Bible Quiz (English / Tamil)    |    Bible    |    Songs   |    Rosary   |    FM   |    About   |    Contact  |   Home   RSS Feed Subscribe via Email SoundCloud YouTube Facebook

விவிலிய வினாடி வினா போட்டி

ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டியில் பங்கு பெறலாம். எல்லா போட்டி தொடரிலும் ஒரே ஈமெயில் ID உபயோகிக்கவும் . ஒவ்வொரு மாத இறுதியிலும் சரியான விடைகளும், பங்குபெற்றோரின் விபரமும் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.

விவிலிய வினாடி வினா - 14 (பிப்ரவரி- 2016 )
வேதாகமப் பகுதி : நீதித் தலைவர்கள் 13 to 21 வரை

1. சோரேக்குப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து வந்த ஒரு பெண்ணின் பெயர் என்ன?
விலைமாது
காசா ஊரைச் சேர்ந்தவள்
தெலீலா

2. நீ மலடியாய் இருந்ததால் இதுவரை குழந்தை பெற்றெடுக்கவில்லை.யார் அவள்?
சாராள்
மனோவாகு மனைவி
அன்னாள்

3. அந்நாள்களில் இஸ்ரயேலுக்கு அரசன் கிடையாது.ஒவ்வொருவரும் அவரவர் பார்வையில் நேர்மை எனப்பட்டதைச் செய்து கொண்டிருந்தனர் என்று எந்த அதிகாரத்தில் வாசிக்கிறோம்?
21 ம் அதிகாரம்
14 ம் அதிகாரம்
17 ம் அதிகாரம்

4. லேவியராகிய ஒருவர் ஒரு கத்தியால் தம் மறுமனைவியின் உடலை எத்தனை துண்டுகளாக வெட்டி, இஸ்ரயேலின் எல்லா பகுதிக்கும் அனுப்பி வைத்தார்?
12 துண்டுகள்
10 துண்டுகள்
3 துண்டுகள்

5. இன்று இஸ்ரயேலிலிருந்து ஒரு குலம் துண்டிக்கப்பட்டுவிட்டது.அது எந்த குலம் என்று வாசிக்கிறோம்?
யூதா குலம்
லேவி குலம்
பென்யமின் குலம்

6. எனது பெயரை ஏன் கேட்கின்றாய்? அது வியப்புக்கு உரியது. இது யார் கூற்று?
கடவுள்
ஆண்டவரின் தூதர்
ஆண்டவர்

7. தாண் குலத்தோர் அறுநூறு பேர் போர்க்கோலம் தாங்கி எந்த,எந்த, ஊரிலிருந்து புறப்பட்டு சென்றனர்?
சோராவிலிருந்தும்,எசத்தாவோலிருந்தும்
எப்ராயிம் மலைநாட்டிலிருந்து
கிரியத்திலிருந்தும் , சோராவிலிருந்தும்

8. ஆண்டவரின் ஆவி ஆற்றலுடன் அவர்மீது இறங்கியது.யார் மீது என்று வாசிக்கிறோம்?
இளைஞர்கள் மீது
மனோவாகு
சிம்சோன்

9. தாண் தொடங்கிப் பெயர்செபா வரையிலும், கிலயாது நாட்டிலும் இருந்த மக்கள் ஒரே கூட்டமைப்பாக ஆண்டவர் திருமுன் எங்கே ஒன்று கூடினர்?
பெயர்செபா
மிஸ்பா
கிலயாது

10. பென்யமின் மக்களுள் மடிந்தோரின் எண்ணிக்கை மொத்தம் எவ்வளவு பேர்?
25,000 பேர்கள்
18,000 பேர்கள்
20,000 பேர்கள்

11. உம்மிடமிருந்து _________________ வெள்ளிக்காசுகள் திருடப்பட்டதைப் பற்றி என் காதுபடச் சபித்துக் கூறினீரே !!
1000 வெள்ளிக்காசுகள்
1100 வெள்ளிக்காசுகள்
1110 வெள்ளிக்காசுகள்

12. அவளுடைய இளைய சகோதரி அவளைவிட அழகாக இல்லையா என்று சொன்னது யார்?
சிம்சோனின் மனைவி
பெலிஸ்திய வாலிபன்
சிம்சோனின் மாமனார்

13. எதில் உமது பெரும் வலிமை உண்டாயிருக்கிறது என்று தெலீலா சிம்சோனிடம் கேட்ட பொழுது எத்தனை தடவை பொய் சொன்னான்?
3 தடவை
2 தடவை
4 தடவை

14. சிம்சோன் எத்தனை நரிகளை பிடித்தார்?
400
300
200

15. கழுதையின் பச்சை தாடை எலும்பைக் கொண்டு சிம்சோன் எத்தனை பேரைக் கொன்றான்?
100 பேரை
200 பேரை
1000 பேரை




Free counters!