ஜெயமோ [வெற்றியோ] கர்த்தரால் வரும்

அன்பான மாணவ,மாணவிகளே! கண்மணிகளே!! உங்கள் அனைவருக்கும் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் இனிய நாமத்தில் அன்பின் நல்வாழ்த்துக்கள்.

அன்பான செல்லங்களே! இந்த வருஷம் பொது தேர்வு எழுதும் உங்கள் ஒவ்வொருவருக்காகவும் எங்களுடைய MyGreatMaster.com  இணைய தளம் மூலம் ஜெபம் ஏறேடுக்கிறோம். நீங்கள் எந்த கவலையும் படாமல் நன்கு பரீட்சை எழுதுங்கள். முடிவை பற்றி கவலைப்படாதீர்கள். ஜெயம் கொடுக்கும் நம்முடைய ஆண்டவர் உங்கள் ஒவ்வொருவருடன் கூடவே இருந்து உங்களுக்காக தமது தூதர்களை அனுப்பி நீங்கள் எழுதும் ஒவ்வொரு கேள்வியின் பதிலை உங்களுக்கு நன்றாக ஞாபகம் வரும்படி அருள்செய்வார்.

நீங்கள் ஒவ்வொருநாளும் படிக்கும் பொழுது உங்களுக்கு புரியாத கேள்விகளை ஆண்டவரின் கரத்தில் ஒப்புக்கொடுங்கள். அவர் உங்களுக்கு எளிதாக புரிய வைத்து, பதில் உங்கள் மனதை விட்டு நீங்காத படிக்கு காத்துக்கொள்வார். குதிரை யுத்த நாளுக்கு ஆயத்தமாக்கப்படும். ஜெயமோ கர்த்தரால் வரும். [நீதிமொழிகள் (பழமொழி ஆகமம்) 21:31] .ஆதலால் ஆண்டவர் பேரில் உங்கள் பாரத்தை போட்டுவிட்டு நீங்கள் நிம்மதியாக எழுதுங்கள். நமக்குள் வல்லமையாக செயல்படுபவரும், நாம் நினைப்பதற்கும், வேண்டுவதற்கும் அதிகமாய் அனைத்தையும் செய்யும் நம்முடைய இயேசுகிறிஸ்து உங்களுடன் கூடவே இருக்கிறார் என்பதை மறக்கவேண்டாம். [எபேசியர் 3 :20].

அன்புக்குழந்தைகளே! இந்த வருஷம் நீங்கள் ஒரு அதிசயத்தை காணும்படி ஆண்டவர் உங்களுக்கு கிருபை அளிப்பார். நம்முடைய அறிவை நம்பாமல் முற்றிலும் அவரையே சார்ந்துக்கொள்ளுங்கள். நீங்கள் உங்கள் வகுப்பில் சுமாரான மார்க் வாங்கியிருக்கலாம். ஆனால் பொது தேர்வில் நிச்சயம் ஒரு அதிசயம் காணும்படி ஆண்டவர் உங்களுக்கு உதவி செய்வார். என்னை நோக்கி கூப்பிடு அப்பொழுது உனக்கு எட்டாத பெரிய காரியத்தை உனக்கு அருள் செய்வேன் என்று சொல்கிறார். மறைபொருள்களையும் உங்களுக்கு விளக்கி காண்பிப்பார். [எரேமியா 33:3].

ஆகையால் நீங்கள் ஒன்றுக்கும் கவலைப்படாமல் எல்லாவற்றிலும் நம் ஆண்டவருக்கு நன்றியோடு  கூடிய இறைவேண்டல், மன்றாட்டு ஆகிய அனைத்தின் வழியாகவும்,கடவுளிடம் உங்கள் விண்ணப்பங்களை தெரியப்படுத்துங்கள். [பிலிப்பியர் 4:6]. நீங்கள் பெற்ற அதிசயத்தை எங்களுக்கு தெரியப்படுத்துங்கள். நாங்களும் உங்களோடு சேர்ந்து ஆண்டவரை மகிமைப்படுத்துகிறோம்.

பெலன் உள்ளவனுக்காகிலும், பெலன் அற்றவனுக்காகிலும் உதவி செய்வது ஆண்டவருக்கு இலேசான காரியம். நம்முடைய பெலத்தினால் அல்ல, பராகிரமத்தினால் அல்ல, தூய ஆவியால் எல்லாம் நமக்கு கிடைக்கும். [2 குறிப்பேடு (நாளாகமம்) 14:11] ,[செக்கரியா 4:6]. ஆகிய வசனங்களில் வாசிக்கிறோம். ஆண்டவரின் வார்த்தையாகிய வாக்கு ஒருநாளும் வெறுமையாய் திரும்பி வராது. நீங்கள் எசாயா 55:11 ல் இவ்வாறு வாசிக்கலாம். கடவுளின் வாயிலிருந்து புறப்பட்டுச் செல்லும் வாக்கு, அவரின் விருப்பத்தை செயல்படுத்தி, எதற்காக வாக்கை அனுப்பினாரோ அதை வெற்றிகரமாக நிறைவேற்றாமல் வெறுமையாய் திரும்பி அவரிடம் வராது என்று பார்க்கிறோம்.

என் அன்புக்குழந்தைகளே நீங்கள் ஒவ்வொருநாளும் தேர்வுக்கு போகும் முன் இதை வாசித்து மனதில் தியானித்து நம்பிக்கையோடு செல்லுங்கள். நிச்சயம் ஒரு அதிசயத்தை, அற்புதத்தை காண்பீர்கள்.

ஜெபம்

பரம தகப்பனே, நீர் எங்களுக்காக உண்டு பண்ணி வைத்திருக்கிற ஆசீர்வாதத்திற்காக உம்மை நன்றியோடு ஸ்தோத்தரிக்கிறோம். எங்களுக்கு வேண்டிய அறிவையும், ஞானத்தையும், கொடுத்ததற்காய் உமக்கு நன்றி அப்பா. எங்கள் போக்கிலும், வரத்திலும்,கூடவே இருந்து காத்துக் கொள்ளும். இந்த தேர்வை நன்கு எழுதி உமது பிள்ளைகளாகிய நாங்கள் உமது நாமத்திற்கு மகிமை சேர்க்க இரக்கம் காட்டும். உமது அன்பும்,பேரன்பும் எங்களுக்கு இப்பொழுதும், எப்பொழுதும் உண்டாகட்டும். ஆமென்!! அல்லேலூயா!!!

(Written by:- Sara, MyGreatMaster.com)

You may also like...

1 Response

  1. charles says:

    pls pray for stud 10

Leave a Reply

%d bloggers like this: