Tagged: Daily manna

உண்மையான செபம் எது?

பக்தியுள்ள யூதர் காலை, மதியம், மாலை என மூன்றுவேளைகள் செபம் செய்வார். அதுவும் ஆலயத்திற்கு வந்து செபிப்பது சிறந்த அருளைப்பெற்றுத்தரும் என்பதால், ஆலயத்திற்கு வந்து பலர் செபித்தனர். யூதச்சட்டம் ஆண்டிற்கு ஒருமுறை பாவக்கழுவாய் நாளன்று மட்டும் நோன்பிருக்க அறிவுறுத்தியது. ஆனால், சிலர் கடவுளின் அருளை சிறப்பாகப் பெறுவதற்காக வாரம் இருமுறை திங்களும், வியாழனும் நோன்பிருந்தனர். இந்த இரண்டு நாட்களும்தான் யெருசலேமில், மக்கள் பொருட்களை வாங்க சந்தைகளில் அதிக எண்ணிக்கையில் கூடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல, விளைச்சலில் பத்தில் ஒரு பங்கு கொடுக்க வேண்டுமென்று இணைச்சட்டம்(14:22), கூறுவதன் அடிப்படையில், யூதர்கள் இதைப்பின்பற்றினர். இந்தப்பாரம்பரிய முறைகளை பரிசேயர்கள் மக்கள் பார்க்க வேண்டுமென்பதற்காக செய்தார்கள். மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக ஆலயத்திற்கு வந்து செபித்தார்கள், தாங்கள் நோன்பிருப்பது தெரியவேண்டும் என்பதற்காக, தங்கள் முகத்தை வெள்ளையாக்கிக்கொண்டு சந்தைவெளிகளில் நடந்தார்கள், அதேபோல கொடுக்கத்தேவையில்லாத பொருட்களிலும் பத்திலொரு பங்கைக்கொடுத்தார்கள். இன்றைய நற்செய்தியில், பரிசேயர் மற்றும் வரிதண்டுபவர் ஆலயத்தில் நின்று செபிக்கிறார்கள்....

திருந்திவாழ அழைப்பு

பலி செலுத்திக்கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை, யூதா்கள் இயேசுவுக்கு அறிவிக்கின்றனர். ஆனால், இயேசுவின் பதில், கேள்வியாக அமைவது நமக்கு வியப்பைத் தருகிறது. பிலாத்து கொன்றான் என்ற செய்திக்கும், இறந்தவர்கள் மற்றெல்லாரையும் விட பாவிகள் என நினைக்கிறீர்களா? என இயேசு கேட்ட கேள்விக்கும் தொடர்பு இல்லாதது போல தோன்றுகிறது. சற்று ஆராய்ந்து பார்த்தால், அதனுடைய உண்மையான விளக்கம் நமக்கு தெரியவரும். இயேசுவிடம் அந்த செய்தியைச் சொன்னவர்கள், உள்ளத்தில் ஒன்றை வைத்து, இயேசுவிடத்தில் வெறும் செய்தியை மட்டும் சொல்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் மறைத்த செய்தி என்ன? வாழ்வை முழுமையாக முடிக்காமல் கொலை செய்யப்பட்டோ, விபத்திலோ, தற்கொலை செய்தோ இறக்கிறவர்கள், பாவிகள் என்ற மனநிலை, யூதா்கள் மத்தியில் இருந்தது. அதனால் தான் கடவுள் அவர்களைத் தண்டித்துவிட்டார் என்று, அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், இயேசு இங்கிருக்கிறவர்களை விட, அவர்கள் பெரிதாக குற்றம் ஒன்றும் செய்துவிடவில்லை, என்று பதில்கொடுக்கிறார். இன்றைக்கு நாமும் நமது குற்றங்களை மறைத்து,...

நன்மதியையும் அறிவாற்றலையும் எனக்குப் புகட்டும்

திருப்பாடல் 119: 66, 68, 76, 77, 93, 94 வாழ்க்கை என்பது சிக்கல்கள் நிறைந்தது என்று சொல்கிறோம். இது உண்மை தானா? என்று சிந்தித்து, அதற்கான நிதர்சனத்தை நாம் பார்க்கிறபோது, அது பொய்யான தோற்றம் என்பது புலப்படுகிறது. வாழ்க்கை என்பது சிக்கலானது அல்ல, அதை நாம் தான் சிக்கல் நிறைந்ததாக மாற்றுகிறோம். உண்மையில் வாழ்க்கை என்பது அற்புதமானது. அழகானது. நம்முடைய வாழ்க்கை அழகானதாக அற்புதமானதாக இருக்க வேண்டுமென்றால், என்னென்ன பண்புகள் இருக்க வேண்டும் என்பதை, இன்றைய திருப்பாடல் அழகாக படம்பிடித்துக் காட்டுகிறது. வாழ்க்கையில் நடக்கும் அநேக பிரச்சனைகளுக்கு நாம் எடுக்கிற தவறான முடிவுகள் தான் காரணமாக இருக்கிறது. முடிவுகளை சரியாக எடுக்கத் தெரியாததன் விளைவு, நாம் பிரச்சனைக்குள்ளாக மாட்டிவிடுகிறோம். முடிவுகளை நாம் எடுக்கிறபோது, அறிவாற்றலோடு, நன்மதியோடு எடுக்க வேண்டும். உணர்வுகளுக்கு மட்டும் இடம் கொடுக்காமல், பொறுமையாகச் சிந்தித்து, நல்ல முறையில் செபித்து, அனுபவத்தின் அடிப்படையில் நேர்மையான உள்ளத்தோடு நாம் எடுக்கிற...

ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்

திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6 மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது. மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை...

இதோ வருகின்றேன்

திருப்பாடல் 40: 6 – 7அ, 7ஆ – 8, 9, 16 கடவுளின் அழைப்பைக் கேட்டு, இதோ வருகின்றேன் என்று திருப்பாடல் ஆசிரியர் சொல்கிறார். கடவுள் விரும்புவது எது? கடவுளின் உண்மையான அழைப்பு எது? கடவுளின் திருவுளம் எது? இது போன்ற கேள்விகளை நாம் கேட்டுப்பார்த்தால், “வழிபாடு“ என்று நாம் செய்து கொண்டிருக்கிற பலவற்றை நிறுத்த வேண்டிவரும். மாதாவுக்கு, புனிதர்களுக்கும் தங்க நகைகள் போட்டு அழகுபார்க்கிறோம். இதை மாதாவோ, புனிதர்களோ விரும்புவார்களா? அவர்கள் இந்த உலகத்தில் வாழ்ந்தபோது, ஏழ்மையையும், ஒறுத்தலையும் நேசித்தவர்கள். ஆனால், இன்றைக்கு நம்முடைய வழிபாடு? இன்றைக்கு நாம் செய்கிற பல தவறுகளை விசுவாசத்தின் பெயரால் சமரசம் செய்து கொண்டிருக்கிறோம். அந்த தவறுகளை விசுவாசத்தின் பெயரால் நியாயப்படுத்திக்கொண்டிருக்கிறோம். ஆலயம் கட்டுவதற்கும், ஆலயப்பொருட்களை வாங்குவதற்கும் ஆயிரமாயிரம் தாராளமாக நன்கொடை வழங்கும் நம் மக்கள், ஏழைகளின் துயர் துடைக்க என்று அவர்களை அணுகினால், உதவி செய்ய மனமில்லாத நிலையைப் பார்க்கிறோம். இது...

%d bloggers like this: