ஒரே கடவுளாகிய இயேசுகிறிஸ்துவை அறிவதே நிலைவாழ்வு

விண்ணையும், மண்ணையும், கடலையும் அவற்றிலுள்ள அனைத்தையும் உண்டாக்கிய வாழும் கடவுளிடம் திரும்புங்கள் என்ற நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறோம். கடந்த காலங்களில் அவர் அனைத்து மக்களினங்களையும் அவரவர் வழிகளில் நடக்கும்படி விட்டிருந்தார். என்றாலும் அவர் தம்மைப்பற்றிய சான்று எதுவும் இல்லாதவாறு விட்டு விடவில்லை ஏனெனில் அவர் நன்மைகள் பல செய்கிறார். வானிலிருந்து மழையைக் கொடுக்கிறார். வளமிக்க பருவ காலங்களைத் தருகிறார். நிறைவாக உணவளித்து உங்கள் உள்ளங்களை மகிழ்ச்சி பொங்கச் செய்
கிறார்.திருத்தூதர் பணிகள் 14:15,16,17.

இப்படிப்பட்ட தேவனை அறிந்துக்கொள்வது எத்தனை அவசியம்! உண்மையான ஒரே கடவுளாகிய அவரை அறிந்து அவர் அளிக்கும் நிலைவாழ்வை பெற்றுக்கொள்வோம். உலகம் தோன்றுமுன்னே தந்தை இயேசுவை மாட்சிப்படுத்தியுள்ளார். இந்த உலகிலிருந்து தேர்ந்தெடுத்து என்னிடம் ஒப்படைத்த மக்களுக்கு நான் என் பெயரை வெளிப்படுத்தினேன். உமக்கு உரியவர்களாய் இருந்த அவர்களை நீர் என்னிடம் ஒப்படைத்தீர். அவர்களும் உம் வார்த்தைகளை கடைபிடித்தார்கள்.

உம்மிடமிருந்து வந்தேன் என்பதை உண்மையில் அறிந்துக்கொண்டார்கள். நீரே என்னை அனுப்பினீர் என்பதையும் நம்பினார்கள். அவர்களுக்காக நான் வேண்டுகிறேன். உலகிற்காக அல்ல மாறாக நீர் என்னிடம் ஒப்படைத்தவர்களுக்காகவே வேண்டுகிறேன். அவர்கள் உமக்கு உரியவர்கள். என்னுடையது எல்லாம் உம்முடையதே. உம்முடையதும் என்னுடையதே. அவர்கள் வழியாய் மாட்சி பெற்றிருக்கிறேன். இனி நான் உலகில் இருக்கப்போவதில்லை அவர்கள் உலகில் இருப்பார்கள் தூய தந்தையே நாம் ஒன்றாய் இருப்பதுபோல அவர்களும் ஒன்றாய் இருக்கும்படி நீர் எனக்கு அளித்த உம் பெயரின் ஆற்றலால் அவர்களைக் காத்தருளும். நன்கு பாதுக்காத்தேன். நான் உலகை சேர்ந்தவன் அல்லாததுபோல அவர்களும் உலகை சார்ந்தவர் அல்ல.

உண்மையிலேயே அவர்கள் உம்முடையவர்கள். நீர் எனக்குள்ளும் நான் உம்முள்ளும் இருப்பதுபோல அவர்களும் ஒன்றாய் இருப்பார்களாக! என்று நமக்காக நம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தமது தந்தையிடம் பரிந்துரை செய்து நமக்காக நாம் அவரை அறிகிற அறிவினால் நிறையும்படிக்கு வேண்டுதல் செய்து நம்மைக் காத்து வழிநடத்துகிறார்.

ஜெபம்

அன்பின் இறைவா, நீர் எங்களுக்காக உமது தந்தையிடம் பரிந்துரை செய்து எங்கள் தேவைகள் யாவையும் நிறைவேற்றி இதுவரை காத்து வந்தீர் இனிமேலும் எங்களை உமது கிருபையால் தாங்கி காத்து வரப்போகிறதற்காய் உமக்கு கோடி நன்றி சொல்லுகிறோம். உம்மை அறிந்து உம்மையே பற்றிக்கொள்ள மனுபுத்திரர் யாவருக்கும் போதித்து வழிநடத்தும். இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் பிதாவே,ஆமென்! அல்லேலூயா!!.

You may also like...

Leave a Reply

%d bloggers like this: