமது ஆண்டவர் வானங்களுடன் பேசும்பொழுது அவை செவிகொடுக்குமாம். பூமியானது அவரின் சொல்லை உற்றுநோக்குமாம். பெருமழை பயிர்கள் மேல் பொழிவது போலவும், தென்றல் பசும்புல் மீது வீசுவதுபோலவும், நம் ஆண்டவரின் அறிவுரை மழையெனவும், அவரின் சொற்கள் பனியெனவும் இறங்கும். உயிரற்ற அவைகளுடன் பேசும் ஆண்டவர் நம்மோடும் பேசி நம் தேவைகளை சந்தித்து, நம்மை அவரின் கண்ணின் மணியைப்போல் காப்பார் என்பதில் சந்தேகம் உண்டோ! இதோ!அவருடைய மக்களை அவரின் வல்லமையால் நிரப்பி, தமது மக்களோடு உடன்படிக்கை செய்து அவரின் திருச்சட்டத்தை நம் இதயத்தில் எழுதி வைத்திருக்கிறார். அவரின் இதயத்தின் திட்டங்களை நம்மில் வைத்து செயலாக்கி நிறைவேற்றுவார். தியத்தீரா நகரைச் சேர்ந்த பெண் லீதியா பவுல் பேசியதை ஏற்றுக்கொள்ளும்படி ஆண்டவர் அவள் உள்ளத்தை திறந்ததுபோல் இதை வாசிக்கும் ஒவ்வொருவரின் இதயமும் திறக்கப்பட்டு ஆண்டவரை முழுதும் நம்பி, அவரையே பிடித்துக்கொண்டால் அவர் நம்மை எல்லாத் தீங்குக்கும் விலக்கி காப்பார். தி.ப.16:14. ஆண்டவர் நம்மை அழைத்த...

திருச்சட்டம் கற்பிக்கும் ஒழுக்கநெறியிலே நடப்போம்

அன்பான சகோதர,சகோதரிகளுக்கு,நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் நல்வாழ்த்துக்கள். நம் ஒவ்வொருவருக்கும் அவரவர் செயல்களுக்கேற்ப கடவுள் கைம்மாறு செய்கிறார். நாம் மன உறுதியோடு நற்செயல் புரிந்து மாட்சி, மாண்பு, அழியாமை ஆகியவற்றை நாடுவோருக்கு அவர் நிலைவாழ்வை வழங்குவார். ஆனால் தன்னலம் நாடுபவர்களாய் உண்மைக்கு பணியாமல் அநீதிக்கு பணிபவர்களின் தலைமேல் அவருடைய சினமும், சீற்றமும் வந்து விழும். தீமை செய்யும் எல்லா மனிதருக்குமே வேதனையும் நெருக்கடியும் உண்டாகும். நன்மை செய்யும் அனைவருக்கும் பெருமையும் மாண்பும் அமைதியும் கிடைக்கும்.ஏ னெனில் கடவுள் ஆள் பார்த்து செயல்படுகிறவர் அல்ல. திருசட்டத்தை அறியாமல் பாவம் செய்யும் எவரும், அந்தச் சட்டத்தின் தீர்ப்புக்கு உட்படாமலேயே அழிவுறுவர்: திருசட்டத்துக்கு உட்பட்டு எவரும் பாவம் செய்தால், அச்சட்டத்தாலே தீர்ப்பளிக்கப்படுவர். ஏனெனில் திருச்சட்டத்தை கேட்பதால் மட்டும் யாரும் கடவுளுக்கு ஏற்புடையவர் ஆவதில்லை: அதனைக் கடைப்பிடிப்பவர்களே அவருக்கு ஏற்புடையவர்கள் ஆவார்கள். திருச்சட்டத்தை பெற்றிராத பிறஇனத்தார் அதில் உள்ள கட்டளைகளை  இயல்பாகக் கடைப்பிடிக்கும் பொழுது அவர்களுக்குத் திருச்சட்டம் இல்லாதபோதிலும் தங்களுக்கு தாங்களே அவர்கள் சட்டமாய் அமைகிறார்கள் திருச்சட்டம் கற்பிக் கும்...

%d bloggers like this: