நல்ல ஆயன் நம் ஆண்டவர்

அன்பானவர்களே! நம் ஆண்டவராகிய கிறிஸ்து இயேசுவின் இனிய நாமத்தில் என் அன்பின் நல்வாழ்த்துக்கள். உயிருள்ள யாவருக்கும் நல்ல ஆயனாய் நம்மை வழிநடத்தும் நம் ஆண்டவரை பற்றிக்கொண்ட யாவரும் எவ்வளவு விசேஷித்தவர்கள் தெரியுமா? அவர் நமக்காக
எப்படியெல்லாம் வழக்காடுகிறார் பாருங்கள்.
ஆண்டவரே என் ஆயர்: எனக்கேதும் குறைவில்லை. திருப்பாடல்கள் 23 :1 . நாம் சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடந்தாலும் நம் ஆயர் நம்மோடு இருந்து நம் எதிரிகளின் கண்முன்னே நமக்கு ஒரு விருந்தை ஏற்பாடு செய்து நம் வாழ்நாளெல்லாம் அவருடைய இல்லத்தில் வாழ்ந்திருக்கும்படி செய்கிறார். திருப்பாடல்கள் 23 :4-6.
அதுமட்டுமல்ல, அவருடைய மந்தையாகிய நம்மை அவர் ஏற்பாடு செய்திருந்த ஆயர்கள் மந்தையாகிய நம்மை ஒழுங்காக மேய்ப்பதில்லை, திடப்படுத்தவில்லை, பிணியாளிகளை குணமாக்கவில்லை, காயமுற்றோருக்கு கட்டுப்போடவில்லை, வழி தப்பியவற்றை திரும்ப
கூட்டி சேர்க்கவில்லை, காணாமல் போனவற்றை தேடவில்லை என்று நமக்காக வழக்காடுகிறார். எசேக்கியல் 34:3,4 மற்றும் அந்த அதிகாரம் முழுவதையும் படித்தீர்களானால் அவரின் அன்பை
யும், தன் மந்தையை காக்க அவர் செய்யும் செயல்களையும் நாம் அறிந்துக்கொள்ளலாம்.
அன்பானவர்களே இப்படியான கடவுளை நாம் அறிந்திருக்கிறபடியால் மற்றவர்களைப்போல நாம் எதற்கும் கவலைப்படவோ, அஞ்சவோ தேவையில்லை. நம்மை அவர் விசாரிக்கிறவராய் இருக்கிற படியால் உங்கள் துக்கம், கவலை யாவற்றையும் அவர் பாதத்தில் வைத்து
விட்டு நாம் சந்தோஷமாக இருப்பதையே விரும்புகிறார். 1 பேதுரு 5: 7 .
ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள். உங்கள் அண்மையில் தான் இருக்கிறார். நன்றியோடு கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும் கடவுளிடம் உங்கள் விண்ணப்பத்தை தெரிவித்து கிறிஸ்துவோடு இணைந்துக்கொள்ளுங்கள். அவர்
உங்களை எல்லாவற்றிலும் இருந்து பாதுகாப்பார். பிலிப்பியர் 4:4-7.
ஜெபம் :
அன்பின் நல்ல ஆயரே எங்கள் இதயத்தில் வாசம் செய்பவரே உம்மை துதிக்கிறோம். நன்றிபலி செலுத்துகிறோம். உம்முடைய மந்தையாகிய எங்களை நீரே மேய்த்து பசும்புல் உள்ள இடங்களில்
நடத்திச் செல்லும். கண்ணின் மணியைப்போல் பாதுகாத்துகொள்ளும். எல்லா மகிமையும், உம் ஒருவருக்கே செலுத்துகிறோம்,  நல்ல ஆயரே!! ஆமென்,அல்லேலூயா!!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: