Tagged: Daily manna

வார்த்தைகளின் வழியில் இறைவனோடு பேசுவோம்

ஓசேயா 14: 1 – 9 “மொழிகளை ஏந்தி, ஆண்டவரிடம் திரும்பி வந்து இவ்வாறு சொல்லுங்கள்”என்று, இன்றைய இறைவார்த்தை நமக்குக் கற்றுக் கொடுக்கிறது. அதாவது, கடவுளிடத்தில் வருகிறபோது, நம்முடைய வார்த்தைகளை ஏந்தி வந்து சொல்ல வேண்டும் என்பது இதன் பொருள். கடவுளிடத்தில் வருகிறபோது, நாம் வார்த்தைகளை ஏந்தி வருவது அவசியமானது. நம்முடைய உணர்வுகளோடு கடவுளிடத்தில் பேசுவது தவறல்ல. நாம் இறைவன் முன்னிலையில் அமைதியாக அமர்ந்திருக்கிறோம். உள்ளத்தளவில் நாம் ஆண்டவரோடு பேசுகிறோம். இந்த உணர்வுகளோடு பேசுவதோடு நாம் நின்றுவிடக்கூடாது. அதையும் கடந்து நாம் இறைவனிடத்தில் செல்ல வேண்டும். உணர்வுகளைக் கடந்து நாம் கடவுளிடத்தில் எப்படி செல்வது? வார்த்தைகள் வழியாக நாம் கடவுளிடத்தில் செல்ல வேண்டும்? கடவுள் நம்முடைய உள்ளத்து உணர்வுகளை, நாம் அறிவார்ந்து சிந்திக்கிற எண்ணங்களை வெளிப்படுத்துவதற்கு அருமையான வார்த்தைகளைத் தந்திருக்கிறார். கடவுள் முன்னால் அமர்ந்து, அவருடைய அன்பை நாம் அனுபவிக்கிறேன் என்று சொல்வது மட்டும் போதாது. நான் கடவுளை அன்பு செய்வது...

புதுமை வழங்கும் செய்தி

1அரசர்கள் 17: 7 – 16 மற்றவர்களுக்கு கொடுத்து உதவுகிற மனம் இருக்கிறபோது, அவர்கள் கடவுளின் நிறைவான ஆசீரைப் பெற்றுக்கொள்வார்கள் என்பதுதான் இன்றைய வாசகம் நமக்குத் தருகிற செய்தியாக இருக்கிறது. இறைவாக்கினர் எலியா சாரிபாத்துக்குச் செல்கிறார். அங்கு அவர் ஒரு கைம்பெண்ணை பார்க்கிறார். அந்த பெண்ணிடத்தில் உண்பதற்கும், குடிப்பதற்கும் கேட்கிறார். அந்த பெண் ஏற்கெனவே பஞ்சத்தின் பிடியில் இருக்கிறார். கிட்டத்தட்ட வாழ்க்கை முடிகிற தருணம். தன்னுடைய உண்மையான நிலையை இறைவாக்கினரிடத்தில் எடுத்துச் சொல்கிறார். ஆனாலும், இறைவாக்கினர் தன்னுடைய பசியை ஆற்றுவதற்கு கேட்கிறார். அவள் மறுக்கவில்லை. தன்னுடைய இயலாமை நிலையிலும், இறைவாக்கினரின் வார்த்தைகளுக்கு செவிமடுக்கிறார். அங்கே ஒரு புதுமை நிகழ்கிறது. இந்த புதுமை இங்கே நிகழ்வதற்கு என்னென்ன காரணங்கள் என்பதைச் சிந்தித்துப் பார்ப்போம். முதலில் புதுமை நிகழ்வது கடவுளின் திருவுளத்தைக் குறிப்பதாக இருக்கிறது. ஆண்டவரது வாக்கு எலியாவுக்கு வந்தபோது, அனைத்தும் அவருக்கு தெளிவாக விளக்கப்படுகிறது. சாரிபாத்தில் இருக்கிற ஒரு கைம்பெண்ணிடத்தில் அவருடைய உணவுக்கு...

நன்றியுள்ள உள்ளம்

ஓசேயா 8: 4 – 7, 11 – 13 தன்னுடைய மணமகளாக தேர்ந்து கொண்ட இஸ்ரயேல், வேற்றுத் தெய்வங்களை வழிபட்டு, அவர்கள் பின் சென்று, தன்னுடைய மணமகனான யாவே இறைவனுக்கு உண்மையற்று இருப்பது தான், ஓசேயா நூலின் பிண்ணனியில் சொல்லப்படுகிற செய்தியாக இருக்கிறது. இந்த நூலில் மூன்று வகையான மக்களுக்கு இறைவாக்கு உரைக்கப்படுகிறது. ஓசேயா 5: 1 – 7: குருக்கள், இஸ்ரயேல் குடும்பத்தார், அரச குடும்பத்தார். இந்த மூன்று வகையான மக்களுக்குத்தான் கடவுளின் செய்தி வழங்கப்படுகிறது. ஆக, குறிப்பிட்ட மக்களுக்கு அல்ல, எல்லாருமே இந்த வரையறைக்குள் கொண்டு வரப்படுகிறார்கள். அரசர் என்பவர் இறைவனால் அவர்களுக்கு கொடுக்கப்படுகிறவராக இருக்க வேண்டும். அவரால் தான், உண்மையான கடவுளின் திருவுளத்திற்கு ஏற்ப, மக்களை வழிநடத்த முடியும். ஆனால், மக்களோ தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப, தங்களுக்குப் பிடித்தமானவர்களை அரசராக தேர்ந்தெடுத்து, தங்கள் விருப்பம் போல் வழிபாடுகளை மாற்றிக்கொண்டனர். இணைச்சட்டம் 4: 6, இறைவன் அவர்களுக்குக்...

இறைவனின் அளவு கடந்த அன்பு

ஓசேயா 2: 14 – 16, 19 – 20 இஸ்ரயேலுக்கும், கடவுளுக்கும் இருக்கும் உறவை திருமணம் என்கிற பந்தம் மூலமாக, இறைவாக்கினர் இங்கே வெளிப்படுத்துகிறார். இஸ்ரயேல் மணமகளுக்கும், இஸ்ரயேலின் கடவுள் அவளுடைய கணவராகவும் ஒப்பிடப்படுகிறார்கள். இஸ்ரயேல் தன்னுடைய கணவரான “யாவே” இறைவனுக்கு உண்மையாக இருக்கவில்லை. வேறு கணவர்களோடு வாழ்ந்து வருகிறார். அதாவது விபச்சாரம் செய்கிறார். இந்த உவமையானது, இஸ்ரயேல் மக்கள், வேற்றுத்தெய்வங்களை நாடிச்சென்றதைக் குறிக்கிறது. குறிப்பாக, பாகால் தெய்வத்தை அவர்கள் வணங்கி, அந்த தெய்வத்திற்கு ஆராதனையும், வழிபாடும் செலுத்தி வந்ததை இது வெளிப்படுத்துகிறது. இறைவன் அவளுக்கு வரச்செய்திருந்த துன்பத்தின்பொருட்டு, அவள் வேறு தெய்வங்களை நாடிச்சென்றிருக்கலாம். எனவே, அவளுக்குத் தேவையான அனைத்து ஆசீர்வாதங்களையும் கொடுப்பேன் என்கிற நம்பிக்கைச் செய்தியை, இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் வெளிப்படுத்துகிறார். கடவுள் எப்போதும் இஸ்ரயேல் மக்களின் நலம்விரும்பியாக இருக்கிறார் என்பது இங்கே நமக்கு தரப்படுகிற செய்தியாக இருக்கிறது. இஸ்ரயேல் மக்கள் எவ்வளவு தான் பாவங்கள் செய்தாலும், அதற்கான...

புனித தோமா – திருத்தூதர் விழா

எசாயா 52: 7 – 10 இறைவன் அருளும் மீட்பு இஸ்ரயேல் மக்கள் கடவுளின் கோபக்கனலை அனுபவித்திருக்கிறார்கள். ஒரு தலைமுறையாக அனுபவித்து வருகிறார்கள். பாபிலோனில் கைதிகளாக, தங்கள் நாட்டை இழந்து, ஆலயத்தை இழந்து, புனித எருசலேம் நகரை இழந்து, விழா கொண்டாட முடியாமல், துன்பங்களுக்கு மேல் துன்பங்களை அனுபவித்திருக்கிறார்கள். செய்த பாவங்களுக்கு கடவுளின் பார்வையில் நிச்சயம் தண்டனை உண்டு என்பதை இப்போது அவர்கள் உணர்ந்திருக்கிறார்கள். பாவங்களுக்கான தண்டனை பெற்றபின் வாழ்வு நிச்சயம் உண்டு என்பதையும் அவர்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள். ஆனால், கடவுளிடம் பேசுவதற்கான தகுதியைக் கூட அவர்கள் இழந்துவிட்டதாகவே எண்ணினார்கள். கடவுளை வான் நோக்கி பார்க்கவும் துணிவு அற்றவர்களாக விளங்கினார்கள். அவர்கள் செய்த பாவங்கள் அப்படிப்பட்டவை. இப்படிப்பட்ட துன்பமயமான நேரத்தில், அவர்கள் எதிர்பார்க்காத வண்ணம், அவர்களுக்கு மீட்புச் செய்தியை இறைவாக்கினர் எசாயா அவர்களுக்கு வழங்குகிறார். சிறைப்பிடிக்கப்பட்ட மக்கள், கைதிகளாக அடிமைத்தனத்தை அனுபவித்த மக்கள், புதிய நாளுக்கு தயாராகும்படி, இறைவாக்கினர் அவர்களுக்கு அழைப்புவிடுக்கின்றார். தங்கள்...