அன்பில் ஆழமானவர் நம் இயேசுகிறிஸ்து

உலகில் உள்ள மரங்களை எல்லாம் பேனாவாக்கி,
பரந்து விரிந்திருக்கும் வானத்தை தாளாக்கி,
மேகத்தில் இருந்து பொழியும் மழைநீரை மையாக்கி,
ஜொலிக்கும் நட்சத்திரத்தை எல்லாம் என் கற்பனையாக்கி,
இப்பூமி முழுவதையும் எழுத்தாக்கி,
கடல் அலையின் சீற்றத்தை என் சிந்தனையாக்கி,
பூக்களை எல்லாம் வார்த்தையாக்கி,
மெதுவாய் தவழும் தென்றலை வரிகளாக்கி,
இதயம் என்னும் குளத்தில் என் ஆண்டவரை நினைவாக்கி,
இயேசுவின் சிலுவை பாதையை உருக்கமாக்கி,
ஆதிமுதல் அவர்செய்த செய்கைகளை ஆச்சரியமாக்கி,
இஸ்ரவேல் ஜனங்களின் வழிநடத்தலை சாட்சியாக்கி,
எனக்கு நீர் கொடுத்த ஆவியை தீபமாக்கி,
என் தலை தண்ணீரும்,என் கண்களை நீரூற்றுக்களாக்கி,
அவர் கடந்த பாதையை கண்களால் காணாத, நம்புகிற நிச்சயமாக்கி,
அவர் செய்த நன்மைகளுக்கெல்லாம் என்னையே காணிக்கையாக்கி,
அவர் செய்த தியாகத்தை எல்லாம் பெருமையாக்கி,
இயேசு சிலுவையில் சிந்தின இரத்தத்தை உண்மையாக்கி,
மண்ணான என் சரீரத்தை ஆலயமாக்கி,
அவருக்காக என் வாழ்க்கையை தியாகமாக்கி,
கிறிஸ்துவின் பாடுகளை எல்லாம் தியானமாக்கி,
என் உள்ளத்தில் அவரை உயர்ந்தவராக்கி,
அவரை அறிந்த அறிவினால் என் புத்தியை கூர்மையாக்கி,
வேத வசனங்களை எல்லாம் இயேசுகிறிஸ்துவின் படைப்பாக்கி,
ஊற்றுண்ட பரிமள தைலத்தை உகந்த வாசனையாக்கி,
அவருக்கு பயப்படும் பயத்தை எனக்கு பிரியமாக்கி,
என் பாவத்தை மன்னித்த ஆண்டவரின் கிருபையை பெரிதாக்கி,
மண்ணில் பெய்யும் பனியை எல்லாம் கவிதையாக்கி,
என்னை அழைத்த அழைப்பை முகாந்தரமாக்கி,
அவருடைய நற்செய்தியை அறிவிக்கும் அறிவிப்பில் தீவிரமாக்கி,
இயேசு எனக்காக சிந்திய இரத்தத்தை எனக்கு அபிஷேகமாக்கி,
என் இதயத்தை அவருக்கே உயிராக்கி,
என் ஆத்துமாவில் என் இயேசுவை முதல்வராக்கி,
பிறர் பசியை என் பசியாக நினைக்கும் நினைப்பை உபவாசமாக்கி,
அவர் என்மேல் வைத்த அன்பை அவருக்கே பிரியமாக்கி,
அவரின் அன்பை எழுத முயன்றேன்.ஆனால் முடியவில்லையே!!!
ஆண்டவரின் அன்பின் நீளம் எவ்வளவு?
கடவுளின் அன்பின் அகலம் எவ்வளவு?
தேவனின் அன்பின் உயரம் எவ்வளவு?
இயேசுவின் அன்பின் ஆழம் எவ்வளவு?? எவ்வளவு???
அவரால் படைக்கப்பட்ட மனுகுலமே!!! அவரது
அன்பின் ஆழத்தை அறிந்தவர் உண்டோ??????????
இயேசுகிறிஸ்துவின் அன்பை எதைக்கொண்டு எழுத முடியும்???
அவரின் அன்பின் ஆழத்தை ஒவ்வொருவரும் ருசிக்க வேண்டுமாய்
விரும்பி, வேண்டி, ஜெபிக்கிறேன்.
அவரின் அன்பு ஆச்சரியம்!
அவரின் அன்பு அதிசயம்!!
அவரின் அன்பு அற்புதம்.!!!.
என்றென்றும் மாறாது.
ஆமென், அல்லேலூயா!!!..
(credits : Mrs. Saraswathy Chinnadurai)

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: