Tagged: Daily manna

ஆண்டவரே! நான் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தீர்

திருப்பாடல் 138: 1 – 2, 2 – 3, 7 – 8 கடவுள் நம்மோடு எப்போதும் இருக்கிறார் என்று நம்புகிறோம். அப்படிப்பட்ட நம்பிக்கைக்கு மத்தியில் திருப்பாடல் ஆசிரியரின் வார்த்தைகள் நமக்கு ஒரு சில கேள்விகளை எழுப்புகிறது. நாம் மன்றாடுகிற நாளில் மட்டும் தான், கடவுள் நமக்கு உதவி செய்வாரா? நம்மை வழிநடத்துவாரா? நாம் மன்றாடவில்லை என்றால், அவர் நமக்கு துணைநிற்க மாட்டாரா? என்ற கேள்விகள் நம் உள்ளத்தை அரிக்கிறது. இதனை எப்படி புரிந்து கொள்வது? கடவுள் மன்றாடிய நாளில் எனக்குச் செவிசாய்த்தார் என்கிற வரிகள், கடவுள் நமக்கு வழங்கியிருக்கிற சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதாக அமைகிறது. கடவுள் இந்த உலகத்தைப் படைத்து, நமக்கு வாழ்வையும் கொடுத்திருக்கிறார். எல்லாவற்றையும் கொடுத்த கடவுள், அவரே நம்மை இயக்கினால், நாம் பெற்றுக்கொண்ட வாழ்க்கைக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். எனவே, அவர் நமக்கு சுதந்திரத்தை வழங்கியிருக்கிறார். நன்மை எது? தீமை எது? என்று கற்றுக்கொடுத்திருக்கிறார். தொடக்கநூலில் நமது...

தவக்காலமே அடையாளம்

லூக் 11: 29 – 32 நாம் தவக்காலத்தை ஆரம்பித்து இன்றோடு ஒரு வாரம் ஆகின்றது. நம்மில் பல பேர் இந்த ஒரு வாரத்தில் பல வேண்டுதல்களோடும் கருத்துகளோடும் செபித்திருப்போம். சில புதுமைகளை அடையாளங்களைக் கேட்டிருப்போம். சிலருக்கு அடையாளங்கள் அரங்கேறியிருக்கும், சிலருக்கு ஏதும் நிகழாமல் இருந்திருக்கும். இன்று நம்மில் பலபேர் அடையாளங்களைத் தேடியும் புதுமைகளுக்காக அங்குமிங்கும் ஓடிக்கொண்டும் தான் இருக்கின்றோம். இயேசுவைக் காட்டிலும், போதகரின் மீது நம்பிக்கை வைத்து அலைந்தோடும் கூட்டம் தான் இன்றைய மிகப்பெரிய அவலநிலை. இப்படிப்பட்ட நமக்கு இன்றைய நற்செய்தி நல்லதொரு செய்தி. முதலில் அடையாளம் என்பது என்ன என்பதை நுட்பமாக கவனிக்க வேண்டும். அடையாளம் என்பது கண்ணுக்கு தெரிகின்ற ஒன்றின் மூலம் கண்ணுக்கு தெரியாத ஒன்றைச் சுட்டிக்காட்டுவது. எ.கா:- 1. நாம் நம் திருப்பலியில் பயன்படுத்துகின்ற தூபம், நம் செபங்களும் இத்தூபத்தைப்போல ஆண்டவரை நோக்கி எழுப்பவேண்டும் என்பதன் அடையாளமே. 2. நற்கருணைப்பேழைக்கு அருகிலிருக்கும் அணையாத விளக்கு ஆண்டவர்...

அவர் ஒரு ‘மாதிரி’

மத் 6 : 7 -15 தவக்கால ஆன்மீக முயற்சிகளில் (ஈதல், செபித்தல், நோன்பிருத்தல்) ஒன்றான செபித்தல் பற்றி இன்றைய நற்செய்தி விளக்குகிறது. ஆண்டவர் இயேசுவே நம் அனைவருக்கும் அனைத்திருக்குமான மாதிரியாக இருக்கின்றார் என்பதை அவர் கற்றுக் கொடுத்த செபத்தில் இருந்தும் நம்மால் கற்றுக் கொள்ள முடிகிறது. சில பிற சபையினர் இச்செபத்தைத் தினமும் எவ்வேளையும் சொல்லும் நம் தாய் திருஅவையினரைப் பார்த்து கேளி செய்வதுண்டு, ஏன் இவர்கள் திரும்ப திரும்ப சொல்கிறார்களென்று? இவர்கள் கேளியையும் கிண்டலையும் பார்த்து நாம் பின் வாங்கிட முடியாது. இவர்கள் இயேசுவையும் இறைவார்த்தையையும் கிண்டல் செய்கிறார்கள் என்பதே உண்மை. இயேசு கற்பித்த இச்செபமே தலை சிறந்த செபமாக இன்று உலகின் அதிக மொழிகளில் சொல்லப்படுகின்ற ஓர் முதன்மைச் செபமாகும். இதன் முதல்பகுதி, இறைவனின் இறையாட்சியை அதாவது இயேசு கண்ட கனவினை நோக்கி, இந்த உலகு உருண்டு நகர்ந்து கொண்டிருக்கிறது என்பதை எடுத்துரைக்கின்றது. இதன் இரண்டாம் பகுதி...

இயேசுவின் சாயல்

(மத்தேயு – 25 : 31-46) இன்றைய நற்செய்தி பல்வேறு கருத்துகளைத் தன்னகத்தே கொண்டிருந்தாலும், நான் உங்களோடு இரண்டு விடயங்களை மட்டும் பதிவு செய்து கொள்கிறேன். காரணம் இந்த தவக்காலம் நம்மிடையே இவ்விரண்டு மனமாற்றத்தை அழுத்தி எடுத்துரைக்கின்றது. 1. ‘எவரோ’ என்பதைவிட ‘இயேசுவே’ என்ற மனநிலை: நாம் ஒருவருக்கு உதவ முன்வந்தால் கூட நம்மில் சில சந்தேகங்கள் எழும். இவருக்குக் கண்டிப்பாக உதவ வேண்டுமா? இவர் உண்மையிலேயே துன்பத்தில் இருக்கிறாரா? இல்லை நம்மிடம் வந்து நடிக்கிறாரா? என்பது போன்ற பல கேள்விகள் எழும். இதனால் நாம் பலமுறை உதவி செய்ய முடிந்தும், உதவி செய்ய வாய்ப்புக் கிடைத்தும் உதவி செய்யாமல் விட்டிருப்போம். ஆனால் இந்த நேரங்களில் நாம் வேறு எதையும் பார்க்காமல், சிந்திக்காமல், நமது உதவிக்காகத் தேவையோடு காத்திருப்பவரை ‘எவரோ’ என்று பார்க்காமல் அவரில் இயேசுவை மட்டும் கண்டோமெனில் உடனடியாக உதவி செய்ய முடியும். 2. ‘எப்பொழுது’ என்பதைவிட ‘இப்பொழுதே’ என்ற...

ஆண்டவரே இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்

திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 10 – 11, 12, 15 இரக்கத்தின் பரிமாணங்களாக நாம் பலவற்றைப் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் பரிமாணங்களும் முக்கியமான ஒன்று மன்னிப்பு. அந்த மன்னிப்பு பற்றிதான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொதுவாக, நாம் கடவுளிடத்தில் செபிக்க வருகிறபோது, நமது மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கிறது? ஒருபோதும் மன்னிப்பிற்காக நாம் செபிப்பது கிடையாது. கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக மன்றாடுவது கிடையாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் கடவுளிடம் செபிக்கிறோம், கடவுளைப் புகழ்கிறோம். ஆக, தேவையை நிறைவேற்றுவது தான், நமது செபத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. ஆனால், இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் நாம் செபிக்க வேண்டும். அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது. இந்த திருப்பாடலை “மன்னிப்பின் பாடல்“ என்று நாம் சொல்லலாம். கடவுளின் மன்னிப்பிற்காக, கடவுளின் அருளுக்காக, தாவீது கதறிய பாடல் தான் இந்த திருப்பாடல். இந்த...