பக்தி வழியில் மட்டுமல்ல, அன்பின் வழியிலும் நடப்போம்.

கர்த்தருக்குள் அன்பான சகோதரர், சகோதரிகளுக்கு நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் இரவு தனித்திருந்து தமது பிதாவை நோக்கி வேண்டுதல் செய்கிறார். பகல் முழுதும் ஒவ்வொரு ஊராகச் சென்று மக்களை சந்தித்து ஆறுதல் அளித்து அவர்கள் நோய்களை சுகமாக்கி, பிசாசுகளை துரத்தி ஒவ்வொரு மனிதனின் தேவைகளையும் நிறைவேற்றினார் என்று வாசிக்கிறோம். நாமும் அவர் காட்டிய வழியில் நடப்போம். வெறுமனே ஜெபம் செய்வதை மட்டும் செய்யாமல் அவர்களின் தேவைகளை அறிந்து நம்மால் இயன்ற வரை உதவிக்கரம் நீட்டுவோம்.

ஆண்டவரே, ஆண்டவரே என்று சொல்பவர் எல்லாம் விண்ணரசுக்குள் செல்வதில்லை. மாறாக விண்ணுலகிலுள்ள என் தந்தையின் திருவுளப்படி செயல்படுபவரே செல்வர். அந்நாளில் பலர் என்னை நோக்கி ஆண்டவரே, ஆண்டவரே உமது பெயரால் நாங்கள் இறைவாக்கு உரைக்கவில்லையா? உமது பெயரால் நாங்கள் பேய்களை ஓட்டவில்லையா, உமது பெயரால் வல்ல செயல்கள் பல செய்யவில்லையா என்பர். அதற்கு நான் அவர்களிடம் உங்களை எனக்கு தெரியவே,தெரியாது. நெறிகேடாகச் செயல்படுபவரே, என்னை விட்டு எல்லாரும் அகன்று போங்கள்’என வெளிப்படையாக அறிவிப்பேன். என்று கூறுகிறார்.மத்தேயு 7 – 21,22.

சிலபேர் வசனத்தை நன்கு போதிப்பார்கள். ஆனால் அவர்களிடம் அன்பு இருக்காது. இதற்காகவே கடவுள் நாம் எல்லாவற்றிலும் அவரின் வழியில் நடக்க வேண்டுமாய் நமக்கு பல அறிவுரைகளை எழுதி கொடுத்துள்ளார். அவரின் அன்பின் மகத்துவத்தை உணர்ந்துக் கொள்ள வேண்டுமாய் தமது ஜீவனையும் நமக்கு தந்தருளி இவ்வளவாய் நம்மிடம் அன்புக்கூர்ந்தார்.

நாம் மானிடரின் மொழிகளையும்,வானதூதரின் மொழிகளிலும் பேசினாலும் அன்பு எனக்கிராவிட்டால் ஒலிக்கும் வெண்கலமும், ஊசையிடும்தாளமும் போலாவேன். இறைவாக்கு உரைக்கும் ஆற்றல் இருந்தாலும் மறைப்பொருள்கள் அனைத்தையும் அறிந்தாலும் அறிவெல்லாம் பெற்றிருந்தாலும் மலைகள் இடம் பெயரும் அளவுக்கு நம்பிக்கை கொண்டிருந்தாலும், அன்பு இல்லை என்றால் நாம் ஒன்றுமில்லை. நமது உடமைகளை வாரி வழங்கினாலும் நமது உடலையே சுட்டெரிப்பதற்கு கொடுத்தாலும் அதில் அன்பு இல்லை என்றால் நாம் கொடுப்பது யாவும் வீணே. நாம் ஒருவரோடுருவர் அன்பு கொண்டாலே பக்தி தானே வரும்.அன்பு எல்லாப் பாவங்களையும் போக்கும். ஆகையால் பக்தியோடு மாத்திரம் அல்லாமல் அன்பின் வழியிலும் நடந்து நமது ஆண்டவரின் திவுளத்தை நிறைவேற்றுவோம்.

ஜெபம்.

அன்பே உருவான இறைவா!உம்மைப்போல் வாழ கற்றுத்தாரும். வெறும் பக்தியை மட்டும் கைக்கொள்ளாமல் அன்பின் வழியிலும் நடந்து உமது திருவுள சித்தத்தை நிறைவேற்றி உமக்கே மகிமை செலுத்திட உதவி செய்யும்.இயேசுவின் நாமத்தில் மன்றாடுகிறோம். எங்கள் ஜீவனுள்ள பரம தந்தையே!ஆமென்!! அல்லேலூயா!!!

You may also like...

Leave a Reply

%d bloggers like this: