Tagged: Daily manna

நல்ல மனிதர்களாக வாழ்வோம்

ஆணவம், அகங்காரம், செருக்கு போன்றவை ஒரு மனிதனை மோசமான நிலைக்குத் தள்ளுகிறது. மனித உணர்வுகளை அகற்றி, அவனுள் மிருக எண்ணங்களை உருவாக்குகிறது. அதற்கான சிறந்த எடுத்துக்காட்டு இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும் ஏரோதியாள். மேலே சொன்ன தீய எண்ணங்கள், சிந்தனைகள் ஒரு மனிதனை எந்த அளவுக்கு, கீழ்த்தரமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை, இந்த நிகழ்ச்சியிலிருந்து நாம் அறிந்து கொள்ளலாம். வழக்கமாக, இறப்பு என்றாலோ, கொலை என்றாலோ, குழந்தைகளை, பிள்ளைகளை அருகில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். அவர்கள் பயந்து விடக்கூடாது, அவர்களுக்கு ஒரு தீங்கும் வரக்கூடாது என்கிற எண்ணம் தான் இதற்கு காரணம். இங்கு, சொந்த தாயே தனது மகளை, ஒரு கொலை நடப்பதற்கு காரணமாகிறாள். தன்னுடைய சொந்த மகளை, தன்னுடைய பழிவாங்கும் குரூர புத்திக்கு உபயோகப்படுத்துகிறாள். இதனால், தனது மகளின் மனநிலை பாதிக்கப்படுமே, அவளது வாழ்க்கை வீணாகிப்போய் விடுமே என்று அவள் சிறிதும் கவலைகொள்ளவில்லை. காரணம், அவளது நினைவுகள் முழுவதும்,...

போதனையை வாழ்வாக்குவோம்

இயேசுவின் கடுமையான வார்த்தைகளை மத்தேயு நற்செய்தியாளர் பதிவு செய்கிறார். பரிசேயர்களுக்கும், மறைநூல் அறிஞர்களுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஏழு முறை “ஐயோ, கேடு” என்ற கண்டன வார்த்தைகளை இயேசு உதிர்க்கிறார். “ஐயோ, கேடு“ என்ற வார்த்தைக்கு பொருள் கட்டுக்கடங்காத கோபம் மட்டுமல்ல, தீராத வருத்தமும் சேர்ந்ததுதான். அது ஒரு நேர்மையான கோபம். அநியாயத்தைக்கண்டு பொறுக்க முடியாமல் வெளிப்படுத்துகின்ற உணர்வுகள். இயேசுவின் கோபத்திற்கு இரண்டு காரணங்கள் நாம் சொல்லலாம். 1. பரிசேயர்கள் மற்றும் மறைநூல் அறிஞர்கள் வெளிப்புற அடையாளங்களுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை, அடையாளங்கள் காட்டுகின்ற உண்மையான அர்த்தத்திற்கு கொடுக்கத்தவறி விடுவதுதான். 2. சொல்லப்படுகிற கருத்துக்களும், சிந்தனைகளும் மற்றவர்களுக்குத்தான், தங்களுக்கில்லை என்ற மமதையும் அவர்களோடு சேர்ந்துகொள்ள, இயேசுவினுடைய கடுமையான கோபத்திற்கு ஆளாகின்றனர். போதிக்கின்ற போதனைகளும் முதலில் நமதாக்கப்பட வேண்டும். வாழ்ந்து காட்டப்படாத போதனைகள் உயிர் இல்லாத சவம் போன்றதுதான். பரிசேயர்கள், மறைநூல் அறிஞர்களின் போதனை இப்படித்தான் இருந்தது. நம்முடைய போதனை வாழ்ந்து காட்டி சொல்லப்படுவதாக இருக்கட்டும்....

இறைவனின் அழைத்தல்

கடவுளின் பணிக்காக தங்களையே அர்ப்பணித்திருக்கிற கடவுளின ஊழியர்களுக்கான அதிகாரம் எங்கிருந்து வருகிறது? என்பதை விளக்கக்கூடிய அருமையான பகுதிதான், இன்றைய நற்செய்தி வாசகம். பேதுருவை தலைவராக முடிவு செய்ய வேண்டும் என்று இயேசு நிச்சயமாக ஏற்கெனவே முடிவெடுத்திருக்க மாட்டார். கடவுள் அந்த பொறுப்பை யாருக்கு வைத்திருக்கிறாரோ, அவருக்கே உரியது என்பதில் இயேசு தெளிவாக இருக்கிறார். கடவுளின் திருவுளம் எது? என்பதை அறிவதற்காக இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார். பேதுருவின் பதிலைக்கேட்டவுடன், இயேசுவுக்கு மகிழ்ச்சி வந்திருக்க வேண்டும். தன்னைப்பற்றி சொன்னதற்காக அல்ல, தனக்கு பிறகு திருச்சபைக்கு யார் தலைவர்? என்பதை, கடவுள் வெளிப்படுத்திவிட்டார் என்பதற்காக. அந்த பதிலை இயேசு நிச்சயமாக ரசித்திருக்க வேண்டும். உடனே இயேசு பேதுருவைப்பார்த்து, அதனை வெளிப்படுத்தியது இறைத்தந்தையே, என்று சான்றுபகர்கிறார். ஆக, கடவுளின் பணியாளர்கள் அனைவருமே, இறைவனால் ஏற்படுத்தப்பட்டவர்கள் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. ஒருவருடைய திறமையினால் அல்ல, கடவுளின் அருளால் தான், அழைத்தலைப் பெறமுடியும், என்பது இங்கே நமக்கு தெளிவாகிறது....

நாம் வாழும் வாழ்க்கை

இன்றைய நவீன கால, அரசியல் வாழ்வை நாம் கேட்ட நற்செய்தி வாசகம் பிரதிபலிப்பதாக இருக்கிறது. இன்றைக்கு இரண்டுவிதமான வர்க்கங்கள் இந்த உலகத்தில் இருக்கிறது. இன்று மட்டுமல்ல, என்றுமே இருந்திருக்கிறது. 1. அடிமை வா்க்கம் 2. ஆளும் வர்க்கம். தொடக்க காலத்தில், முடியாட்சியில், அதிகாரவர்க்கமான அரசர்கள், மக்களை தங்களது அடிமைகளாக எண்ணினர். அதிகாரவர்க்கத்தினருக்கு பணிவிடை செய்வதற்காகவே படைக்கப்பட்டவர்கள் என எண்ணினர். மன்னராட்சி ஒழிந்து மக்களாட்சி மலர்ந்தாலும், காட்சிகள் மாறவே இல்லை. தனிநபர் வழிபாடு எங்கும் காணப்படுகிறது. அரசியல், திரைப்படங்கள், விளையாட்டு என்று, எங்கு பார்த்தாலும் தனிநபர் வழிபாடு இந்த சமூகத்தை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கிறது. நல்லவர்கள், பொதுநலனுக்காக உழைக்கிறவர்களுக்கு மதிப்பில்லை. அரசியல் அனைவராலும் அங்கீகரிக்கப்பட்ட வியாபாரமாய் மாறிவிட்டது. மக்களும் அதற்கு ஏற்ப வாழ பழகிவிட்டார்கள். கோடிகளை வாரிஇறைத்து, கோடி இலட்சங்களை அள்ளக்கூடிய, அள்ள அள்ள குறையாத அட்சய பாத்திரமாய், அரசியல் வியாபாரமாகிவிட்டது. மக்களை அடக்கி ஆள வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதற்கேற்ப, தங்களது அதிகாரத்தை மக்கள்...

இறைவனின் அன்பு

அன்பு தான் இந்த உலகத்தின் மொழி. அன்பு தான் நம்மை ஒன்றாக இணைக்கிற மொழி. அன்பு தான் இந்த உலகத்தில் எல்லாமே, என்பதனை நமக்கு உரக்கச் சொல்வது இன்றைய நற்செய்தி வாசகம். இந்த உலகத்தில் இருக்கிற ஒவ்வொருவருமே அன்பு செய்யப்பட விரும்புகிறோம். நாம் அன்பு செய்கிறோமோ, இல்லையோ, மற்றவர்கள் நம்மை நிர்பந்தமில்லாமல் அன்பு செய்ய வேண்டும் என்று விரும்புகிறோம். இந்த உலகத்தில் நம்மை அன்பு செய்கிறவர்கள் இருக்கிறபோது, அதன் ஆனந்தமே தனிதான். இந்த உலகத்தில் யார் நம்மை வெறுத்தாலும், நமக்கு அன்புகாட்டக்கூடிய இறைவன் இருக்கிறார் என்கிற ஆழமான செய்தி இன்றைய வாசகத்தின் வழியாக நமக்குக் கொடுக்கப்படுகிறது. நம் மீது அன்பு காட்டக்கூடிய இறைவனுக்கு நமது வாழ்வில் நாம் முதலிடம் கொடுக்க வேண்டும். இறைவன் தான் நம் வாழ்வில், எல்லாமுமாக இருக்க வேண்டும். நாம் வாழ்வதும், இருப்பதும், இயங்குவதும் இறைவனுடைய அருளில் தான் என்பதை உணர வேண்டும். இறைவனின் பராமரிப்பு நமக்கு இல்லாவிடில்...