Tagged: Mother Mary

மரியாளின் விண்ணேற்பு பெருவிழா & சுதந்திர திருநாள்

தாய்க்கும் தாய்நாட்டிற்கும் பெருமை சேர்ப்போம் நம் பாரதம் செழித்தோங்க வேண்டும் | Nam Bharatham [Song from our Album: விழித்திடு(Vizhitthidu)] https://www.youtube.com/watch?v=LPf9iShIwnA   நம் பாரதம் செழித்தோங்க வேண்டும் புது சரித்திரம் படைத்தேற வேண்டும் (2) போர் களங்களும் வயல் வெளிகளாகட்டும்; கொடும் ஆயுதம் ஏர் கலப்பை ஆகட்டும்(2) பூந்தோட்டமாய் இந்த பூமியே இனி பூப்போலே பூத்தாடும் அன்போடு பண்பாடும் (நம்பாரதம்) சாதி மத பேதம் யாவும் அழிந்தோட சமத்துவம் ஒன்று வேண்டும் நாடு நமதென்று நாமும் அதில் ஒன்று ஒற்றுமை ஓங்க வேண்டும் வெற்றி நமதாக வேண்டும் அமைதி செழித்தோங்க வேண்டும் (2) நித்தம் சமமென்னும் மனிதம் உயர்வென்னும் பேதங்கள் காணாமல் போகின்ற நாளாக (நம் பாரதம்) மகிழ்ந்து ஆடும் மழலைகள் மனதில ஏக்கம் ஆயிரம் (2) துவண்டு துவண்டு போனதே துள்ளும் பருவம் வீணிலே (2 ) (2) கல்வி கற்கும் வயதினில் பார சுமைகள் ஏனடா...

Joint Declaration of Pope Francis and Patriarch Kirill

(Vatican Radio)  Pope Francis and Russian Orthodox Patriarch Kirill of Moscow and All Russiamet in Havana, Cuba on Friday(12 Feb) to sign an historic joint declaration. The official English translation of the full joint declaration is below: Joint Declaration of Pope Francis and Patriarch Kirill of Moscow and All Russia “The grace of the Lord Jesus Christ and the love of God the Father and the fellowship of the holy Spirit be with all of you” (2 Cor 13:13). 1. By God the Father’s will, from which all gifts come, in the name of our Lord Jesus Christ, and with...

தெய்வீகப் பெருமை கூறும் தேவ தாயின் வணக்க மாதம்

அன்னை மரியின் தியாகத்தை சிந்திப்போம், வாழ்வில் ஏற்போம்! வைகாசி மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் மாதமாகவும் நினைவு கூறப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் காக்கின்றார் என்று பாடும் மாதமிது. மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். “அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள். பெண்ணினத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமை. சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் இந்த மே மாதம் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மாதம் முழுவதும் தினமும் மாலையில் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை சொல்லுவோம். பெண்கள் கூடுமிடங்களில் பேச்சு நிறைந்திருக்கும். மாதாவின் வாழ்வை...

ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே செபமாலை வடிவமாகி உள்ளன

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் டைட்டானிக் கப்பல் பற்றிய திரைப்படமாகும். அதில் வரும் ஒரு காட்சிக்குப் பலரும் சிறப்பிடம் கொடுத்திருக்கமாட்டோம் என்பது வெளிப்படையான உண்மைதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொணடிருந்த வேளையில் அதில் இருந்த இயேசு சபைக் குருவும் அவரருகில் இருந்த சிறார்களும் ஒன்றாகக் கூடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வியப்பான உண்மையே. கடந்த 6 நூற்றாண்டுகளாக மேற்கத்திய திருச்சபையில் மரியன்னைப் பக்தி முயற்சிகளில் செபமாலை சொல்வது முதன்மையிடம் பெறுகிறது. செபமாலை பக்தியின் மூலம் அக்டோபர் 7 ஆம் நாள் லெபான்றோவுக்கு அருகில் கிறிஸ்தவர்கள் துருக்கியரை தோற்கடித்து மாபெரும் வெற்றிபெற்றனர். அதன் நினைவாக அக்டோபர் 7 ஆம் திகதி செபமாலை அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தை கிறிஸ்தவர்கள் செபமாலையின் மாதமாக அனுசரிக்கின்றனர். ஓயாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக அருள்நிறை மந்திரத்தைச் சொல்வது சிறுவர், சிறுமியர் அல்லது வேலை இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்...

நம்மை தேடி வரும் தேவ அன்னை…

கத்தோலிக்கத் திருச்சபை மே மாதத்தை நமது தேவ அன்னையாம் மரியன்னைக்கான வணக்க மாதமாகப் பிரகடனப்படுத்தியுள்ளது. அன்னையின் பெயர் கொண்ட ஆலயங்களில் விசேட திருப்பலிகளும் பக்தி வழிபாடுகளும் இடம்பெற்று வருவதுடன் பங்குகளில் அன்னையின் திருச்சுரூபத்தை வீடுகளுக்கு எடுத்துச் செல்லும் நிகழ்வுகளும் இடம் பெறுகின்றன. ஆலயங்களில் திருச் சுரூபங்களுக்குக் கீழே நின்று, அல்லது கண்ணாடிப் பேழைகளுக்குள் வைக்கப்பட்டுள்ள மாதாவின் திருச் சுரூபத்திற்கு முன்பாக இரு கையேந்தி மன்றாட்டுக்களை முன் வைக்கிறோம். மாறாக நம் வீட்டில் நாம் அன்னையைக் கொண்டு வந்து நம் கண் முன்னே நம் பிள்ளைகள் பெற்றோர் உறவினர் சூழ அவருக்கு வணக்கம் செய்து மகிழ்வதில் கிடைப்பது அலாதியான திருப்தியே. நம் பங்குகளில் எது எதற்கோ எல்லாம் நாம் குறை கூறி நின்றாலும் இந்த விடயத்தில் நம் பங்கின் செயற்பாட்டை நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும். ஒரு கிராமத்திற்கு மாதாவின் திருச்சுரூபம் வந்துவிட்டால் இன்று ஒருநாள் நாளை ஒரு நாள் என ஒவ்வொரு வீட்டுக்கும் அன்னையை...