யார் பெரியவர்.

என்றும்போல் அன்றும் விடியக்காலத்தில் சரளா எழுந்து வந்து வாசற்கதவை திறந்தாள். அப்பொழுது திண்ணையில் மூன்று வழிப்போக்கர்கள் [வயதானவர்கள்] உட்கார்ந்து இருந்தார்கள். சரளாஅவர்களைப் பார்த்து ஐயா!உங்களுக்கு என்ன வேண்டும், ஏன் இங்கே உட்கார்ந்து இருக்கிறீர்கள் என்று கேட்டாள் .

அவர்கள் அவளிடம் அம்மா,நாங்கள் தூர தேசத்திலிருந்து வருகிறோம். இராமுழுதும் நடந்து வந்ததால் சிறிது களைப்பாக உள்ளது. அதனால் சிறிது நேரம் இங்கே உட்கார்ந்து இளைப்பாறிவிட்டு செல்லலாம் என்று நினைத்து இங்கே உட்கார்ந்து இருக்கிறோம். இதோ நன்கு
விடிந்ததும் அருகில் உள்ள டீ கடைக்கு சென்று டீ அருந்திவிட்டு பக்கத்து கிராமத்துக்கு செல்கிறோம்,என்று சொன்னார்கள்.

உடனே சரளா ஐயா!உங்களுக்கு விருப்பம் இருந்தால் நான் டீ போட்டு தருகிறேன். நீங்கள் அருந்திவிட்டு செல்லுங்கள். நீங்கள் என் அப்பா மாதிரி இருக்கிர்கள் என்று சொன்னாள்.

அதற்கு அவர்கள் உன்னிடம் டீ வாங்கி குடிக்க வேண்டும் என்றால் உன் வீட்டுக்குள் வரவேண்டும் என்றால் எங்களில் யாரை முதலில் அழைப்பாயோ, அதைவைத்துதான் நாங்கள் உள்ளே வருவோம் என்று சொன்னார்கள். நாங்கள் மூவரும் ஒவ்வொரு குணாதிசயம் கொண்டவர்கள். நாங்கள் முறையே அன்பு, செல்வம், வீரம் என்ற குணாதிசயத்தை கொண்டுள்ளதால் உனக்கு யார் வேண்டும் யாரை முதலில் அழைப்பாய் என்ற கேள்வியுடன் சரளாவைப் பார்த்தார்கள்.

சரளாவுக்கு இக்கட்டான சூழ்நிலை,என்ன செய்வது? யாரை அழைப்பது? கடவுளே இக்கட்டான இந்த நிலையில் நீரே எனக்கு போதித்து வழி நடத்தும் என்று மனதிற்குள் சிறு ஜெபம் செய்து விட்டு அன்பை அழைத்தாள் . உடனே மூவரும் உள்ளே நுழைந்தனர். அப்பொழுது சரளா நான் அன்பைத்தானே அழைத்தேன். நீங்கள் மூவரும் வருகிறீர்களே என்று கேட்டாள். அதற்கு அவர்கள் மகளே நீ முதலில் அன்பை அழைக்காமல் செல்வத்தையோ அல்லது வீரத்தையோ அழைத்திருந்தால் நாங்கள் யாரும் உன் வீட்டுக்குள் வந்திருக்க மாட்டோம். ஆனால் நீ அன்பை அழைத்ததால் நாங்கள் மூவரும் வருகிறோம். ஏனெனில் செல்வம், வீரத்தைவிட அன்பே பெரியது என்றார்கள். அதனால்தான் கடவுளும் அன்பாகவே இருக்கிறார். 1 யோவான் 4:8. அன்பில்லாமல் தன் உடலை சுட்டெரிக்க கொடுத்தாலும் அதில் பிரயோஜனம் இல்லை. 1 கொரிந்தியர் 13:3

(Written by :- Sara, MyGreatMaster.com

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.