Tagged: Daily manna

நம்பிக்கை என்னும் நற்பண்பு

பழங்காலத்தில் மக்கள் தீய ஆவிகள் இருப்பதை முழுமையாக நம்பினர். காற்று முழுவதும், ஊசி நுழையாத அளவுக்கு தீய ஆவிகள் இருந்ததாக அவர்களிடையே ஒரு நம்பிக்கை இருந்தது. இந்த தீய ஆவிகள் சுத்தமில்லாத பகுதிகளில் குறி;ப்பாக கல்லறைகள், பாலைவனம் போன்ற இடங்களில் வாழ்ந்ததாகவும் ஒரு பேச்சு இருந்தது. இந்த தீய ஆவிகள் பயணிகளுக்கும், புதிதாக திருமணம் செய்த தம்பதியர்க்கும், குழந்தை பெற்றெடுத்த பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. தீய ஆவிகளைப்பற்றிய அச்சம் இருந்த அந்த காலச்சூழ்நிலையில் இயேசு துணிவோடு தீய ஆவிகளிடம் பேசுவது அவர் கடவுள் மீது வைத்திருந்த முழுமையான நம்பிக்கையைப்பறைசாற்றுவதாக அமைகிறது. இன்றைய காலத்தில், பேய்களையும், தீய ஆவிகளையும் நம்புகிற அளவுக்கு கடவுள் மீது நம்பிக்கை இல்லாதது மிகப்பெரிய வேதனையைத்தருகிறது. எல்லாவற்றிற்கும் காரணம் தீய ஆவிகள் என்று நம்புகிற நமக்கு கடவுள் நம்பிக்கை எங்கே போயிற்று? இயேசு அதனைக் கற்றுத்தருகிறார். கடவுள் நம்பிக்கை இருக்கிறவனுக்குத்தான் துணிவு இருக்கும். கடவுள் மீது...

இயேசுதரும் அமைதி

ஒவ்வொரு புதுமையும், முன்னொரு காலத்தில் இருந்த புதுமையாக மட்டும் இருந்தால், அது நமக்குள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை. அது நடந்து முடிந்து விட்டது. இயேசு வாழ்ந்தார். புதுமைகள் செய்தார். அவ்வளவுதான் என்று யோசிக்கத்தோன்றும். இயேசு வாழ்ந்தபோது மட்டும் தான், கடலை அடக்குவாரா? அப்படியென்றால், சீறி எழுகின்ற அலைகளுக்கும், கடற்காற்றும் இப்போதும் சிக்கிக்கொண்டிருக்கிறவர்களை அவர் காப்பாற்ற மாட்டாரா? என்ற கேள்வியும் நமக்குக் கேட்கத்தோன்றும். இயேசுவின் வல்ல செயல்களும், புதுமை செய்யும் ஆற்றலையும் மட்டும் இந்த பகுதி நமக்குத் தெரிவிப்பதற்காக எழுதப்படவில்லை. அதையும் தாண்டி நாம் சிந்திப்பதற்கு, இது நமக்கு அழைப்பு விடுக்கிறது. இயேசு இருக்கிற இடத்தில் பிரச்சனைகளுக்கு இடமில்லை. மாறாக, அமைதி மட்டும் தான் இருக்கும், என்கிற செய்தியை, இந்த வாசகம் நமக்குத்தருகிறது. வாழ்வின் எத்தகைய சூழ்நிலையில் நாம் வாழ்ந்தாலும், இயேசு நம்மோடு இருந்தால் போதும். நமது வாழ்க்கை அமைதியாகப் பயணிக்கும். அந்த அனுபவத்தை நாம் பெற்றுக்கொண்டால், நமது வாழ்க்கையில் நாம் அமைதியாகப்...

ஒன்றுபட்ட வாழ்வு

தோமா இயேசு மீது அளவுகடந்த நம்பிக்கை வைத்திருந்தார் என்பதில் நாம் சந்தேகம் கொள்ள முடியாது. அவர் மீது மட்டற்ற அன்பும் கொண்டிருந்தார். அதனால் தான், மற்ற சீடர்கள் யூதேயா செல்லத்தயங்கியபோது (யோவான் 11: 16) அவர் துணிவோடு செல்வதற்கு மற்றவர்களையும் அழைக்கிறார். இயேசுவின் இறப்பு சீடர்களுக்கெல்லாம் மிகப்பெரிய அதிர்ச்சி. அந்த இழப்பு ஈடு கட்ட முடியாதது. இயேசுவின் வாழ்க்கை இவ்வளவு குறைந்த நேரத்திற்குள் முடிந்துவிடும் என்று அவர்கள் ஒருபோதும் நினைக்கவில்லை. எனவே சீடர்கள் ஒவ்வொருவருமே கவலைபடிந்த ரேகையோடு இருக்கிறார்கள். சீடர்கள் ஒன்றுபட்டு, கவலையோடு ஒருவர் மற்றவரைத் தேற்றிக்கொண்டு இருக்கிறபோது, தோமா அவர்களோடு இல்லை. ஒன்றுபட்டு இருப்பதை தோமா விரும்பவில்லை. எனவேதான், அவர் வெளியே செல்கிறார். துன்பம் என்பது தனிமையிலே நம்மைச் சோர்வுறச்செய்யக் கூடியது. நமது விசுவாசத்தை தளர்ச்சியுறச்செய்யக் கூடியது. துன்பநேரத்தில், ஒருவர் மற்றவருக்கு உற்ற துணையாளராக இருக்க வேண்டும். அதுதான் உண்மையான கிறிஸ்தவ வாழ்வு. ஒன்றுபட்டு வாழாமல், நம்மையே தனிமைப்படுத்திக்கொண்டு வாழ்கிறபோது,...

உடனிருப்பும், ஒத்துழைப்பும்

இயேசுவின் போதனைகளை நாம் கேட்கிறபோது, நம்மால் அவரைப் பின்தொடர முடியுமா? அவருடைய போதனையில் நிலைத்து நிற்க முடியுமா? என்கிற சிந்தனைகள் நமது உள்ளத்தில் ஓட ஆரம்பிக்கிறது. நிச்சயம் இயேசுவின் போதனைகளை நமது வாழ்வில் ஏற்று, வாழ முயற்சிப்பது சவாலான ஒன்றுதான். ஆனாலும், நாம் அனைவரும் அப்படிப்பட்ட வாழ்வை வாழ வேண்டும், கடவுளுக்கு ஏற்புடையதாக நமது வாழ்வு அமைய வேண்டும் என்று நற்செய்தி நமக்கு கற்றுக்கொடுக்கிறது. நாம் போதனைகளை வாழ முயற்சி எடுத்து, அதில் நம்மால் வாழ முடியாவிட்டாலும், குறைந்தபட்சம், கிறிஸ்துவின் போதனைகளை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும் நமது உடனிருப்பையும், ஒத்துழைப்பையும் முழுமையாகக் கொடுக்க வேண்டும் என்பது நமது விருப்பமாக இருக்கிறது. ஒரு ஓட்டப்பந்தயத்தில் பல வீரர்கள் ஓடுகிறார்கள். ஓடக்கூடிய அனைத்து வீரர்களையும் மக்கள் கைதட்டி உற்சாகப்படுத்துகிறார்கள். அவர்கள் வெற்றி பெறுவதோ, தோல்வியடைவதோ, அவர்களுக்கு கிடைக்கும் பாராட்டிற்கு தடையாக இருப்பது இல்லை. அதேபோலத்தான், கடவுளின் வார்த்தையை வாழ முயற்சி எடுக்கும் அனைவருக்கும்...

நன்மை செய்யும் மனம்

தனது வார்த்தையின் மூலம் ஒருவருக்கு இயேசு சுகம் தருகிறார். இயேசு தன் முன்னால் நிற்கும் ஒருவருக்கு சுகம் கொடுப்பது நாம் பல புதுமைகளில் பார்த்திருக்கிறோம். ஆனால், எங்கோ இருக்கிற ஒருவருக்கு இயேசு சுகம் கொடுப்பது, அதுவும் தனது ஒரு வார்த்தை மூலம் சுகம் கொடுப்பது, நிச்சயம் மிகப்பெரிய ஆச்சரியம். ஆனால், அதுதான் இயேசு. புதுமைகளின் நாயகன் நிச்சயம் இயேசுதான். இது நம்புவதற்கு கடினம் தான். ஆனால், அறிவியலே இதற்கு விளக்கம் கொடுத்து, அது நடக்கக்கூடியது என்கிற விளக்கத்திற்கு துணைநிற்கிறது. எண்ணங்கள் போலத்தான் நமது வாழ்வு என்று பொதுவாகச் சொல்வார்கள். அதேபோல, நமது எண்ணங்களின் வழியாக, நமது உணர்வுகளை மற்றவர்களுக்கு புரிய வைக்க முடியும். மற்றவர்களுக்கு உதவி செய்ய முடியும். மற்றவர்களுக்கு செபிக்க முடியும். இயேசு நன்மை செய்வது, என்ற ஒற்றைக்குறிக்கோளில் தனது வாழ்வை அமைத்திருந்தார். அதற்கு எல்லாவிதமான வழிகளையும் அவர் கையாண்டார். கால்நடையாகச் சென்றார். தனக்கு எதிரில் வந்தவர்களைக் குணப்படுத்தினார். தனது...