Tagged: Matha

நம்மை தேடி வரும் தேவ அன்னை…

கத்தோலிக்கத் திருச்சபை மே மாதத்தை நமது தேவ அன்னையாம் மரியன்னைக்கான வணக்க மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அன்னையின் பெயர் கொண்ட ஆலயங்களில் விசேட திருப்பலிகளும் பக்தி வழிபாடுகளும் இடம்பெற்று வருவதுடன் பங்குகளில் அன்னையின் திருச்சுரூபத்தை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. ஆலயங்களில் திருச் சுரூபங்களுக்குக் கீழே நின்று, அல்லது கண்ணாடிப் பேழைகளுக்குள் வைக்கப்பட்டுள்ள மாதாவின் திருச் சுரூபத்திற்கு முன்பாக இரு கையேந்தி மன்றாட்டுக்களை முன் வைக்கிறோம். மாறாக நம் வீட்டில் நாம் அன்னையைக் கொண்டு வந்து நம் கண் முன்னே நம் பிள்ளைகள் பெற்றோர் உறவினர் சூழ அவருக்கு வணக்கம் செய்து மகிழ்வதில் கிடைப்பது அலாதியான திருப்தியே. நம் பங்குகளில் எது எதற்கோ எல்லாம் நாம் குறை கூறி நின்றாலும் இந்த விடயத்தில் நம் பங்கின் செயற்பாட்டை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஒரு கிராமத்திற்கு மாதாவின் திருச்சுரூபம் வந்துவிட்டால் இன்று ஒருநாள் நாளை ஒரு நாள் என ஒவ்வொரு வீட்டுக்கும் அன்னையை...