Tagged: Rosary

தெய்வீகப் பெருமை கூறும் தேவ தாயின் வணக்க மாதம்

அன்னை மரியின் தியாகத்தை சிந்திப்போம், வாழ்வில் ஏற்போம்! வைகாசி மாதம் வணக்க மாதமாகவும் மாதாவின் மாதமாகவும் நினைவு கூறப்படுகின்றது. நமக்கொரு தாய் இருக்கின்றார். நம்மை என்றும் காக்கின்றார் என்று பாடும் மாதமிது. மே மாதம் மாதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்ட மாதம். “அருள் நிறைந்தவளே வாழ்க ஆண்டவர் உம்முடனே” என கபிரியேல் வான தூதர் மரியாளைப் புகழ்கின்றார். (லூக் 1:28) இறைவன் வாசம் செய்ய தேர்ந்து கொண்ட திருக்கோயில் நம் தாய் மரியாள். பெண்ணினத்தின் ஆசிர்வதிக்கப்பட்ட பேரரசி நம் பிரியமுள்ள அன்னை அவளை அன்றாடம் அன்புடன் நினைத்து நெஞ்சாரப் புகழ்வது நம் எல்லோரதும் கடமை. சிறப்பாக நம் அன்னையை புகழவும் வாழ்த்தவும் இந்த மே மாதம் நமக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இம் மாதம் முழுவதும் தினமும் மாலையில் ஆலயத்தில் அல்லது நம் வீடுகளில் ஒன்றுகூடி செபமாலை மன்றாட்டுகளை அர்ச்சனைப் பூக்களாக்கி குடும்பங்களாக குழுக்களாக கூடி செபமாலை சொல்லுவோம். பெண்கள் கூடுமிடங்களில் பேச்சு நிறைந்திருக்கும். மாதாவின் வாழ்வை...

ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே செபமாலை வடிவமாகி உள்ளன

ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் டைட்டானிக் கப்பல் பற்றிய திரைப்படமாகும். அதில் வரும் ஒரு காட்சிக்குப் பலரும் சிறப்பிடம் கொடுத்திருக்கமாட்டோம் என்பது வெளிப்படையான உண்மைதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொணடிருந்த வேளையில் அதில் இருந்த இயேசு சபைக் குருவும் அவரருகில் இருந்த சிறார்களும் ஒன்றாகக் கூடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வியப்பான உண்மையே. கடந்த 6 நூற்றாண்டுகளாக மேற்கத்திய திருச்சபையில் மரியன்னைப் பக்தி முயற்சிகளில் செபமாலை சொல்வது முதன்மையிடம் பெறுகிறது. செபமாலை பக்தியின் மூலம் அக்டோபர் 7 ஆம் நாள் லெபான்றோவுக்கு அருகில் கிறிஸ்தவர்கள் துருக்கியரை தோற்கடித்து மாபெரும் வெற்றிபெற்றனர். அதன் நினைவாக அக்டோபர் 7 ஆம் திகதி செபமாலை அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகிறது. அக்டோபர் மாதத்தை கிறிஸ்தவர்கள் செபமாலையின் மாதமாக அனுசரிக்கின்றனர். ஓயாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக அருள்நிறை மந்திரத்தைச் சொல்வது சிறுவர், சிறுமியர் அல்லது வேலை இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும்...